பக்கம்:சித்தி வேழம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமளக் கொழுந்து . 105 யென்று செல்வான். இப்படிப் பிரிந்து செல்லும் பாலே நிலச் செலவை யுடையவனே விடலை என்று சொல்வார்கள். பாலை நிலத்தில் சிறிதும் ஈரம் இல்லாதது போல விடலேயின் நெஞ்சிலும் ஈரம் இல்லாமல் இருக்கும். பெண்ணின் துயரத் தைச் சிறிதும் அறியாத கொடுமையை நெஞ்சிலே உடைய வன் விடலே. முருகனும் பெண்ணின் உள்ளத்துயரை அறியாத விடலேதானே? எல்லாப் பெண்களுக்குமா அவன் விடலேயாக இருப்பவன்? அன்னை சற்றே யோசனையை நிறுத்தினுள். அவளுடைய தோழி அப்போது வந்து சேர்ந்தாள். 'என்ன குருட்டு யோசனை செய்துகொண்டிருக்கிருப்?” என்று கேட்டாள். sr r - "என் மகளுடைய நிலையை எண்ணிக் கவலேயில் ஆழ்ந் திருக்கிறேன்' என்ருள் அன்ன. - 'கவ&ல ஏன்?' • அவள் தான் நினைத்தவற்றை யெல்லாம் எடுத்துச் சொன்னுள். "நன்ருக இருக்கிறது உன் சிந்தன: கோயிலையும் பொழிலேயும் எண்ணி உடனடியாகப் பாலே நிலத்தையும் விடலையையும் கினைக்கிருயே: இங்கிருந்து அங்கே எப்படித் தாவியது உன் மனம்' "மனம் குரங்கு அல்லவா? அதனல் தாவுகிறது.” "பால நிலத்திலே பொருளின்மேற் பற்றுடையவனகிப் போகும் ஒருவனையும் முருகனையும் ஒன்ருக எண்ணுகிருயே! பைத்தியம் பிடித்துவிட்டதோ, உனக்கு' "என் கவலை எனக்குத் தெரியும்!" - 'எனக்குக்கூடத் தெரியும்; ஆனல் கவலேயில் நீ நினைக்க வேண்டியதை நினைக்காமல், சம்பந்தம் இல்லாதவற்றை எண்ணி வேதனைப்படுகிருய்.' .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/111&oldid=825710" இலிருந்து மீள்விக்கப்பட்டது