பக்கம்:சித்தி வேழம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமளக் கொழுந்து 107 "அது மட்டுமா அவன் குடும்பம் எத்தகையது தெரி யுமா? நெற்றியிலே கண் படைத்த முக்கட்பிரான் அல்லவா அவனுடைய தந்தையார்? வளைவான குஞ்சியையும் பிறையை அணிந்த சடையையும் உடைய சிவபெருமானப் பற்றி அறியாதார் யார்? அவருடைய பிள்ளே முருகன். அவன் எவ்வளவு கருணையை யுடையவன்! மென்மையானவன்; முருகனைப் போன்ற கோமள மூர்த்தியை எங்காவது பார்க்க இயலுமா? கொழுந்துபோல இளமையும் எழிலும் உடைய அந்தக் கோமள மனத்தனே விடல யென்று சொல்லலாமா?” அன்னே தன் கினேவையும் தன் தோழி கூறியவற்றை யும் ஒருங்கே வைத்து எண்ணுகிருள்: மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர் வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே? விடலையே எவர்க்கும்?ம்ெய் அன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சட்ை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே, இறைவனிடத்தில் மெய்யான அன்பையுடையவரும், தெளிந்த அறிவை யுடைய வைதிகருமாகிய பெரியோர் வாழ்கின்ற திரு. விடைக்கழியில் அழகிய குராமரத்தின் கிழலின்கீழ் கின்றவனும்: சுருண்ட கேசத்தையும் பிறையை அணிந்த சட்ைமுடியையும் மூன்று கண்களேயும் உடைய சிவபெருமானுடைய மென்மையான கொழுந்து போன்ற பிள்ளேயாகிய முருகன், யாவரும் தன் சிறப்பை நோக்கி வியப்படைந்து தங்கும் கோயிலும் வளம் மல்கிய குன்றிலே வளரும் பொழிலைப் போன்ற பொழில்களும் வளர்கின்றதும், மகிழ்ச் சிக்கு இடமாவதுமாகிய திருப்பிடவூரில் உள்ள, அஞ்சிய மானின் விழியைப் போன்ற விழிகளே உடைய மங்கையருக்கு அருள் செய்யா மல் விடுவானே? அவன் எல்லாருக்குமே கொடிய மனம் படைத்த விடலையோ? பொதுவாக வெருண்ட மான்விழியார்க்கு என்று சொன்னலும், அவள் தன் மகளேயே உள்ளத்தில் எண்ணினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/113&oldid=825712" இலிருந்து மீள்விக்கப்பட்டது