உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கன் லாக்குவதிலும், பொதுச் செயல்முறைகளிலும் நூலக அலு வலர்கள் காட்டும் ஈடுபாடும், திறமையும் இந்நூலகத்திற்கு இப்பெருமையைத் தேடித் தந்திருக்கின்றன. நூல்களை வழங்குவதிலும், நூலகம் பற்றிய தகவல் களைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதிலும் நூலக அலு வலர்களுக்குத் தனிப் பயிற்சி அளிக்கும் முறையை முதன் முதலாக வீலர் கையாண்டார். 1928-இல் இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களுக்குத் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தப் பயிற்சி வகுப்புகள் 18 ஆண்டுகள் நடந்து வந்தன. இதன் மூலம் நூலக அலுவல்களில் நல்ல தேர்ச்சியும், ஆர்வமும் வாய்ந்த ஏராளமான அலுவலர்கள் இந்நூலகத்திற்குக் கிடைத் தார்கள். நாட்டின் பல பகுதிகளில் நூலகர் பயிற்சிக் கல்லூரிகளும், பள்ளிகளும் ஏற்படும் வரை இந் நூலகம் தனது அலுவல்ர்களுக்குத் தானே பயிற்சி வகுப்புகளே நடத்தி வந்தது. பிறகு இவ்வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், நூலகவியயில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, இங்கு நூலகர்களாக நியமிக்கப்பட்டார்கள். அலுவலர் பயிற்சி நூலகர் பயிற்சிப் பள்ளிகளில் பட்டம் பெற்ற பட்ட தாரிகள், பிராட் நூலகத்தில் வேலை பெறுவதற்குப் போட்டி போட்டுக்கொண்டு முன் வந்தார்கள். இதற்கு இங்குள்ள சிறந்த பயிற்சி வசதியே காரணம். நூலக வேலையில் இங்கு சிறந்த முறையில் அனுபவம் பெறுவதன் மூலம், பலருக்கு உயர்ந்த பதவிகள் எளிதிலும் விரைவிலும் கிடைத்தன. இரண்டாம் உலகப் போரின்போது பொதுவாக அமெரிக்கா முழுவதிலுமே நூலகர் பற்ருக்குறை நிலவியது. பிராட் நூலகமும் இதல்ை பாதிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சில பட்டதாரிகளைத் தொழில் புகுமுக அலு