பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நூலகத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக முனைந்தார். கிளை நூலக வளர்ச்சிக்கான நீண்ட காலத்திட்டம் ஒன்றை வகுத்தார். கிளை நூலகக்கட்டிடங் களில் பல மோசமான இடங்களில் அமைந்திருந்தன. அவை பழையனவாகவும், நெருக்கடி மிக்கதாகவும், பழு தடைந்தனவாகவும் இருந்தன. இந்தக் குறைபாடுகளை யெல்லாம் போக்கும் நோக்கத்துடன், கிளை நூலக வளர்ச் சித் திட்டம் தயாரிக்கப்பட்டது. புதிய கட்டிடங்களுக்கா கவும், நூலகச் சாதனங்களுக்காகவும் மூன்று தவணைகளில் (1947, 1952, 1956) 45,00,000 டாலரை பால்டிமோர் நகராட்சி மன்றம் கடகை வழங்கியது. 6 புதிய கிளை நூலகங்கள் கட்டவும், மூன்று பழைய நூலகங்களைப் புதிப் பிக்கவும், மத்தியக் கட்டிடத்திலும் கிளை நூலகங்களிலும் குளிர் சாதனம் (Air-condition) அமைக்கவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஊர்தி நூலகங்களுக்காக (Book. mobiles) இரண்டு ஊர்திகள் வாங்கப்பட்டன. கடன் தொகையைக் கொண்டு மேலும் இரு புதிய கிளைகள் திறக் கப்பட்டன. இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் கிளை நூலக *sound 14 (Branch Library system) losé &ful opsopussai, அமைந்தது. கட்டிடங்கள் கவர்ச்சியாகவும், காற்று, வெளிச்சம் வசதியாக உள்ளனவாகவும் மாறின. இங்கு வந்து படிப்பதற்கு ஆவலைத் துாண்டும் வகையில் கட்டிட அமைப்பும், தளவாடங்களும் மாற்றப்பட்டன. சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லா வயதினரும் தங்கள் விருப் பப்படி பொழுது போக்குவதற்கு ஏற்ற வகையில் நூலகத் தில் பல்வேறு வகைப் பொழுதுபோக்கு நூல்களும், இன்ன பிற சாதனங்களும் ஏராளமாக வாங்கிச் சேர்க்கப் பட்டன. இதல்ை இந்நூலகத்திற்கு வந்து போவோரின் எண்ணிக்கைப் பன்மடங்காகப் பெருகியது. மத்திய நூலகத்திற்கோ, மற்றக் கிளைகளுக்கோ நேரடியாக வரமுடியாதவர்கள், நகரின் பல பகுதிகளில்