பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மூலம் பெறுவதற்கு வகைசெய்யும் ஒப்பந்தம் ஒன்று 1960 ஜூலை 1-இல் கையெழுத்தாகியது. நூலகத்தின் பலன்கள் அனைத்தையும் பால்டிமோர் மக்கள் அனைவரும் தங்கு தடையின்றி முழு அளவில் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே பிராட் நூலகம் இயங்கி வருகிறது. நூலகத்தின் ஒவ்வொரு நட வடிக்கையும் இந்த நோக்கம் நிறைவேறுவதையே அடிப் படையாகக் கொண்டிருக்கிறது. பள்ளியில் அல்லது கல் இாரியில் படித்து முடித்த பின்னர் ஒவ்வொருவரும் தங்களு டைய கல்வித்திறனை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகை யில் அமெரிக்கக் கல்வி முறை அமைந்திருக்கிறது. இந்த முறை இன்று உன்னத வெற்றி பெற்றிருக்கிறது என்ருல் அதற்கு இந்நாட்டிலுள்ள நூலகங்களின் சிறப்பான பணியே காரணம். மக்களுக்குப் புதுப்புது அறிவுலகத்தைக் காட்டும் மகத்தான பணியில் பிராட் நூலகம் முன்னணி யில் நிற்கிறது. 1886-இல் பிராட் நூலகம் ஆரம்பிக்கப் பட்டபோது, அதில் 45,000 நூல்களே இருந்தன. அங்கு பணியாற்றிய அலுவலர்கள் 40 பேர்தான். ஆனல் இன்ருே இங்கு 15,00,000-க்கும் அதிகமான நூல்களிருக்கின்றன. 500-க்கு மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிகிருர்கள். நூலகத்தின் சேகரிப்புகளில் அச்சடித்த நூல்கள் மட்டுமின்றி, பல்லா பிரக்கணக்கான ஒலிப்பதிவுகள், இசைத்தட்டுகள், துண் சுருள்கள், துண் அச்சுக்கள், படங்கள், நாட்டுப் படங்கள். ஒவியங்கள் ஆகியவையும் நூலகத்தின் முக்கிய சொத்துக் களாக உள்ளன. நூலகத்தின் இந்தச் சேகரிப்புகள், தேவை யான தகவலறியவும், ஆராய்ச்சிகள் நடத்தவும் உதவு வதோடன்றி, எல்லாவயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் அறிவுப் பசியைத் தூண்டி, படிக்கும் ஆர்வத்தை மூட்டி சிந்தனையைப் பெருக்கவும் வழி செய்கின்றன. குழந்தை களுக்காக இந்நூலகம் செய்துவரும் சேவை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. பள்ளிக்குச் செல்லும் வயது வராத