பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் 1齿9 படுத்தலாம். எனினும், உண்மையில் அது, கலை-விஞ் ஞானத் துறையின் நூலகமாகவே இருப்பதால், அதை அத் துறையின் துணைப் பிரிவாகவே கருது கிரு.ர்கள் உயர்தரப் படிப்புக்கும், ஆராய்ச்சிகளுக்கும் உதவும் சிறப்பு நூலகங் கள் நிருவாக காரியங்களுக்காக இந்த நூலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஹார்வர்டு கல்லூரி நூலகத் தின் தலைமை நிருவாக அதிகாரி, பல்கலைக்கழக நூலகரே யாவார். இவர் பல்கலைக்கழக நூலக இயக்குநர், கலே-விஞ் ஞானத் துறை நூலகக்குழு ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பின்னரே எந்தத் திட்டங்களையும் செயலாக்க வேண்டும். ஹார்வர்டு நூலக அமைப்பைப் பொறுத்தவரையில் அதிகாரங்கள் எல்லாம் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இவ்வமைப்பிலடங்கிய பல்வேறு நூலகங்களி டையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது அவ சியம். இந்தப் பணியைப் பல்கலைக்கழக நூலகக்குழு செய் கிறது. நூல் தேர்வு நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் 6 2-க்கும் அதிகமான நூலகர்கள் ஈடுபட்டிருக்கிருர்கள். பல்கலைக்கழகப் பேரா விரியர்களும், நூலக அதிகாரிகளும் வெளிநாடுகளுக்குச் சுற் றுப் பயணம் செல்லும் பொழுது ஆங்காங்கே கிடைக்கும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் முக்கியப் பணி யையும் கவனிக்கிருர்கள். எந்திரமயம் நூலக அலுவல்கள் பல எந்திரமயமாக்கப்பட்டுள்ளது, இந் நூலகத்தில் காணப்படும் சிறப்பான அம்சமாகும். நூற் பட்டி அட்டைகளைத் தயாரிக்கவும் நூல்விவரத் தொகுதி களின் பிரதிகள் எடுக்கவும் புகைப்பட, நுண்சுருள், துண் முத்துப் பிரதிகள் எடுக்கவும் நவீன எந்திரங்கள் பயன் படுத்தப் படுகின்றன. இதல்ை நேரமும், மனிதச்சக்தியும் வெகுவாக மிச்சமாகிறது.