உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் 17.3 அமெரிக்க வரலாற்று நூல்களை வாங்கவும், தேசிய ஒன் றிப்பு நூலக நூற்பட்டி தயாரிக்கவும் ராக்பெல்லர் (1927), வில்பர், பெஞ்சமின் ஆகியோரும் பெருந்தொகை களை வழங்கினர். வானியல் நூல்களை வாங்குவதற்கு குக் கன் ஹீம் (Guggenhiem) நிதி பயன்பட்டது. ஹிஸ்பானிக் (Hispanic) இலக்கியங்களைச் சேகரிக்க ஹண்டிங்டன் (Huntington) நன்கொடை உதவியது. நேர்த்தியான அச்சு நூல்களைத் தேர்ந்தெடுக்க பென்னல் (Pennel) நிதி பயன்பட்டது. அருமையான இசைப்பதிவுகளைச் சேகரிக்க விட்டால் (Whittall) நிறுவன நிதி உதவியது. கிடைத்தற் கரிய நூல்களை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்துச் சேகரித்து வைத்திருந்த லெஸ் விங் ஜே ரோசன் வால்ட் (Lessing J. Rosenwald) அந்நூல்கள் அனைத்தையும் இந்நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கிர்ை. குடியரசுத் தலைவர்கள் மற்றும் பெயர் பெற்ற அரசியல் தலைவர்கள், இலக்கிய, நுண்கலை அறிஞர்கள் ஆகியோரின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக நன்கொடையாக கிடைத்தன. காங்கிரசு நூலகத்தின் இணைப்புக் கட்டிடம் 1939. இல் முடிவடைந்தது இன்று இந்நூலகம் சுமார் 36 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள அலமாரிகளை ஒரே வரிசையாக அடுக்கி வைத்தால் அவற்றின் நீளம் 270 மைல் தூரத்திற்கு வரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 1963 ஜூன் 30-ஆம் தேதிக் கணக்குப்படி, இந்நூலகத்திலுள்ள நூல்களின் எண்ணிக்கை 1,27.5 2,000. இவை தவிர, 1 56.000 நாளிதழ் தொகுப்புகளும், 1,86,10,000 கை யெழுத்துச் சான்றுகளும். 27.46 000 படங்களும், 2,52,000 நுண்சுருள்களும் (Microfilm) 75 000 திரைபடச் சுருள்களும், 21,41000 இசைத் தட்டுகளும், I 25 000 ஒலிப்பதிவுகளும், 31, 24 000 புகைப் படங்களும், ஸ்லைடு களும், 5,88,000 நுண் அச்சுக்களும் இந்நூலகத்தில் உள்ளன.