பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 7 | நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் பொதுமக்களுக்குச் சேவை இது காங்கிரசு நூலகமாக இருந்த போதிலும் பொது மக்களுக்கான பொது ஆய்வு நூலகமாகவும் இது இயங்கி வருகிறது. இந் நூலகத்தில் எல்லாரும் இலவசமாக அனு மதிக்கப்படுகிரு ள். இங்குச் செல்வதற்கு எவருடைய பரிந்துரையோ அடையாளச் சீட்டோ தேவையில்லை. காங்கிரசுக்கும் மற்ற அரசாங்க அலுவல்களுக்கும் உதவியாக இருப்பதே இந்நூலகத்தின் அடிப்படை நோக்கமாக விருந்த போதிலும், இங்குள்ள நூல்களையும் மற்றச் சேக சிப்புகளையும் பொதுமக்கள் பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்நூலகம் பணியாற்றி வருகிறது. உயர் நிலைப்பள்ளிப் படிப்பு வயதை எட்டிய எவரும் இந் நாலகத்திற்குள் சென்று படிப்பறைகளில் படிக்கலாம். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள். சிறப்பான தேவைக் காக நூலகத்திற்குச் செல்ல விரும்பினுல் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரி மிருந்து கடிதம் வாங்கிச் செல்லலாம். அல்லது பெரியவர் யாருடனுவது செல்லலாம் முக்கிய படிப் பறையை (Main Reading Room) மட்டும் பார்க்க விரும் பும் பார்வையாளர்கள், பெருமன்றத்திலுள்ள (Main Hall), மேற் செல் ஊர்திகளின் (Elevators) மூலம் பார்வையாளர் கள் பல கணிக்குச் (Visitors Gallery) சென்று பார்க்கலாம். தாமஸ் ஜெப்பர்சன் படிப்பறை முதலான மற்றப் படிப் பறைகளையும் இதே போன்று பார்க்கலாம். இந் நூலகத்தில் இரண்டு பொதுப் படிப்பறைகள் (General Reading Rooms) n-sh so so. Epsis six opé & LL. uuq Lusop (Main Reading Room) @grow L-freu5, a mudso ஜெட்பர் லன் படிப்பறை, தலைமைக் கட்டிடத்தின் (Main Building) நட்ட நடுவிலுள்ள வட்டவடிவ மண்டபம்தான் முக்கியப் படிப்பறையாகும். இணைப்புக் கட்டிடத்தின் (Annex) ஐந்தாவது மாடியில் தாமஸ் ஜெப்பர்ஸ்ன படிப் பதுை இருக்க றது.