உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பிரயாண அனுபவங்கள் முருகன் அருள் உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்' என தற்றமிழ் நக்கீரன் நாவாரப் புகழ்ந்த திருச்சீரலைவாப் என் இவம் திருச்செந்தாரில் உறையும் தமிழ்க் கடவுள் குமரன் அடியவர்க்கு அவர்கள் விரும்புவதை அளித்தருளும் அன்புக் கடவுள் என்பதை நாமறிவோம். அவ்வாறே திருநெல் வேவிச் சாலைக் குமரனும் அடியவர்களுக்கு அருள் சுரப் பவன் ஆவான். கந்த சஷ்டி விழாவன்று மாயிைல் திருநெல்வேலிப் பாலம் சாலைக் குமாரசாமி கோவில் முரு கன் திருமுன் நின்று அவனருள் நினைத்து பிரார்த்தனை முடித்து நின்ற வேளையில், சென்னை அமெரிக்க நூல்நிலைய இயக்குதர் திருமதி. மெக்கேப் அவர்களிடமிருந்து நான் அமெரிக்கா செல்லவிருக்கும் நற்செய்தி தாங்கிய கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றேன். ஆயத்தம் முருகன் அருளால் கிடைத்தற்கரிய பெரும்பேறு கிட்டி யதே என எண்ணி மகிழ்ந்து, கடிதம் கிடைத்த மறுநாளே நெல்லையை விட்டுச் சென்னையடைந்தேன். அமெரிக்கத் தகவல் நிலைய அலுவலகம் சென்று. பண்பாட்டுறவு அதிகா ரியைக் (Cultural Officer) கண்டு, அமெரிக்கத் துரதர் திரு. செஸ்டர் பெளல்ஸ் (Chetter Bowles) அவர்கள் அனுப்