பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名20 நாகை நாட்டில் நூற்றிருபது நாட்கள் பியிருந்த அழைப்பைப் பெற்றுக் கொண்டேன். அவ்வழைப் பில் காணப்படும் வாசகத்தின் மூலம் அமெரிக்க மக்களின் உயர்ந்த உள்ளத்தையும், பிறர்மீது வைத்திருக்கும் அன்பை யும், பிறரோடு இனிய முறையில் பழகும் பாங்கையும் அறிய முடிகிறது. எனவே அந்த அழைப்பின் அடக்கம் கீழே தரப்படுகிறது: புது டில்லி, அக்டோபர் 27, 1964. அன்புமிகு திரு. முத்துசுவாமி, எங்கள் நாட்டின் கல்வி-பண்பாட்டுப் பரிமாற் றத் திட்டத்தின்படி அளிக்கப்படும் மானிய உதவி யின் கீழ், அமெரிக்க நூலகக் கழகத்தின் அனைத்து நாட்டு நல்லுறவுக் குழுவினல் நடத்த பெற விருக் கும் ஒரு திட்டத்தில் பங்கு பெறுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக நான் தங்களை அமெரிக் காவுக்கு வருகை புரியும்படி மகிழ்ச்சியுடன் அழைக் கின்றேன். இத்திட்டம் 1965 ஜனவரியில் தொடங்கி 1965 ஏப்ரல் வரை நடைபெற விருக் கிறது. இந்த அழைப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களென ந ம் பு கி ேற ன் . தங்களின் இசைவை உறுதி செய்து எனக்கு எழுத வேண்டு கிறேன். தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இவ்வழைப்புப் பற்றி சென்னையிலுள்ள அமெரிக்கத் தகவல் நிலை யத்தின் பண்பாட்டுறவுத் துறை அதிகாரிக்கு தெரி விக்கப்பட்டிருக்கிறது. உங்கள் பயணத்திற்கும், உங்கள் பயண அனுமதிச் சீட்டுகளுக்கும், இன்ன பிற உங்களுக்குத் தேவையான உதவிகளுக்கும் அவர் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருவார்.