பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவங்கள் 3 2 1 - அவருடன் தாங்கள் உடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலகவியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரியும் தங்க ளுக்கு உங்கள் சேவைக்கு மேலும் ஆக்கம் தரும் வகையில் தங்களின் அமெரிக்கப் பயணம் உதவி யாக அமையும் என நம்புகிறேன். அமெரிக்கா வில் நீங்கள் சந்திக்கும் உங்களுடைய சகாக்கள், உதவியாளர்களுடன் கலந்துரையாடி, இந்தியாஅமெரிக்கா நட்புறவு மேலும் வலுப்பெறச் செப் வதற்கு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள் வீர்களென நம்புகிறேன். இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு எத்தகைய உதவி தங்களுக்குத் தேவைப்படினும், தாங்கள் தயக்கமின்றி தூதரகத்திடம் கேட்க லாம். தங்களுடைய அமெரிக்கப் பயணம் மகிழ்ச்சி யுடையதாகவும், பயன் தருவதாகவும் அமைய வேண்டுமெனத் தங்களுக்கு என்னுடைய தனிப் பட்ட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக கொன் கிறேன். எல்லா நலனும் பெறுக. உண்மையுள்ன, (ஒப்பம்) செஸ்டர் பெளல்ஸ். பின்னர் சென்னேப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு. ஏ. எல். முதலியாரவர்களையும், சென்னையிலுள்ள அமெரிக்க நூலக இயக்கு தர் திருமதி. மெக்கேப் அவர்களே ,சந்தித்து அவர்கள் ஆசியைப் பெற்றேன். பின்பு نقاهری அமெரிக்கத் தகவல் நிலையத்தில் பணிபுரியும் நண்பர்கள் திருவாளர்கள் கிருஷ்ணன், இராதாகிருஷ்ணன், திருவேங் கடம், வ. உ. சி. சுப்பிரமணியம் முதலியவர்களைக் கண்டு