உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

부) நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் தனிமனித உரிமைகளைப் பாதுகாத்து அரசாங்கம் இயங்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையில் இருகட்சி களுமே ஆழமான நம்பிக்கை கொண்டவை. முற்போக்குக் கொள்கைகளைச் செயல்படுத்தப் போவதாகக் கூறிக் கொண்டு புரட்சியைத் துாண்டும் அதி தீவிர இடதுசாரிக் கட்சியோ (Extreme left), → Tāuaveolol`ilogår கீழ் அமைந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டுப் பழைய பத் தாம் பசலிப் பிரபுத்துவ ஆட்சியை ஏற்படுத்த எண்ணும் அதி தீவிர வலதுசாரிக் கட்சியோ (Extreme Right) அமெரிக்காவில் கிடையாது. இன்று செல்வாக்குப் பெற்றிருக்கும் இரண்டு கட்சி களும், ஆட்சியைக் கைப்பற்றத் தேர்தலில் கடுமையாகப் போட்டியிடுகின்றன. கொள்கைகளைப் பொறுத்த வரை யில் இரு கட்சிகளுக்குமிடையே அதிக வேறுபாடு இருப்ப தாகக் கூறமுடியாது. சம உரிமை _ தனிமனித சுதந் திரம்-மக்கள் வாழ்க்கைத்தரஉயர்வு-இம்மூன்றும்தான் இரு கட்சிகளின் அடிப்படைக்கொள்கைகள். குறிக்கோள் ஒன்றுதான். அதை அடையும் வழிமுறைகள்தான் வேறு பட்டிருக்கின்றன. எனவே, அங்கு தேர்தல் போட்டி அழிவுமுறையில் இல்லாமல், ஆக்கமுறையில் நடைபெறு வதைக் காண்கிருேம். i நடுத்தர வர்க்கம்-சமுதாயத்தின் முதுகெலும்பு ! 19-ஆம் நூற்ருண்டின் இறுதியிலும், இந்த நூற்ருண் டின் ஆரம்பத்திலும் அமெரிக்காவில் தொழில் வளர்ச்சி வேகமடைந்தது. அதைத்தொடர்ந்து, செல்வம் சிலரிடம் குவியத்தொடங்கியது.இதனால், ஏற்றத்தாழ்ச்சியற்ற, ஒரே சீரான நடுத்தரவர்க்கச் சமுதாயமாக இயங்கி வந்த அமெரிக்கச் சமுதாயம், ஏழை-பணக்காரர் என்று இரு பிரிவாகப் பிரிந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியது. *இந்தச் சமயத்தில் பெயர்பெற்ற எஃகுத் தொழிலதி பராக விளங்கிய ஆண்ட்ரூ கார்னிகியின் (Andrew