உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த மக்கள் 41 (urnrgle) சராசரி ஆண்டு வருமானம், ஒரு சராசரித் தொழிலாளியின் ஆண்டு வருமானத்தைப்போல் 20,000 மடங்காக இருந்தது' என பிரடரிக் லெவிஸ் அலென் (Fr*derick Iewis 4llen) c#Göörở, 3). "-Lq (I) ở 3)(II7 ri. G'Lrr(I5am rr தாா சமுதாயக் கட்டுக்கோப்பில் ஏற்படும் இத்தகைய பெரும் ஏற்றத்தாழ்ழ்ச்சியினல் மக்களாட்சிமரபே சீரழிந்து விடுமோ என்று கூடச் சிலர் பயந்தார்கள். ஆளுல், இந்த அச்சம் நெடுநாள் நீடிக்கவில்லை. அமெரிக்காவின் மத்திய தர வர்க்கம் தக்க தருணத்தில் அபாயத்தை உணர்ந்து, தனது வலிமையைப் பெருக்கி, மேலாதிக்க உரிமையை அசைக்கமுடியாத அளவுக்கு நிலைநாட்டிக்கொண்டது. அமெரிக்காவில் மக்களாட்சி நெறி (Democratic ideal) வேரூன்றிவிட்ட காரணத்தால், அங்கு தேர்தல்கள் சுதந் திரமாக நடந்தன. இந்தச் சுதந்திரமான தேர்தல்களின் மூலமாக ஒரு சில பழமைவாதிகள் வெற்றிபெற்று அர சாங்க அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது. அந்த அதிகா ரத்தைப் பயன்படுத்தி, எவ்விதக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் விரிந்து வளர்ந்துவிட்ட நாட்டின் முதலாளித் துவப் பொருளாதாரத்தில் (Capitalis economy) ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தவும் அந்தப் பழமைவாதிகள் முனைந் தார்கள். இந்த அபாயத்தை உணர்ந்த உட்ரோ வில்சன் (Woodrow Wilson) போன்ற அரசியல் தலைவர்கள் பழமை வாதிகளின் இந்த முயற்சிகளுக்கு அனபோட்டுத் தடுத்து நிறுத்தி, நிலைமையைச் சீராக்கப் பாடுபட்டார்கள். 1913முதல் 1921 வரைக் குடியரசுத் தலைவராக இருந்த உட்ரோ வில்சன், 1912-இல் நடந்த தேர்தலின்போது, ஒவ்வொரு பிரசாரக்கூட்டத்திலும், அமெரிக்கச் சமுதா யத்தின் முதுகெலும்பாக-புதிய புதிய நிறுவனங்களை உரு வாக்கும் சிற்பிகளாக-தொழில் நிறுவனங்களை ஆக்கி, அழிவுகளிலிருந்து காத்து அவற்றை நாட்டின் சொத்துக்க ளாக உருமாற்றும் காவலர்களாக-நாட்டின் முன்னேற்றத் திற்கு உயிரைக்கொடுத்துப் பாடுபடும் உழைப்பாளி