பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் களாக விளங்கும் நடுத்தரமக்கள் இன்று மேன்மேலும் சுரண்டப்படுகிருர்கள்...' என்று எடுத்துக் கூறினர். "தனியுடைமையைத் தகர்த்தெறிவோம்; மனிதனின் அடிமைத் தனத்தை ஒழித்துக் கட்டுவோம்: எல்லா மனி தனின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குச் சமஉரிமையும் சமவாய்ப்பும் அளிப்போம் என்று உலகுக்கு நாம் பறைசாற்றிளுேம். வாய்வீச்சில் மட்டுமின்றி, செயலிலும் நாம் வீரர்கள்தான் என்பதை மெய்ப்பிப்போம்-என்ற உட்ரோ வில்சனின் முழக்கம் பழைமைவாதிகளின் முயற்சிகளைத் தரைமட்டமாக்கும் வேட்டாக அமைந்தது. சீர்திருத்தம் சமத்துவத்துக்கு ஏற்பட்ட அபாயத்தை நீக்கவும், அமெரிக்கரின் வாழ்க்கை முறையை மேலும் வலுவான மக்களாட்சி நெறி அடிப்படையில் அமைக்கவும், உட்ரோ வில்சனும் அவருக்குப் பின்வந்த சீர்திருத்த நோக்கங் கொண்ட தலைவர்களும் பல திறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இவற்றில் மிக முற்போக்கானது, 1913-இல் முதன் முதலாக நிறைவேறிய வருமானவரிச் சட்டம் ஆகும். இது தவிர, தொழிலாளர் நலன் பேணு வதற்கான பல்வேறு சட்டங்களும், பொருளாதாரத்தின் ஒரு பிரிவான வாணிபத் துறையில் ஆக்க முறையிலான தீவி ரப் போட்டாப் போட்டியை ஊக்குவிக்கும் சட்டங்களும் இயற்றப்பட்டன. உற்பத்தி பெருகிய அளவுக்கு மக்களின் தேவை பெருகாத காரணத்தால் 1929-இல் பொருளாதார வீழ்ச்சி (Depression) ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டின் செல்வத்தை மேலும் சீரான முறையில் பகிர்ந் தளிப்பதற்கும், மக்களின் வாங்கும் திறனை (Purchasing power) உயர் மட்டத்தில் நிலையாக வைத்திருப்பதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாய வரு Lorrç8Ilh வீழ்ச்சியடையாமல் காப்பதற்கு உதவிநிதி (Subsi