உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 4. நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் சில முக்கியமான விளைவுகளைத் தோற்றுவித்திருக்கின்றன. எளிமையான பொருளாதாரம் (Simpler economy) நில விய காலத்தில், அமெரிக்கரின் பண்பில் குடிகொண்டி ருந்த தனித்துவம் (individuality) இன்று ஒரளவு மங்கி விட்டது எனலாம். 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அமெரிக்கன் உழுதொழில் செய்து பிறரை எதிர்பாராமல் தன்னிறைவுடன் வாழ் ந் த ான். ஆனல், இன்றைய அமெரிக்கர்களில் பெரும்பாலோர், மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களிலும் மாநகர்களிலும் பல்வேறு துறை களில் ஈடுபட்டு வாழ்க்கைக்கு வருவாய் தேடுகிரு.ர்கள். தேவையான அளவு வருவாய் வந்தாலும், உணவுக்கு உழு தொழில் செய்யும் சிறுபான்மையினரின் கையை அவர்கள் எதிர்பார்த்து நிற்கிரு.ர்கள். அமெரிக்க மக்களின் தேவைகளும் இன்று அபரிமித மாகப் பெருகிவிட்டன. நாட்டில் உற்பத்தியாகும் பொருள் கள் அனைத்தும் வீணுகாமல், பயனுள்ள முறையில் செல வழிய வேண்டும் எனக் கருதி அமெரிக்கர்கள் தங்களின் தேவைகளையும் உற்பத்திப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு மேலும் மேலும் பெருக்கிக்கொண்டு போகிரு.ர்கள். இது குறித்து டேவிட் போட்டர், செல்வச் செழிப்பில் மிதக் கும் இன்றைய அமெரிக்கரின் பொருளாதாரத்தில் எழுந் துள்ள சிக்கல், உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்ப தல்ல கட்டுக் கடங்காமல் பெருகிக்கொண்டு போகும் உற்பத்திக்கு இணங்கத் தங்கள் தேவைகளை எவ்விதம் உயர்த்திக் கொள்வது என்பதே அவர்களை அலைக்கழிக்கும் சிக்கல்' என்று கூறுகிரு.ர். தேவைக்கு மீறி உற்பத்தி பெருகும்பொழுது உற்பத் திப் பொருள்களின் விற்பனையை அதிகரிக்க விளம்பரத் தந்திரங்களைப் பெருமளவில் கையாளவேண்டியிருக்கிறது. எனவே, மக்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகிக் குவியும் பொருள்கள்மீது மக்களுக்கு மோகம் ஏற்படச்