உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் கிறது. கண்காட்சிச் சாதனங்களையும், பொருள்களையும், பெரிய அகராதிகள், தேசப் படங்களையும், பத்திரிகை அடுக்குப் பலகைகளையும், திரைப்படப் பெட்டிகளையும் பத்திரமாக வைக்கத் தனி இடங்கள் உள்ளன. நூலகக் கட்டிடத்தின் மற்றப் பகுதிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புக் கருவிகள் நிறுவப் பட்டிருக்கின்றன. வெளித் தொடர்புக்குத் தொலைபேசி கள் முக்கியமாகப் பயன்படுகின்றன. மேற்கூறிய வண்ணம் அமெரிக்கப் பெருநாட்டில் குழந்தை நூலகங்கள் சிறப்புற விளங்குவதற்குரிய அடிப் படைக் காரணம் வருங்காலச் சந்ததிகளாகிய குழந்தை களின் நலனில் மக்கள் சிறந்த அக்கறை காட்டுதலே ஆகும். இவ்வாறே நமது நாட்டிலும் குழந்தை நூலகங்கள் பல தோன்றி, வளர்ந்து பல்கிப் பெருகுமேயானல் நம் சந்ததி யினரும் வளமான வாழ்வைப் பெறுவர் என்பது மறுக்க முடியாத ஒன்ரு கும். நம் நாட்டில் முதன் முதலில் குழந்தைகளுக்கென்று தனியாக நூலகம் ஒன்றினைத் தொடங்கிய பெருமை தமிழக அரசுக்கே உரியது. பல ஆண்டுகளுக்கு முன்னரே நம் அரசினரால் தொடங்கப் பட்ட குழந்தை நூலகம் இன்று மாநிலக் கல்வி இயக்கு நர் அலுவலகக் (Office of the D. P. I.) கட்டிடத்தில் கவினுற விளங்குகின்றது. ஆனல் இக்குழந்தை நூலகத் தைப் பற்றி ஒருசில மக்களே அறிவர் என்பது வருந்தத் தக்கதே. இதற்குக் காரணம், அது ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இடத்தில் விளங்கும் கட்டிடம் ஒன்றில் இருப் பதே ஆகும். குழந்தைகள், துணையேதுமின்றி தனியாகச் சென்று படிப்பதற்குரிய வகையில் நகர மையப் பகுதியில் விளங்கும் கட்டிடம் ஒன்றிற்கு இந்நூலகம் மாற்றப்பட்டு, தக்க விளம்பரமும் செய்யப்படுமேயாகில் ஆயிரக்கணக் கான குழந்தைகள் இந் நூலகத்தினல் பயன் பெறுவர் என் பது திண்னம். குழந்தைகளுக்கென மாவட்டத் தலைமை நூலகத்தில் தனிப் பகுதி ஒன்றினை முதன்முதலில் தொடங்