உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 U. நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் கியப் பண்ணைகளை அரசினர் தொடங்கி சிறந்த பயிற்சி யினை அவ்வெழுத்தாளர்களுக்கு அளித்தல் வேண்டும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து அரசினர் வெளியிடவும் செய்யலாம். அமெரிக்க நாட்டில் நூலகவியல் பட்டப்படிப்பு மான வர்கள் தங்கள் விருப்பப் பாடங்களில் ஒன்ருகக் குழந்தை நூலகம் பற்றிய பாடத்தினைப் பெரு விருப்புடன் பயிலு கின்றனர். இன்று அமெரிக்கப் பொதுநூலங்களின் முக்கிய பகுதிகளில் ஒன்ருக, அதாவது இன்றியமையாத பகுதி களில் ஒன்ருகக் குழந்தை நூலகப் பகுதி விளங்குவதால் நூலகத் துறையில் ஈடுபடுகின்றவர்களில் பெரும்பான்மை யோர் இப்படிப்பினை விரும்பி மேற்கொள்ளுகின்றனர். குழந்தை நூலக அமைப்பு முறை, குழந்தை நூலக ஆட்சி முறை, குழந்தை இலக்கியங்கள், குழந்தைகளுக்குக் கதை சொல்லும் முறை, குழந்தைகளைக் கவரும் வழிவகைகள் முதலியன பற்றி இப்பாடத் திட்டத்தின்கீழ் சொல்லித் தரப்படுகின்றது. ஆனல் இப்பாடம் விருப்பப் பாடங்களில் ஒன்ருகவே விளங்குகின்றது. எனினும் பல மாணவர்கள் தங்களுடைய மனத்தை இப்பயிற்சியில் பறிகொடுக்கின் றனர். நம் நாட்டிலும் நூலகவியல் பாடத் திட்டத்தில் சிறந்த இடத்தைக் குழந்தை நூலகப் பாடத்திற்கு அளித் தல் வேண்டும். அதஞல் வருங்காலத்தில் சிறந்த பய னுண்டு.