பயனர் பேச்சு:Meykandan
வாருங்கள், Meykandan!
விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்: .புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--
வணக்கம் மெய்கண்டான், விக்கிமூலத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சங்ககாலம் குறித்து முதற்பக்க உரையாடல் பகுதியில் நீங்கள் தந்துள்ள விளக்கத்துக்கு ஏற்ப முதற்பக்கத்தைத் திருத்தியிருக்கிறேன். நன்றி.--Kanags 10:56, 8 பெப்ரவரி 2010 (UTC)
- தண்டலையார் சதகம் சிற்றிலக்கியத்தை இங்கு சேர்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இச்சதகத்தைப் பாடிய படிக்காசுப் புலவர் பற்றிய குறிப்புகள் இங்கிருப்பதைவிட விக்கிப்பீடியாவில் இருப்பது நல்லது. அவரின் முழுக் குறிப்பையும் விக்கியில் ஒரு கட்டுரையாக இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இங்கு அவரைப்பற்றிய சிறு குறிப்பு மட்டும் கொடுத்து விக்கிக்கட்டுரைக்கு உள்ளிணைப்பு இங்கு கொடுக்கலாம்.--Kanags 11:41, 24 பெப்ரவரி 2010 (UTC)
கீழே நான் தந்திருக்கும் சுட்டியை அழுத்தினால் அது விக்கிப்பீடியா கட்டுரைக்குச் செல்லும். w:படிக்காசுப் புலவர். பின்னர் அங்கு "படிக்காசுப் புலவர் குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற சுட்டியை அழுத்தினால் கட்டுரையைத் தொடங்குவதற்குரிய பெட்டி வரும். அதில் நீங்கள் தண்டலையார் சதகம் கட்டுரையில் தந்துள்ள குறிப்புகளை அப்படியே பிரதி பண்ணி அப்பெட்டியினுள் இட்டு சேமியுங்கள். (தயவு செய்து விக்கிப்பீடியாவில் உங்கள் பயனர் கணக்கில் புகுபதிகை செய்து கட்டுரையைத் தொடங்குங்கள்). அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது.--Kanags 11:28, 25 பெப்ரவரி 2010 (UTC)
பொருளடக்கம் |
பதிப்புரிமை [தொகு]
- வணக்கம், விக்கிமூலத்தில் இடப்படும் ஆக்கங்களின் பதிப்புரிமை பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது குறித்து ஒரு விளக்கக் கட்டுரை Wikisource:பதிப்புரிமை உருவாக்கியிருக்கிறேன். இது ஆங்கில விக்கிமூலத்தில் இருந்து படி எடுத்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையெனில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 03:14, 1 ஜூன் 2010 (UTC)
நன்றி! கனகு அவர்களே! தங்களின் கட்டுரையைப் படித்துப்பார்த்துவிட்டு ஏதாவது ஐயம் இருந்தால் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்கின்றேன். நன்றி. விளக்கம் தருவதில் 'இவ்வளவு விரைவா?' என உண்மையிலேயே எனக்கு ஆச்சரியந்தான்!தங்களின் அரும்பணி தொடர என் வாழ்த்துக்கள்!--Meykandan 05:38, 2 ஜூன் 2010 (UTC)
வணக்கம் மெய்கண்டான் அவர்களே. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. சிறு துளியே பெரு வெள்ளம்; என்னால் இயன்ற வரை ஈடுபடுகிறேன். thanks again for your kind words of encouragement. - கரிகாலன்
வருக! [தொகு]
இன்றுதான் கண்டேன் உங்கள் பங்களிப்புகளை. மிக்க நன்றி. தமிழ்த்துறையில் இருந்தவர்கள் என்று அறிந்து மிக மகிழ்ந்தேன். நீங்கள் நிறைய உதவமுடியும் ஐயா!--செல்வா 17:51, 22 செப்டெம்பர் 2010 (UTC)
ஐயம் [தொகு]
- மெய்கண்டான் நீங்கள் நன்னூல் எழுதியுள்ளீர். ஆனால் அதற்குப் பிரித்தெழுதல்கள் அவசியமற்ற ஒன்று. ஏனெனில் நாம் மூலத்தைத் தான் தரவேண்டும். நான் நன்னூலை முழுமையாக்குகிறேன்.
அன்பு விக்கியன் --Surya Prakash.S.A. 16:14, 4 ஜனவரி 2011 (UTC)
தெளிவாக்கல் [தொகு]
- தங்களின் அறிவுறுத்தல் கண்டேன். மகிழ்ச்சி. தங்களைப்போன்ற துடிப்புமிக்கஇளைஞர்களின் செயல்பாடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும். தாங்கள் மாணவராகப் பொறியியலைத் தமிழ்வழியில் படித்துக்கொண்டுள்ளீர்கள் என்பது அறிந்து பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அடுத்துத் தாங்கள் நன்னூலை முழுமை செய்வதாகக் கூறியுள்ளீர்கள். நன்று. பிரித்தெழுதுவதற்கான காரணம்:
தமிழில் உள்ளபெரும்பாலான முற்கால நூல்கள் யாப்புவடிவத்தில் (செய்யுளாக) அமைந்துள்ளன. அதற்குக் காரணம் அத்தகைய யாப்புவடிவம் செப்பமானது, கட்டுக்கோப்பானது, மேலும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக ஓசையொழுங்கு கொண்டது. எனவே, மூலத்தில் மாற்றங்கள் நடைபெற்றால் ஓரளவுக்குக் கண்டுபிடித்துவிடலாம், பாஇலக்கண அமைப்பில் அமைந்துள்ளதால். இக்காலத்தில் பிரித்தெழுதவேண்டிய கட்டாயம் மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால். ஏனென்றால் மிகப்பலருக்குப் பிரித்தெழுதாவிட்டால் மூலத்தைச் சரியாகப் படிக்கவே தெரியாது. இந்நிலையில் மூலவடிவத்தைப் பாஇலக்கணமுறையில் சேர்த்தும் (மூலநூல ஆசிரியர் எழுதியபடி), இக்காலத்தில் உள்ளோர் எளிதாகப் படிப்பதற்கேற்றவண்ணம் பிரித்தும் இருவகையாகப் பதிவுசெய்வது நன்று. அது படிப்போர் இருநிலைமை களையும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். படிப்போருக்கு வசதி! எனவேதான், இவ்வாறு சேர்த்தும் பிரித்தும் இருவகைகளில் பதிப்பிக்கலானேன். ஆனால், இது இரட்டை வேலைதான். என்னசெய்வது? முற்காலத்தில் முறையான, நம் மரபுக்கேற்றவண்ணம் கல்விகற்றுத்தரப்பட்டதால், ஓரிரு வகுப்புக்கள் அடிப்படைக் கல்விபெற்றோரும் தமிழைப்பிரித்துப்படிக்கும் அறிவுபெற்றிருந்தனர். அதனால் அக்காலத்தில் சி்க்கல்கள் எழவில்லை. இப்போது தமிழ்க்கல்வியின் நிலை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே, மூலத்தைப் பிரித்தும் பாஇலக்கணமுறைப்படி சேர்த்தும் பதிப்பதுதான் சரிஎன்பது அடியேனின் கருத்து. மேலும், இதுகுறித்து ஐயமிருந்தால் தொடர்புகொள்ளவும். தாங்கள் நன்னூலைப் பதிவுசெய்ய விரும்பியதுமகிழ்ச்சி; அதனைத்தொடங்குக.வாழ்த்துக்கள். நான் அந்த நேரத்தில் வேறு இலக்கியங்களைப் பதிவுசெய்வேன். செய்யவேண்டிய அடிப்படை வேலைகளே ஏராளமாக உள்ளன. வாழ்க, வளர்க உங்களின் தமிழார்வம். வாழ்த்துக்கள்!
அன்புடன், மெய்கண்டான்,சி.
நன்றி [தொகு]
தங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. எனவே உங்கள் கருத்துக்கு ஒப்ப நன்னூலைப் பிரித்தெழுதிய ஒரு பதிப்பாகவும் மூலப் பதிப்பாகவும் உருவாக்குகிறேன். :)
- மூலப் பதிப்பு வரைவாக உள்ளது. [ நன்னூல் (மூலம்) ]
- உங்களது பதிப்பைப் பிரித்தெழுது பதிப்பாக மாற்றி விடுகிறேன். [ நன்னூல் (எளிய பதிப்பு) ]
எனது கருத்து சரியானதா என உங்கள் விளக்கம் தேவை... அன்பு விக்கியன் --Surya Prakash.S.A. 17:56, 5 ஜனவரி 2011 (UTC)
பார்க்க: [தொகு]
அன்புடையீர், வணக்கம். விக்கிப்பீடியா மூலத்தில் உள்ள பத்துப்பாட்டு பதிப்பித்துள்ள முறையைப் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு நான் கூறியது தெளிவாக விளங்கும். அதனைப் பார்க்க வேண்டுகின்றேன்.நன்றி.
அன்புடன், மெய்கண்டான்
குறுந்தொகை [தொகு]
வணக்கம் மெய்கண்டான், விக்கிமூலத்தில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பு அருமை. வாழ்த்துக்கள். குறுந்தொகை பக்கத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளேன். அதில் இருந்து தேவையான பக்கங்களை ஒருங்கிணைக்கலாம் என நினைக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 02:27, 13 ஜனவரி 2011 (UTC)
Invite to WikiConference India 2011 [தொகு]
|
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
|---|
| வணக்கம் Meykandan,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
மேற்கோள் [தொகு]
மேற்கோள்கள் குறித்த உங்கள் கேள்வியினை ஆலமரத்தடியில் கண்டேன். விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் முறையினையே இங்கும் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து--Sodabottle 19:02, 12 செப்டெம்பர் 2011 (UTC)
தட்டச்சுக் கருவி [தொகு]
புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 19:02, 12 செப்டெம்பர் 2011 (UTC)
நடைக் கையேடு [தொகு]
வணக்கம். நீங்கள் ஆலமரத்தடியில் உள்ள உரையில் பிழை திருத்தியது கண்டு மகிழ்ந்தேன். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தின் நடைக்கையேடு, உரை திருத்தம் திட்டம் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டியவை குறித்து உங்கள் கருத்து, வழிகாட்டலை அறிய விரும்புகிறேன். தகுந்த இடங்களில் வேண்டிய பரிந்துரைகளைத் தர வேண்டுகிறேன். நன்றி--இரவி 13:34, 13 பெப்ரவரி 2012 (UTC)
உதவி [தொகு]
வணக்கம் மெய்கண்டான் அவர்களே, எனக்கு நற்றமிழில் எழுத ஆசை, உங்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் படித்தறிந்தேன். இங்கே உங்களுக்கு உதவலாமென்று வந்தேன். ஏதாவது பணியிருந்தால் சொல்லுங்கள். நானறிந்த வரையிலான தொழினுட்ப உதவிகளைச் செய்வேன். குறிப்பிட்ட சொல் தவறாக எழுதப் படுகிறது எனக் குறிப்பிட்டால், பிழை திருத்தம் செய்வேன். ஏதேனும் பணீயிருந்தால் சொல்லுங்கள். விரைந்து முடிக்க ஆவலாய் உள்ளேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:58, 8 அக்டோபர் 2012 (UTC)
கருத்திடுக [தொகு]
அம்மா என்ற சொல்லை ஒருமாதிரிச் சொல்லாகக் கொண்டு வடிவமைத்துள்ளேன். அதனைக் கண்டு உங்களின் கருத்துக்களை அதன் உரையாடற்பக்கத்தில் இடக்கோருகிறேன்.--த*உழவன் (பேச்சு) 06:17, 29 அக்டோபர் 2012 (UTC)
முதற்பக்கம் [தொகு]
வணக்கம், முதற்பக்க வடிவமைப்பில் சிறு மாற்றம் செய்திருக்கிறேன், மாற்றுக்கருத்து ஏதும் இருப்பின் பார்த்துக்கூறுக--Sankmrt (பேச்சு) 20:20, 29 ஜனவரி 2013 (UTC)
