பயனர் பேச்சு:Meykandan

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Meykandan!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.


வணக்கம் மெய்கண்டான், விக்கிமூலத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சங்ககாலம் குறித்து முதற்பக்க உரையாடல் பகுதியில் நீங்கள் தந்துள்ள விளக்கத்துக்கு ஏற்ப முதற்பக்கத்தைத் திருத்தியிருக்கிறேன். நன்றி.--Kanags 10:56, 8 பெப்ரவரி 2010 (UTC)

தண்டலையார் சதகம் சிற்றிலக்கியத்தை இங்கு சேர்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இச்சதகத்தைப் பாடிய படிக்காசுப் புலவர் பற்றிய குறிப்புகள் இங்கிருப்பதைவிட விக்கிப்பீடியாவில் இருப்பது நல்லது. அவரின் முழுக் குறிப்பையும் விக்கியில் ஒரு கட்டுரையாக இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இங்கு அவரைப்பற்றிய சிறு குறிப்பு மட்டும் கொடுத்து விக்கிக்கட்டுரைக்கு உள்ளிணைப்பு இங்கு கொடுக்கலாம்.--Kanags 11:41, 24 பெப்ரவரி 2010 (UTC)

கீழே நான் தந்திருக்கும் சுட்டியை அழுத்தினால் அது விக்கிப்பீடியா கட்டுரைக்குச் செல்லும். w:படிக்காசுப் புலவர். பின்னர் அங்கு "படிக்காசுப் புலவர் குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற சுட்டியை அழுத்தினால் கட்டுரையைத் தொடங்குவதற்குரிய பெட்டி வரும். அதில் நீங்கள் தண்டலையார் சதகம் கட்டுரையில் தந்துள்ள குறிப்புகளை அப்படியே பிரதி பண்ணி அப்பெட்டியினுள் இட்டு சேமியுங்கள். (தயவு செய்து விக்கிப்பீடியாவில் உங்கள் பயனர் கணக்கில் புகுபதிகை செய்து கட்டுரையைத் தொடங்குங்கள்). அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது.--Kanags 11:28, 25 பெப்ரவரி 2010 (UTC)

பதிப்புரிமை[தொகு]

வணக்கம், விக்கிமூலத்தில் இடப்படும் ஆக்கங்களின் பதிப்புரிமை பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது குறித்து ஒரு விளக்கக் கட்டுரை Wikisource:பதிப்புரிமை உருவாக்கியிருக்கிறேன். இது ஆங்கில விக்கிமூலத்தில் இருந்து படி எடுத்திருக்கிறேன். மேலும் விளக்கம் தேவையெனில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 03:14, 1 ஜூன் 2010 (UTC)

நன்றி! கனகு அவர்களே! தங்களின் கட்டுரையைப் படித்துப்பார்த்துவிட்டு ஏதாவது ஐயம் இருந்தால் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்கின்றேன். நன்றி. விளக்கம் தருவதில் 'இவ்வளவு விரைவா?' என உண்மையிலேயே எனக்கு ஆச்சரியந்தான்!தங்களின் அரும்பணி தொடர என் வாழ்த்துக்கள்!--Meykandan 05:38, 2 ஜூன் 2010 (UTC)


வணக்கம் மெய்கண்டான் அவர்களே. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. சிறு துளியே பெரு வெள்ளம்; என்னால் இயன்ற வரை ஈடுபடுகிறேன். thanks again for your kind words of encouragement. - கரிகாலன்

வருக![தொகு]

இன்றுதான் கண்டேன் உங்கள் பங்களிப்புகளை. மிக்க நன்றி. தமிழ்த்துறையில் இருந்தவர்கள் என்று அறிந்து மிக மகிழ்ந்தேன். நீங்கள் நிறைய உதவமுடியும் ஐயா!--செல்வா 17:51, 22 செப்டெம்பர் 2010 (UTC)

ஐயம்[தொகு]

மெய்கண்டான் நீங்கள் நன்னூல் எழுதியுள்ளீர். ஆனால் அதற்குப் பிரித்தெழுதல்கள் அவசியமற்ற ஒன்று. ஏனெனில் நாம் மூலத்தைத் தான் தரவேண்டும். நான் நன்னூலை முழுமையாக்குகிறேன்.

அன்பு விக்கியன் --Surya Prakash.S.A. 16:14, 4 ஜனவரி 2011 (UTC)

தெளிவாக்கல்[தொகு]

தங்களின் அறிவுறுத்தல் கண்டேன். மகிழ்ச்சி. தங்களைப்போன்ற துடிப்புமிக்கஇளைஞர்களின் செயல்பாடு தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும். தாங்கள் மாணவராகப் பொறியியலைத் தமிழ்வழியில் படித்துக்கொண்டுள்ளீர்கள் என்பது அறிந்து பெருமகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அடுத்துத் தாங்கள் நன்னூலை முழுமை செய்வதாகக் கூறியுள்ளீர்கள். நன்று. பிரித்தெழுதுவதற்கான காரணம்:

தமிழில் உள்ளபெரும்பாலான முற்கால நூல்கள் யாப்புவடிவத்தில் (செய்யுளாக) அமைந்துள்ளன. அதற்குக் காரணம் அத்தகைய யாப்புவடிவம் செப்பமானது, கட்டுக்கோப்பானது, மேலும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக ஓசையொழுங்கு கொண்டது. எனவே, மூலத்தில் மாற்றங்கள் நடைபெற்றால் ஓரளவுக்குக் கண்டுபிடித்துவிடலாம், பாஇலக்கண அமைப்பில் அமைந்துள்ளதால். இக்காலத்தில் பிரித்தெழுதவேண்டிய கட்டாயம் மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால். ஏனென்றால் மிகப்பலருக்குப் பிரித்தெழுதாவிட்டால் மூலத்தைச் சரியாகப் படிக்கவே தெரியாது. இந்நிலையில் மூலவடிவத்தைப் பாஇலக்கணமுறையில் சேர்த்தும் (மூலநூல ஆசிரியர் எழுதியபடி), இக்காலத்தில் உள்ளோர் எளிதாகப் படிப்பதற்கேற்றவண்ணம் பிரித்தும் இருவகையாகப் பதிவுசெய்வது நன்று. அது படிப்போர் இருநிலைமைகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். படிப்போருக்கு வசதி! எனவேதான், இவ்வாறு சேர்த்தும் பிரித்தும் இருவகைகளில் பதிப்பிக்கலானேன். ஆனால், இது இரட்டை வேலைதான். என்னசெய்வது? முற்காலத்தில் முறையான, நம் மரபுக்கேற்றவண்ணம் கல்விகற்றுத்தரப்பட்டதால், ஓரிரு வகுப்புக்கள் அடிப்படைக் கல்விபெற்றோரும் தமிழைப்பிரித்துப்படிக்கும் அறிவுபெற்றிருந்தனர். அதனால் அக்காலத்தில் சி்க்கல்கள் எழவில்லை. இப்போது தமிழ்க்கல்வியின் நிலை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே, மூலத்தைப் பிரித்தும் பாஇலக்கணமுறைப்படி சேர்த்தும் பதிப்பதுதான் சரிஎன்பது அடியேனின் கருத்து. மேலும், இதுகுறித்து ஐயமிருந்தால் தொடர்புகொள்ளவும். தாங்கள் நன்னூலைப் பதிவுசெய்ய விரும்பியது மகிழ்ச்சி; அதனைத்தொடங்குக. வாழ்த்துக்கள். நான் அந்த நேரத்தில் வேறு இலக்கியங்களைப் பதிவுசெய்வேன். செய்யவேண்டிய அடிப்படை வேலைகளே ஏராளமாக உள்ளன. வாழ்க, வளர்க உங்களின் தமிழார்வம். வாழ்த்துக்கள்!

அன்புடன், மெய்கண்டான்,சி.

நன்றி[தொகு]

தங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. எனவே உங்கள் கருத்துக்கு ஒப்ப நன்னூலைப் பிரித்தெழுதிய ஒரு பதிப்பாகவும் மூலப் பதிப்பாகவும் உருவாக்குகிறேன். :)

  • மூலப் பதிப்பு வரைவாக உள்ளது. [ நன்னூல் (மூலம்) ]
  • உங்களது பதிப்பைப் பிரித்தெழுது பதிப்பாக மாற்றி விடுகிறேன். [ நன்னூல் (எளிய பதிப்பு) ]

எனது கருத்து சரியானதா என உங்கள் விளக்கம் தேவை... அன்பு விக்கியன் --Surya Prakash.S.A. 17:56, 5 ஜனவரி 2011 (UTC)

பார்க்க:[தொகு]

அன்புடையீர், வணக்கம். விக்கிப்பீடியா மூலத்தில் உள்ள பத்துப்பாட்டு பதிப்பித்துள்ள முறையைப் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு நான் கூறியது தெளிவாக விளங்கும். அதனைப் பார்க்க வேண்டுகின்றேன்.நன்றி.

அன்புடன், மெய்கண்டான்

குறுந்தொகை[தொகு]

வணக்கம் மெய்கண்டான், விக்கிமூலத்தில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பு அருமை. வாழ்த்துக்கள். குறுந்தொகை பக்கத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளேன். அதில் இருந்து தேவையான பக்கங்களை ஒருங்கிணைக்கலாம் என நினைக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 02:27, 13 ஜனவரி 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Meykandan,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மேற்கோள்[தொகு]

மேற்கோள்கள் குறித்த உங்கள் கேள்வியினை ஆலமரத்தடியில் கண்டேன். விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் முறையினையே இங்கும் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து--Sodabottle 19:02, 12 செப்டெம்பர் 2011 (UTC)

தட்டச்சுக் கருவி[தொகு]

புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 19:02, 12 செப்டெம்பர் 2011 (UTC)

நடைக் கையேடு[தொகு]

வணக்கம். நீங்கள் ஆலமரத்தடியில் உள்ள உரையில் பிழை திருத்தியது கண்டு மகிழ்ந்தேன். தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தின் நடைக்கையேடு, உரை திருத்தம் திட்டம் ஆகியவற்றில் மேம்படுத்த வேண்டியவை குறித்து உங்கள் கருத்து, வழிகாட்டலை அறிய விரும்புகிறேன். தகுந்த இடங்களில் வேண்டிய பரிந்துரைகளைத் தர வேண்டுகிறேன். நன்றி--இரவி 13:34, 13 பெப்ரவரி 2012 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் மெய்கண்டான் அவர்களே, எனக்கு நற்றமிழில் எழுத ஆசை, உங்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் படித்தறிந்தேன். இங்கே உங்களுக்கு உதவலாமென்று வந்தேன். ஏதாவது பணியிருந்தால் சொல்லுங்கள். நானறிந்த வரையிலான தொழினுட்ப உதவிகளைச் செய்வேன். குறிப்பிட்ட சொல் தவறாக எழுதப் படுகிறது எனக் குறிப்பிட்டால், பிழை திருத்தம் செய்வேன். ஏதேனும் பணியிருந்தால் சொல்லுங்கள். விரைந்து முடிக்க ஆவலாய் உள்ளேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:58, 8 அக்டோபர் 2012 (UTC)

கருத்திடுக[தொகு]

அம்மா என்ற சொல்லை ஒருமாதிரிச் சொல்லாகக் கொண்டு வடிவமைத்துள்ளேன். அதனைக் கண்டு உங்களின் கருத்துக்களை அதன் உரையாடற்பக்கத்தில் இடக்கோருகிறேன்.--த*உழவன் (பேச்சு) 06:17, 29 அக்டோபர் 2012 (UTC)

முதற்பக்கம்[தொகு]

வணக்கம், முதற்பக்க வடிவமைப்பில் சிறு மாற்றம் செய்திருக்கிறேன், மாற்றுக்கருத்து ஏதும் இருப்பின் பார்த்துக்கூறுக--Sankmrt (பேச்சு) 20:20, 29 ஜனவரி 2013 (UTC)

உங்களுடைய வாக்கை பதியுங்கள்[தொகு]

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:22, 16 அக்டோபர் 2013 (UTC)

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello Meykandan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

வாக்கிடுக[தொகு]

w:விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் என்பதில் வாக்கிடுக.--தகவலுழவன்உரையாடல் 17:15, 1 டிசம்பர் 2015 (UTC)

meykandan@hotmail.com என்ற முகவரிக்கு ஒரு விளக்க மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். வணக்கம்--தகவலுழவன்உரையாடல் 13:46, 2 டிசம்பர் 2015 (UTC)

திட்டபக்கத்திற்கு வருக![தொகு]

பல்லாயிர கணக்கான நூல்கள், நம் விக்கிமூலத்தில் பதிவேற உள்ளன. அத்திட்டப்பக்கத்தில் கலந்து கொள்ளுங்கள்.விக்கிமூலம் பேச்சு:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்--உழவன் (உரை) 04:22, 17 ஜனவரி 2016 (UTC)

வேண்டுகோள்- புறநானூறு பாடல் 51-60[தொகு]

மதிப்பிற்குரிய ஐயா! நலமாக இருப்பீர்களென்று எண்ணுகிறேன். தங்களது புதிய பதிவுகளை காண்பது மகிழ்ச்சியா இருக்கிறது. வேண்டுகோள்- புறநானூறு பாடல் 51-60 என்ற பக்கத்தை, பிற பக்கங்களை அமைத்தது போல, உருவாக்க வேண்டுகிறேன். அடுத்தவாரம் தங்களிடம் உரையாட விரும்புகிறேன். அதற்கு முன், மின்னஞ்சல் அனுப்புகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 06:24, 17 மார்ச் 2016 (UTC)

Hot mail-Meykandan[தொகு]

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.--உழவன் (உரை)   05:05, 3 ஏப்ரல் 2016 (UTC)

ஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிக்கு நன்றி. தங்கள் பங்களிப்புகள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன:

  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்களின் மூல நூல்கள் பற்றிய விவரங்கள் தேவை. ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, வெளியிட்ட ஆண்டு, எத்தனையாவது பதிப்பு, ISBN எண் (இருந்தால் மட்டும்) போன்ற விவரங்கள் உதவும். இந்த விவரங்களைச் சேர்ப்பதன் வழி மூல நூலின் நம்பகத்தன்மை, அவை திரிபுகள், பிழைகள் இன்றி மின்னாக்கம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் உறுதி செய்யலாம்.
  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்கள் தாங்களே கைப்பட தட்டச்சு செய்ததா அல்லது இணையத்தில் ஏற்கனவே உள்ளவற்றைப் படியெடுத்து இடுகிறீர்களா? படியெடுத்து இடுகிறீர்கள் என்றால் அப்படிகள் முதலில் இடம்பெற்ற தளங்களின் விவரங்கள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம் முதலிய தளங்களில் பல சங்க இலக்கியங்கள் ஏற்கனவே தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தகைய தளங்களுக்கு இணைப்பு தந்து நன்றி நவில்வதன் மூலம் உறவு நிறுவனங்களுடன் இணக்கத்தைப் பேணலாம்.

இந்த விவரங்களை அந்தந்த ஆக்கங்களின் முதன்மைப் பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம்.

ஒரு வேளை, நீங்கள் கைப்படவே தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், அதனைத் தவிர்த்து கூகுளின் ஒளிவழி எழுத்துணரிக் கருவியைக் கொண்டு தானியக்கமாகப் பெருவாரியான பக்கங்களைப் பதிவேற்றலாம். இதன் மூலம் உங்கள் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். இது தொடர்பாக உதவி தேவையெனில் உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:13, 19 ஏப்ரல் 2016 (UTC)

தலைப்பில் புள்ளி[தொகு]

தொடரும் உங்கள் பங்களிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு சிறு மெருகூட்டல் செய்தி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். யாதெனில், விக்கியில் அது எம்மொழி விக்கியாக இருந்தாலும், தலைப்பில் புள்ளி வந்தால், அதற்கு அடுத்து ஒரு இடைவெளி விட வேண்டும். (எ. கா.) 1.குலமுறை கிளத்துப் படலம் என்பதை, இனி 1. குலமுறை கிளத்துப் படலம் என எழுதுக. இதுவரை எளிதியதை பற்றி எண்ணம் வேண்டாம். அதனை ஒரு தானியங்கி நிரல் மூலம் மாற்றிவிடலாம். அதனை இவ்வாரத்தில் செய்து முடிக்க எண்ணுகிறேன். இனி நீங்கள் உருவாக்கும் தலைப்புக்கு, இவ்விதியை பின்பற்றுக. வணக்கம்--உழவன் (உரை) 01:48, 17 மே 2016 (UTC)


நன்றி. தகவல் உழவன் அவர்களே! நன்றி!--Meykandan (பேச்சு) 08:24, 17 மே 2016 (UTC)

திட்டபக்கங்களில் வாக்கிடுக[தொகு]

நம் விக்கிமூலத்தில் முதன்மையான பங்களிப்பாளராக உள்ளீர்கள். எனவே, பல திட்டபணிகளில் கலந்து கொண்டு வாக்கிட்டால், பலரும் உங்களை அறிவர். இதனால் உங்கள் அனுபவ வழிகாட்டல்கள், பலருக்கும் உதவ வாய்ப்புண்டு. நான் அவ்வப்போது நடைபெறும் வாக்கெடுப்பினை உங்கள் பேச்சு பக்கத்தில் அறிவிக்கிறேன். இப்பொழுது விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள் என்றபக்கத்தில் அடியில் சீனிவாசன், தகவலுழவன் ஆகியோருக்கு வாக்கிட்டு கருத்திடலாம். உங்கள் வரவினை எதிர்பார்க்கிறோம். வணக்கம்.--உழவன் (உரை) 03:02, 23 மே 2016 (UTC)

ஐயம்-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை[தொகு]

இத்திட்டத்தில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூல்கள் பலவற்றை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அவரின் படைப்புகள், தமிழக அரசு அறிவித்த நாட்டுடைம நூல்கள் பட்டியலின் கீழ் வருமா?-- உழவன் (உரை) 01:03, 29 சூன் 2016 (UTC)

அன்பு உழவன் அவர்களே! வணக்கம். ஆம். அவை நாட்டுடைமைப் பட்டியலில் வரும்! தங்களின் கைபேசி எண் வேண்டும். தங்களுடன் பேசவேண்டும். அன்புடன், --Meykandan (பேச்சு) 11:56, 13 சூலை 2016 (UTC)

90 95-34-33 42-- உழவன் (உரை) 12:44, 13 சூலை 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Tireless Contributor Barnstar Hires.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
பல சங்க இலக்கிய நூல்களை அயராது பதிவேற்றுவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:11, 5 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

திரு. பாலாஜி அவர்களுக்கு வணக்கம்! தங்கள் அன்புக்கு நன்றி! என்னைவிட இன்னும் எத்தனையோ பேர் செய்த, செய்கின்ற, செய்யும் பணிகளைப் பார்க்கும்போது பெரும் வியப்படைகின்றேன். அப்படிப்பட்டவர்களின் தொண்டுதான் என்னை ஊக்குவிக்கும் ஆற்றல். அவர்களுக்கு என் நன்றி, பணிவான வணக்கங்கள்! நன்றியுடன்,--Meykandan (பேச்சு) 11:53, 13 சூலை 2016 (UTC)

விவேகசிந்தாமணி[தொகு]

விவேகசிந்தாமணி என்றும் விவேக சிந்தாமணி என்றும் இரண்டு பக்கங்கள் உள்ளது. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம். இங்கு நடந்த உரையாடலையும் பார்த்து என்ன செய்வது என்று கூறுங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:52, 14 நவம்பர் 2016 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 04:37, 9 மார்ச் 2017 (UTC)

ஐயம்[தொகு]

பரமார்த்த குருவின் கதை என்பதும், 17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை என்பதும் ஒன்று என்றே எண்ணுகிறேன். அப்படித்தானே?-- உழவன் (உரை) 09:06, 27 மே 2019 (UTC)

ஆமாம்! இரண்டும் ஒன்றே! தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா? தொடர்புகொள்ள விரும்புகின்றேன்.

-மெய்கண்டான், சி.

ஏற்கனவே ஒருமுறை நாம் பேசி இருக்கிறோம். அப்பொழுது ஆந்திராவில் இருந்து பேசினீர்கள். அமெரிக்கா செல்லவிருப்பதாகக் கூறியிருந்தீர்கள். 90 95 34 33 42இந்திய நேரம், பிற்பகல் 2 முதல் இரவு 10 வரை முடிந்தால் அழைக்கவும். நான் தற்போது சேலம் மாவட்டதில் வசிக்கிறேன். வணக்கம்.-- உழவன் (உரை) 05:11, 28 மே 2019 (UTC)

நிறம்[தொகு]

பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/3 என்ற பக்கத்தினை நிறம் மாற்ற உங்களால் முடியுமென்று எண்ணுகிறேன். ஆவன செய்க.-- உழவன் (உரை) 09:10, 27 மே 2019 (UTC)

அன்புடையீர், வணக்கம். திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும், பக்கத்தினைத் தாங்கள் விரும்பியவாறு நிறம் மாற்றியுள்ளேன். சரிதானா என்று சரிபார்க்க வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன்,--Meykandan (பேச்சு) 13:11, 13 மே 2020 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 14:34, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:14, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:04, 4 அக்டோபர் 2019 (UTC)

மேலடி[தொகு]

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left
right
middle


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4
ஒளவையார்

நன்றி -- Balajijagadesh (பேச்சு) 03:27, 12 மே 2020 (UTC)


ஐயா, தங்களின் அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி. இன்னும் பல ஐயங்கள் உண்டு. தங்களை நேரில் சந்திக்க இயலுமா? அல்லது தொலைபேசி மூலம் உரையாட இயலுமா? தெரிவிக்கவேண்டுகின்றேன். நன்றி. அன்புடன், --Meykandan (பேச்சு) 08:11, 12 மே 2020 (UTC)

அய்யா. இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். ஒவ்வொரு பத்திக்கும் {{Gap}} கொடுக்கத் தேவையில்லை. நன்றி -- Balajijagadesh (பேச்சு) 05:55, 13 மே 2020 (UTC)


தானியக்க எழுத்துணரி[தொகு]

Indic OCR button

அய்யா, Index:அகநானூறு களிற்றியானை நிரை.djvu நூலை மெய்ப்பு செய்யும் பொழுது ஒவ்வொரு பக்கத்திலும் புதிதாக மீண்டும் தட்டச்சு செய்யத் தேவையில்லை. இதனால் தங்களுக்கு நிறைய நேர விரையம் ஏற்படும். இதனை கணினியே செய்ய ஒரு கருவி உள்ளது. அதன் பெயர் Indic OCR button. இதனை சொட்டுக்கினால் ஒளிவளி எழுத்துணரியால் (OCR) தானாகவே உரை கிடைத்துவிடும். அதனை சரியாக உள்ளதா என்று பார்த்து வடிவமைப்பு மாறுதல் மற்றும் செய்தால் போதும். அந்த கருவி இருக்கும் இடத்தை வலது புறத்திலுள்ள படத்தில் தாங்கள் காணலாம். எனது எண்னை தங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 10:12, 14 மே 2020 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Meykandan&oldid=1105851" இருந்து மீள்விக்கப்பட்டது