பயனர் பேச்சு:Sengai Podhuvan

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சுந்தர் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி என்னைப்பற்றிய குறிப்பில் என் முகவரியை நீக்கிவிட்டேன். குறுந்தொகையில் தொடங்கியுள்ளேன். பாருங்கள். கருத்தைத் தெரிவித்து ஆற்றுப்படுத்துங்கள்.--Sengai Podhuvan 07:43, 8 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

விக்கி-மூலம் பாடல் 2ல் உள்ள இறையனார் என்னும் புலவர் பெயரை விக்கி-தளத்தில் உள்ள இறையனார் என்னும் என் கட்டுரையோடு இணைக்க வழிகாட்டுங்கள்.--Sengai Podhuvan 08:41, 8 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

விக்கி மாரத்தான்[தொகு]

விக்கி மாரத்தானின் ஒரு பகுதியாக நவம்பர் 14, 2010 அன்று தமிழ் விக்கி மூலத்தில் தாங்கள் தொடர்ச்சியாகப் பங்களித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 08:08, 11 நவம்பர் 2010 (UTC)[பதில் அளி]

  • தமிழ்த்துளி பக்கங்களை விக்கிக்கு உகந்த வகையில் சற்றே மாற்றி விக்கி மூலத்தில் பதிவேற்ற விரும்புகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:37, 1 ஜூலை 2015 (UTC)

குறுந்தொகை[தொகு]

வணக்கம் ஐயா, விக்கிமூலத்தில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பு அருமை. வாழ்த்துக்கள். குறுந்தொகை பக்கத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளேன். அதில் இருந்து தேவையான பக்கங்களை ஒருங்கிணைக்கலாம் என நினைக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 02:27, 13 ஜனவரி 2011 (UTC)

அன்புள்ள கனகு அவர்களுக்கு வணக்கம். ஒருங்கிணைக்கும் தங்கள் எண்ணம் மிகச் சிறந்தது. இணைத்தால் ஒத்திட்டுப் பார்க்கும் ஆய்வாளர்களுக்கு உதவியாக அமையும். அன்புள்ள --Sengai Podhuvan 21:23, 13 ஜனவரி 2011 (UTC)

குறுந்தொகை பாருங்கள். அனைத்துப் பாடல்களையும் விக்கி மூலத்தில் பதிவேற்ற விருப்பம் --Sengai Podhuvan (பேச்சு) 23:42, 1 ஜூலை 2015 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Sengai Podhuvan,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello Sengai Podhuvan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)[பதில் அளி]

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:17, 29 ஜூன் 2015 (UTC)

ஆக்கங்களின் மூல நூல்கள், மின் மூலங்கள்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிமூலத்தில் தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிக்கு நன்றி. தங்கள் பங்களிப்புகள் தொடர்பாக பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன:

  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்களின் மூல நூல்கள் பற்றிய விவரங்கள் தேவை. நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, வெளியிட்ட ஆண்டு, எத்தனையாவது பதிப்பு, ISBN எண் (இருந்தால் மட்டும்) போன்ற விவரங்கள் உதவும். இந்த விவரங்களைச் சேர்ப்பதன் வழி மூல நூலின் நம்பகத்தன்மை, அவை திரிபுகள், பிழைகள் இன்றி மின்னாக்கம் பெற்றுள்ளன என்பதை வாசகர்கள் உறுதி செய்யலாம்.
  • தாங்கள் பதிவேற்றும் ஆக்கங்கள் தாங்களே கைப்பட தட்டச்சு செய்ததா அல்லது இணையத்தில் ஏற்கனவே உள்ளவற்றைப் படியெடுத்து இடுகிறீர்களா? படியெடுத்து இடுகிறீர்கள் என்றால் அப்படிகள் முதலில் இடம்பெற்ற தளங்களின் விவரங்கள் தேவை. எடுத்துக்காட்டுக்கு, மதுரைத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம் முதலிய தளங்களில் பல சங்க இலக்கியங்கள் ஏற்கனவே தொகுக்கப்பெற்றுள்ளன. இத்தகைய தளங்களுக்கு இணைப்பு தந்து நன்றி நவில்வதன் மூலம் உறவு நிறுவனங்களுடன் இணக்கத்தைப் பேணலாம்.

இந்த விவரங்களை அந்தந்த ஆக்கங்களின் முதன்மைப் பக்கங்களின் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம்.

ஒரு வேளை, நீங்கள் கைப்படவே தட்டச்சு செய்கிறீர்கள் என்றால், அதனைத் தவிர்த்து கூகுளின் ஒளிவழி எழுத்துணரிக் கருவியைக் கொண்டு தானியக்கமாகப் பெருவாரியான பக்கங்களைப் பதிவேற்றலாம். இதன் மூலம் உங்கள் நேரமும் உழைப்பும் மிச்சப்படும். இது தொடர்பாக உதவி தேவையெனில் உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:18, 19 ஏப்ரல் 2016 (UTC)[பதில் அளி]

முத்தொள்ளாயிரம்[தொகு]

முத்தொள்ளாயிரம் இடையில் பல பாடல்கள் சேர்க்கப்படவில்லை. தங்கள் கவனத்திற்கு. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:33, 17 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

பதிப்பைக் குறிப்பிட்டுப் பாடல்களை இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 21:06, 17 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

சரி ஐயா. அப்படியே செய்யலாம் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:29, 18 செப்டம்பர் 2016 (UTC)[பதில் அளி]

விவேகசிந்தாமணி[தொகு]

விவேகசிந்தாமணி என்றும் விவேக சிந்தாமணி என்றும் இரண்டு பக்கங்கள் உள்ளது. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:36, 13 நவம்பர் 2016 (UTC)[பதில் அளி]

தமிழ்ப்பாடல் மூலங்கள் பலவற்றைச் செம்பதிப்பாகப் பதிவேற்றிய பெருமகனார் மெய்கண்டான். அவர் சில பாடல்களை மட்டும் விவேகசிந்தாமணி என்னும் தலைப்பில் பதிவேற்றியுள்ளார். விவேக சிந்தாமணி என்னும் தலைப்பில் அனைத்துப் பாடல்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. விவேக சிந்தாமணி எனப் பிரித்து எழுதுவது நன்று. எனவே அவர் பதிவேற்றிய பாடல்களை அப்படியே copy செய்து கட்டுரை இணைப்பு என்ற முறையில் அடிப்பகுதியில் அப்படியே சேர்க்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 13:10, 13 நவம்பர் 2016 (UTC)[பதில் அளி]

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sengai_Podhuvan&oldid=1379719" இருந்து மீள்விக்கப்பட்டது