விக்கிமூலம்:புதுப் பயனர் பக்கம்
உதவிப் பக்கங்கள் · படப்பதிவு வழிகாட்டுதல்கள் · ஒத்தாசை · மெய்ப்புதவி · வார்ப்புருக்கள் · transclusion · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விரைவுப் பகுப்பி · கவிதை · விரிவான கவிதை உதவி · பின்னம் மற்றும் செயல்பாடுகள் · வடிவமைப்பு கையேடு · கேட்க வேண்டுமா?
தொகுத்தல்
[தொகு]ஒவ்வொருவரும் விக்கிமூலத்திலுள்ள பக்கங்களைத் தொகுக்கமுடியும் (இந்தப் பக்கத்தையும் கூட). ஏதாவதொரு பக்கத்துக்குத் திருத்தம் தேவை என நீங்கள் கருதினால், அப்பக்கத்தின் மேற்பகுதியில் காணப்படும் தொகு இணைப்பைச் சொடுக்குங்கள். சிறப்புத் தகுதிகள் எதுவும் உங்களுக்குத் தேவையில்லை; புகுபதிகை செய்யவேண்டியது இல்லை.
நீங்கள் உதவுவதற்குச் சுலபமான வழி, மற்ற கலைக்களஞ்சியங்களைப் பயன்படுத்துவது போல் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதுதான். ஆனால், ஏதாவது பிரச்சினையோ, எழுத்துப் பிழையோ அல்லது தெளிவற்ற வாக்கியமோ கண்டால், அதனைத் திருத்துங்கள். ஒரு பக்கத்தை முன்னேற்றுவதற்கு, ஏதாவது வழியிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், பயமின்றி திருத்துங்கள். பிழை விட்டுவிடக்கூடும் என்பது பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். ஏதாவது சிறு பிழையேற்பட்டால், நீங்களோ வேறு யாருமோ எளிதாகப் பின்னர் சரி செய்துவிட முடியும்.
முன்தோற்றம் காட்டு
[தொகு]இனி நீங்கள் பயன்படுத்த வேண்டிய அடுத்த செயல்பாடு முன்தோற்றம் காட்டு பொத்தான். மாற்றங்களைச் செய்து பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள முன்தோற்றம் காட்டு பொத்தானைச் சொடுக்கவும்.இப்போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு முன்னர் பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு; இந்தச் செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும்.தவிர, நீங்கள் வடிவமைப்பில் சோதனைகளையும் மற்ற மாற்றங்களையும் செய்யும்போது பக்க வரலாற்றை நிரப்பாமல் எளிதாக வைத்திருக்க உதவும். முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளைச் சேமிக்க மறக்காதீர்கள் !!
தொகுத்தல் சுருக்கம்
[தொகு]சேமிப்பதற்கு முன், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த விளக்கத்தைத் தொகுத்தல் சாளரம் மற்றும் பக்கத்தைச் சேமிக்கவும்/முன்தோற்றம் பொத்தான்களுக்கு இடையில் உள்ள தொகுத்தல் சுருக்கம் பெட்டியில் இடுவது நல்ல வழக்கமாக (அல்லது "விக்கிநன்னெறி") கருதப்படுகிறது. அது மிகச்சிறியதாக இருக்கலாம்; எடுத்துக்காட்டாகப் பிழைதிருத்தம் என இட்டீர்கள் என்றால், நீங்கள் எழுத்து/இலக்கணப் பிழைதிருத்தம் செய்துள்ளீர்கள் எனப் பிறர் அறிய உதவும். தவிர, உங்கள் மாற்றங்கள் இவ்வாறு சிறு பிழைகளைத் திருத்துவதாக இருந்தால், தவறாது "இது ஒரு சிறு தொகுப்பு" என்பதில் குறியிட மறக்காதீர்கள் (இது நீங்கள் உட்பதிகை செய்திருந்தால் மட்டுமே அமைந்திருக்கும்).
விக்கிப்பீடியா கட்டுரைகளை வடிவமைத்தல் மற்றபிற கணினி சொற்செயலிகளின் செயல்பாட்டிலிருந்து சற்றே வேறுபட்டது. அவற்றில் பயிலும் காண்பதே கோலம் (WYSIWYG) வழிமுறையில்லாமல் விக்கிப்பீடியா எழுத்துக்கோர்வைகளைப் பக்கத்தின் பல பாகங்களைக் குறிக்க பயன்படுத்துகிறது. தொகுத்தலுக்கு எளிதாக உள்ள இந்த "மொழி" பொதுவாக விக்கிடெக்ஸ்ட்(Wikitext) அல்லது விக்கி மார்க் அப்(Wiki-markup) என வழங்கப்படுகிறது.
வடிவமைப்பு
[தொகு]தடித்த மற்றும் சாய்வு எழுத்துகள்
[தொகு]மிகவும் கூடுதலாக பயன்படுத்தப்படும் விக்கி குறிசொற்கள் எழுத்துக்களை தடித்தும் சாய்வாகவும் காண்பிக்க இருப்பவையாம். இவற்றை குறிக்க விக்கிமொழியில் வேண்டும் சொல் அல்லது சொற்றொடரின் இருபுறமும் மூன்று அல்லது இரு ஒற்றை மேற்கோள்குறிகளை(') பயன்படுத்துகிறோம்:
தட்டச்சுவது | கிடைப்பது |
''சாய்வு'' | சாய்வு |
'''தடித்த''' |
தடித்த |
'''''தடித்தும் சாய்ந்தும்''''' |
தடித்தும் சாய்ந்தும் |