விக்கிமூலம்:உதவி

விக்கிமூலம் இலிருந்து

தொகுத்தல் உதவி[தொகு]

  • எழுத்துக்கள் தடித்து(bold) வரவேண்டும் என்றால், எடுத்துக்காட்டாக A என்பது A போல் வரவேண்டுமென்றால், இப்படி சேர்க்க வேண்டும். '''A'''. இதனை எளிதாக A என்ற தட்டச்சு செய்து தொகுப்பு பெட்டியின் மேல் A என்றிருக்கும் பொத்தானை அழுத்தினால் போதும். தானாக அந்த குறியீடு வந்துவிடும்.
  • பக்கங்களில் header (மேலடி), அதாவது பக்க எண்கள் முதலிய தகவல்களை, header பெட்டியில் இடவேண்டும். இயல்பாக தொகுக்கும் பொழுது header பெட்டி மறைந்து இருக்கும். அதனை எப்பொழுதும் பார்க்கும் படி வைக்க வேண்டுமென்றால் பின் வருமாறு செய்யவும்.
விருப்பத்தேர்வுகள் → தொகுத்தல் → Show header and footer fields when editing in the Page namespace

என்னும் தேர்வுக்கும் tick செய்து கீழே சேமி என்ற பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும்.

இப்பொழுது பக்கங்களை தொகுக்கும் பொழுது header and footer பெட்டிகள் தெரியும்.

  • எந்த வரியைத் தொடங்கினாலும் இடம் (space) விட்டு தொடங்க வேண்டாம். இடம் விட்டு தொடங்கினால் அந்த வரி ஒரு பெட்டியினுள் வந்துவிடும். எடுத்துக்காட்டு

வணக்கம் - (இவ்வரியின் ஆரம்பத்தில் இடம் விடவில்லை)

வணக்கம் - (இவ்வரியின் ஆரம்பத்தில் இடம் விட்டுள்ளேன்)

அதனால் எந்த வரியின் தொடக்கத்திலும் இடம் (space) விட வேண்டாம்.

  • ஒரு பக்கத்தின் தொடக்கத்தில் புது பத்தியாக இருந்தால் இரண்டு காலி வரி விடவும். ஒரு பக்கதின் தொடக்கத்தில் முந்தய பக்க பத்தியின் தொடர்ச்சியாக இருந்தால் ஒரு காலி வரி தொடக்கத்தில் விட்டால் மட்டும் போதும்.
  • மெய்ப்பு பார்க்கும் பொழுது ! ? போன்ற குறிகளில் கவனம் கொள்ளுங்கள். மேலும் புத்தகத்தில் “ ” ‘ ’ போன்ற குறிகள் இருந்தால் இதனையே பயன்படுத்தவும். ' " பயன்படுத்தவேண்டாம். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை காணவும். “ ” ‘ ’ போன்ற குறிகளை உள்ளீடு செய்ய, மெய்ப்பு பெட்டியில் மேம்பட்ட --> குறியீடுகள் என்னும் இடத்தில் காணலாம்.

இப்படி செய்தால் புத்தகம் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=விக்கிமூலம்:உதவி&oldid=483873" இலிருந்து மீள்விக்கப்பட்டது