உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம் பேச்சு:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

குறிப்புகள்

[தொகு]

File:Wikisource-Tamil-project-title-size-notification.png என்பதை கவனத்தில் கொண்டு தலைப்பிடவும்.--உழவன் (உரை) 16:18, 4 ஜனவரி 2016 (UTC)

பெறப்பட்ட உரிமத்தை(License-CC0) இணைக்கலாமா?

[தொகு]

த. இ. க. க ஒப்படைத்த மின்னூல் கோப்புகள்(PDF) அனைத்தையும், அது அளித்த பொது உரிமத்தோடு தான் பகிர்ந்து கொள்ளுதல் சிறப்பாகும். நூல்களை நாட்டுடைமையாக்கும் சிறந்த (1950களில்) நடைமுறை, உயர்ந்த தமிழ்நாடு அரசு கொள்கையாகத் திகழ்கிறது. அதனை பிற மாநிலத்தவரும், மற்றவரும் பின்பற்ற பரப்புரை அவசியமாகிறது. அப்பரப்புரையின் ஒரு பகுதியாக, அனைத்து மின்னூல்களிலும், உரிம ஆணவத்தை இணைப்பது மிகவும் அவசியமாகிறது.

  • ஏனெனில், அம்மின்னூல்களில் இது பதிப்புரிமை உள்ள நூல் என பதிப்பகத்தார் பதிவு செய்துள்ளனர். அதனை நீக்குவதை விட, இந்த உரிமத்தை இணைப்பது நன்று.
  • இணைய இணைப்பற்ற நிலையிலும் இந்த உரிமமும், இந்த முன்மாதிரியான திட்டமும் அனைவரிடமும் பரவ வேண்டும்.
  • இம்மின்னூல்களில் மறைமுகமாக (metadata) அதனை உருவாக்கியவர்கள், அவர்களின் பெயர்களை எழுதியுள்ளனர். எனவே, உரிமத்தை இணைப்பது மிக மிக அவசியம் ஆகும்.
  • நம்மிடம் விரல்நினைவக்தின் (pendrive) வழியே, கோப்புகளை நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. அத்தகைய பகிர்தலை இனி அனைத்துலகச் சட்டப்படி பகிர்ந்து கொள்ளலாமே!
  • நிறைய தமிழ் அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் கொடுத்து பல மின்னூல்களை, முழுமையான எழுத்தாவணமாக மாற்ற, இந்த உரிமம் இணைப்பது அவசியம்.

இணைய இணைப்பற்ற நிலையிலும், உரிமம் தொடர வேண்டும் என்பதே என் அவா. மேலும், பல மின்னூல்களின் தரம் மேலும் உயர்த்தப்பட வேண்டும். அப்பொழுதே எழுத்துணரியின் விளைவு பெரும்பாலான பிழைகள் அற்று வரும். அனைத்து வகை பணிகளுக்கும், இந்த உரிமம் இணைப்பது அவசியமெனக் கருதுகிறேன். கொடுத்த நூல்களில் ஒரு பக்கத்தை மேலும் இணைக்கிறோம். அவ்வளவே. மற்றபடி உள்ளது உள்ளபடி பேணப்படுகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவியுங்கள்.--உழவன் (உரை) 05:39, 13 ஜனவரி 2016 (UTC)

ஆதரவு

[தொகு]
  1.  ஆதரவு - பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:04, 15 ஜனவரி 2016 (UTC)
  2.  ஆதரவு பொது உரிமை பற்றிய விவரங்களும் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் முயற்சிகளும் நூல்களில் சேர்க்கப் படுவதை வரவேற்கிறேன். --Tshrinivasan (பேச்சு) 00:58, 16 ஜனவரி 2016 (UTC)
  3.  ஆதரவு --Natkeeran (பேச்சு) 03:36, 16 ஜனவரி 2016 (UTC)
  4.  ஆதரவு --Kanags \உரையாடுக 07:50, 16 ஜனவரி 2016 (UTC)
  5.  ஆதரவு --கி.மூர்த்தி (பேச்சு) 08:29, 16 ஜனவரி 2016 (UTC)
  6.  ஆதரவு --AntanO (பேச்சு) 16:42, 16 ஜனவரி 2016 (UTC)
  7.  ஆதரவு --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:24, 17 ஜனவரி 2016 (UTC)
  8.  ஆதரவு --தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:16, 17 ஜனவரி 2016 (UTC)
  9.  ஆதரவு --Maathavan (பேச்சு) 05:32, 17 ஜனவரி 2016 (UTC)
  10.  ஆதரவு--பா.ஜம்புலிங்கம்--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:12, 17 ஜனவரி 2016 (UTC)
  11.  ஆதரவு --Commons sibi (பேச்சு) 12:48, 17 ஜனவரி 2016 (UTC)
  12. இணைக்கலாம் --Sengai Podhuvan (பேச்சு) 00:52, 18 ஜனவரி 2016 (UTC)
  13.  ஆதரவு --மதனாகரன் (பேச்சு) 03:22, 18 ஜனவரி 2016 (UTC)
  14.  ஆதரவு --தமிழ்ப்பரிதி மாரி Thamizhpparithi Maari (பேச்சு) 07:07, 18 ஜனவரி 2016 (UTC)
  15.  ஆதரவு--Nan (பேச்சு) 11:56, 18 ஜனவரி 2016 (UTC)
  16.  ஆதரவு--மகிழறிவன் (பேச்சு) 12:00, 18 ஜனவரி 2016 (UTC)
  17.  ஆதரவு Sundar (பேச்சு) 14:52, 18 ஜனவரி 2016 (UTC)
  18.  ஆதரவு அருளரசன் (பேச்சு)Arulghsr (பேச்சு) 03:49, 19 ஜனவரி 2016 (UTC)
  19.  ஆதரவு தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:05, 27 பெப்ரவரி 2016 (UTC)

எதிர்ப்பு

[தொகு]

கருத்துக்கள்

[தொகு]

உங்கள் வேண்டுகோள் விளங்கவில்லை. அந்த உரிமத்தின் மாதிரி ஒன்றைப் பகிர்க. நன்றி. --Natkeeran (பேச்சு) 19:06, 13 ஜனவரி 2016 (UTC)

நாம் த.இ.க.க. விடம் இருந்து பெற்ற உரிமத்தை, ஒவ்வொரு மின்னூலிலும் முதற்பக்கமாக இணைக்க வேண்டும். அத்துடன் தமிழ் விக்கிமீடியா-த.இ.க.க. திட்டப்பக்கத்தொடுப்பினை இணைக்க வேண்டும். அதனால் அனைத்துலகச் சட்டம் மூலம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நம்மிடையே நடைமுறையாகும். ஒருவர் நல்ல இணைய இணைப்பில் 100 மின்னூல்களை பதிவிறக்கம் செய்து கொள்கிறார். அவற்றைத் தனக்கும் ஒரு நகல் வேண்டும் என, மற்றொரு நண்பர் கேட்பதாகக் கொள்வோம். இப்படி பகிர்ந்து கொள்ளும் போது, இணைய இணைப்பற்ற நிலையிலும், இந்த திட்டம் குறித்தும், அதன் உரிமமும் தொடர்ந்து அக்கோப்புகளுடனே சென்று, நல்ல விக்கி பரப்புரை வழியாக இருக்கும் என்பதால் தான், உரிமத்தை, நாம்ஒவ்வொரு மின்னூலிலும் இணைத்தல் வேண்டும். உரிமத்தோடு, ஆவணங்களை பகிர்ந்து கொள்ளுதல் என்பது, நமது சமூகத்தில், நாம் விதைக்கும் நல்ல நடைமுறையாகும். --உழவன் (உரை) 00:26, 14 ஜனவரி 2016 (UTC)
  • Here is a sample of front page attached to out of copyright books, edited by project gutenberg.
"The Project Gutenberg EBook of The Gentlemen's Book of Etiquette and Manual of Politeness, by Cecil B. Hartley
This eBook is for the use of anyone anywhere at no cost and with almost no restrictions whatsoever.  You may copy it, give it away or re-use it under the terms of the Project Gutenberg License included with this eBook or online at www.gutenberg.org/license
Title: The Gentlemen's Book of Etiquette and Manual of Politeness Being a Complete Guide for a Gentleman's Conduct in all his Relations Towards Society
Author: Cecil B. Hartley
Release Date: March 28, 2012 [EBook #39293]
Language: English
*** START OF THIS PROJECT GUTENBERG EBOOK BOOK OF ETIQUETTE ***
Produced by Julia Miller, S.D., and the Online Distributed Proofreading Team at http://www.pgdp.net (This file was produced from images generously made available by the internet Archive/American Libraries.)"

இது போல நாமும் தகுந்த உரிமைகள், நன்றிகள், முதலியன அனைத்து முதல் பக்கங்களில் பதித்தால் இந்த புத்தகம் படிப்பவர்களுக்கு உரிமம் பற்றிய தெளிவு மற்றும் நம் பணிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். புதிய பங்களிப்பாளர்கள் கூட வரலாம். பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:04, 15 ஜனவரி 2016 (UTC)

தீர்வு

[தொகு]

முதற்பக்கமான நூலட்டை, பொதுவகத்தின் இக்காட்சியகத்தில் (gallery) தெரிய வேண்டும் என்பதை இரவி முன்மொழிந்ததால், உரிமம் இரண்டாவது பக்கமாக இணைக்கப்பட்டது. அதற்குரிய பைத்தான் நிரலாக்கத்தினை சீனி அளித்தார். உரிமம் இணைத்த பிறகு பொதுவகத்தில் பதிவேற்றிட நமது தேவைக்கு உரிய, சிறந்த தானியக்கப் பதிவேற்றியும் உருவாக்கி அளித்தார்.] அது தற்போதுள்ள பொதுவக ஆவணப் பதிவேற்றிகளை விட சிறப்பு வாய்ந்தது.உழவன் (உரை) 01:59, 24 ஏப்ரல் 2016 (UTC)

உள்ளடக்கம் (Index)

[தொகு]
  1. காண்க - Index:குறிஞ்சி_மலர்.pdf. பின்பு அதன் மேலுள்ள தொகு என்பதனை அழுத்தவும். அப்பொழுது தெரியும் ஆங்கிலச்சொற்களை, தமிழில் மாற்றணும்.
  2. அப்பட்டியலில் இயல்பிருப்பாக djvu என்பது உள்ளது. அதனை pdf என மாற்றணும். ஏனெனில், நாம் அதிகமான pdf கோப்புகளையே கையாளுகிறோம்.
    தீர்வு --உழவன் (உரை)
  3. ஒரு தானியங்கி மூலம் உள்ளடக்க அட்டவணைகளை மேம்படுத்த கருவியை(Index maitanance tool) உருவாக்கணும். எடுத்துக்காட்டாக, 2000க்கும் மேற்பட்ட நூல்களில் முதற்பக்கமாக நூலட்டை அமைந்துள்ளது. இரண்டாவது பக்கமாக, உரிமம் உள்ளது. இறுதி பக்கமாக 90% பின்னட்டை உள்ளது. எனவே, 2000 பக்கங்களைத் திறந்து, Error: The pagelist tag can only be used in the Index: namespace குறிகளை இடணும். ஒவ்வொரு பக்கமாகத் திறந்து, கையால் குறிகளை இடுவதும், அதன்பின்பு மற்றொருவர் அதனை சரிபார்ப்பதும் அயர்ச்சியை உண்டாக்கும். இப்படி இருவர் (2000+2000= 4000) பக்கங்களை பார்த்தால் தான், அப்பக்கங்கள், முதலில் கண்ட குறிஞ்சிமலர் நூலின் உள்ளடக்க அட்டவணையில் உள்ளது போல, சரிபார்த்த பக்கம் பச்சையாகத் தோன்றும். அப்பச்சைத் தோற்றமே, உலக வரிசையில் போட்டியிட ஒரு புள்ளியைப் பெற்றுத் தரும். இப்பொழுது தமிழ் திட்டம் மெய்ப்பு பார்க்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, 37வது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில், மலையாள மொழியே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.எனவே, ஒன்று படுவோம், ஓரிரு நிமிடங்கள் சிறுமாற்றம் செய்வோம். அது பெருமுன்னேறத்தை தந்து, பிற உலக மொழிகளோடு போட்டியிட வழிவகுக்கும். உழவன் (உரை) 01:42, 24 ஏப்ரல் 2016 (UTC)

மாதிரி உள்ளடக்க அட்டவணை

[தொகு]
  1. Index:குறிஞ்சி மலர்.pdf என்பதை மாதிரி உள்ளடக்க அட்டவணையாகக் கொண்டு, அட்டவணைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறேன். எனவே, இனி உங்கள் கருத்தினை அதன் பேச்சு பக்கத்தில் தெரியபடுத்தலாமா?அல்லது இப்பக்கத்திலேயே தொடரலாமா? உழவன் (உரை) 17:03, 3 மே 2016 (UTC)Reply

முதல் மெய்ப்பு பார்க்கப்பட்ட புத்தகம்

[தொகு]

தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டதில் முதலாவதாக அசோகர் கதைகள் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது இப்புத்தகத்தை எந்த வடிவில் தேவைப்பட்டாலும் இந்த கருவி மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதில் சில பக்கங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் சில பக்கங்கள் சரிபார்க்கபட உள்ளது. இதே போல் வெற்றிகரமாக அனைத்து நூல்களும் மெய்ப்பு பார்க்க முனைந்திடுவோம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:53, 3 சூன் 2016 (UTC)Reply

ஆங்கில விக்கிமூல உரையாடல்

[தொகு]

ஆங்கில விக்கிமூல உரையாடல்-ஆகத்து மாதம், 2016-- உழவன் (உரை) 00:04, 19 பெப்ரவரி 2019 (UTC)

பெயர் மாற்றம் தேவை

[தொகு]

தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் தமிழக அரசு வெளியிடுகிறது. எனவே, இந்த முதல் முயற்சிக்கு வரிசையெண் இடணும். எ-கா தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் 1--தகவலுழவன் (பேச்சு). 01:50, 27 நவம்பர் 2021 (UTC)Reply