உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Info-farmer

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
வணக்கம்

உமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். (tha.uzhavan ->gmail->com)

|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|

கவிதை படைப்புகள் விக்கிமூலம் - விக்கித்தரவு சொற்பொருளன்[தொகு]

நீங்கள் பல ஆண்டுகளாக விக்கிமூலத்தில் பங்களித்து வருகிறீர்கள், ஆதலால் உங்களுக்கு விக்கிமூலத்தில் உள்ள நூல்களைப் பற்றி நன்றாக தெரியும் என்று எண்ணுகிறேன்! நீங்கள் சிறந்தது என்று கருதும் 3 அல்லது மேல் கவிதை படைப்புகள் விக்கிமூலத்தில் உரை வடிவத்தில் உள்ளதா? அவற்றினை எல்லாம் எனக்கு தெரிவியுங்கள் அதை நாம் பயன்பாட்டு எடுத்துக்காட்டாக விக்கித்தரவு சொற்பொருளனில் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். விக்கித்தரவு சொற்பொருளன் திட்ட மேம்பாட்டிற்கு உதவும். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 11:00, 9 சனவரி 2024 (UTC)Reply

விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் என்பதில் பனுவல்(text)களைக் காணலாம். சிறந்தவைகளில் நான் திருக்குறளை தான் சொல்வேன். ஆத்திச்சூடி எளிமையாக இருக்கும். கூகுள் விரிதாள் ஒன்றில் சொற்களை இட்டால், சிறந்தவைகளை பிறிரிடம் இருந்து பெறலாம். அடித்தளமிடுவதற்கு மிக்க நன்றி. சிறந்நவைகளை தேட எனக்கு நேரம் ஆகும். எனவே தான் பிறரை அணுக முன்மொழிந்தேன். வினவியமைக்கு நன்றி. பழமொழிகளை தேர்ந்தெடுக்க விருப்பம்.தகவலுழவன் (பேச்சு). 11:07, 9 சனவரி 2024 (UTC)Reply

மிஸஸ். இராதா[தொகு]

வணக்கம். அட்டவணை:மிஸஸ். இராதா.pdf இதில் படிமங்கள் உள்ள பக்கங்கள் தவிர ஏனைய பக்கங்கள் மெய்ப்புப் பார்க்கப்பட்டுவிட்டன.--Booradleyp1 (பேச்சு) 13:52, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி. அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டினை இவ்வாரத்தில் முடிக்கிறேன். --தகவலுழவன் (பேச்சு). 15:09, 1 ஏப்பிரல் 2024 (UTC)Reply

அட்டவணையின் நிலை[தொகு]

அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf -இதன் அனைத்துப் பக்கங்களும் சரிபார்க்கப்பட்டுவிட்டன. ஆனால் அதன் நிலை "மெய்ப்புப்பணி முடிவடையவில்லை" என்று மாறாமல் உள்ளது. என்ன காரணம் எனத் தெரிந்துகொள்ள விழைகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 20 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வணக்கம்.
அருளரசன் மாற்றி உள்ளார். எப்படி என்றால், அட்டவணையைத் திறந்து அதில் உள்ள மெய்ப்புநிலை என்ற கட்டத்தில் உள்ள தெரிவுமுறைகளில் ஒன்றிணை தேர்ந்தெடுக்க வேண்டும். Info-farmer (பேச்சு) 03:55, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply
நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:31, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வார்ப்புரு பயன்பாடு[தொகு]

  • {{hwe|----|----}}
  • {{hws|---|----}}

முன்பக்க முடிவிலும் அடுத்தபக்கத் துவக்கத்திலும் உடைபட்ட வார்த்தைகளுக்கு இவ்விரு வார்ப்புகளின் பயன்பாடு அத்தியாவசியமா இல்லை பயன்படுத்தாமலும் விட்டுவிடலாமா?.--Booradleyp1 (பேச்சு) 14:01, 22 ஏப்பிரல் 2024 (UTC)Reply

ஆம். 2016-18 ஆம் ஆண்டு காலத்தில் இருந்தது. இப்பொழுது முன்பக்க முடிவுச் சொல்லின் இறுதி எழுத்தினை ஒட்டினாற் போல், '-'(hyphen) குறியை இட்டாலே போதும். அப்பதிவினை நீக்க வேண்டும். நினைவு படுத்தியமைக்கு நன்றி. Info-farmer (பேச்சு) 17:52, 22 ஏப்பிரல் 2024 (UTC)Reply
நன்றி. இதேபோல பக்க இறுதியில் அப்பத்தி முடிவடைந்தால்
{{nop}}
இடவேண்டுமா?--Booradleyp1 (பேச்சு) 03:15, 23 ஏப்பிரல் 2024 (UTC)Reply
உங்கள் வினாவுக்கு நன்றி. தேவையில்லை. அதற்கு பதிலாக, ஒருபக்கத்தின் தொடக்கம் அதே பக்கத்தில் இருந்தால், மேலே இரண்டு வெற்று வரிகளை இட வேண்டும். nop வார்ப்புரு அந்த வேலையையே செய்கிறது. ஒரு பக்கமானது, சென்ற பக்கத்தின் தொடர்ச்சி எனில், எந்த வெற்று வரிகளையும் இடத் தேவையில்லை. இம்முறை எதற்கு என்றால், எடுத்துக்காட்டாக, கையடக்க நூலின் பக்கமொன்றில் 4 பத்திகள் இருப்பதாகக் கொள்வோம், இரண்டு கையடக்க நூலின் பக்கங்களை ஒரு A4 தாள் போன்ற பெரிய காகிதத்தில் அச்சிடும் போது, பத்திகள் தனித்தனியாகத் தோன்றும். இரண்டு வெற்றுவரிகள் இடாவிட்டால், பத்திகள் இடையே தோன்றும் இடைவெளி இருக்காது. இரண்டும் ஒன்றாகி, ஒரு பெரிய பத்தித் தோன்றிவிடும். நேரம் இருக்கும் போது ஒரு திரைப்பதிவு செய்து இடுகிறேன். Info-farmer (பேச்சு) 04:15, 23 ஏப்பிரல் 2024 (UTC)Reply
மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:18, 23 ஏப்பிரல் 2024 (UTC)Reply

பொருளடக்கம்[தொகு]

வணக்கம். அட்டவணை:மறைமலையம் 1.pdf இதிலுள்ள பொருளுடக்கப் பக்கத்தின் தொகுப்புப் பக்கத்தில்

\\ DJVU page link|15|33
DJVU page link|39|33 \\

வார்ப்புருவின் இறுதியில் நான் தடித்த வடிவில் குறித்துள்ள '33' என்ற எண் எதனைக் குறிக்கிறது? எவ்வாறு பெறப்பட்டது? அதனைக் காண்பது எவ்வாறு என்று எனக்குக் கூறமுடியுமா? தெளிவு படுத்துனீர்கள் என்றால் காளமேகப்புலவர் தனிப்பாடல்கள் அட்டவணையின் பொருளடக்கப் பக்கத்தை நான் மேம்படுத்தக் கற்றுக்கொள்வேன். எனது அடுத்துவரும் நூல்களுக்கும் அது பேருதவியாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 13:15, 25 சூன் 2024 (UTC)Reply

c:Category:Rapid Fund SAARC 2024 Tamil Wikisource tutorials என்ற பகுப்பில், ஒரு தொடர் திரைநிகழ் பதிவு செய்யத் தொடங்கியுள்ளேன். இரண்டு முடித்துள்ளேன். மீதமுள்ள பதிவுகளையும் இன்னும் ஒரு வாரத்தில் முடிப்பேன். கண்டு வினா எழுப்பவும். பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21 என்பதில் நீங்கள் செய்துள்ள மாற்றங்களை கண்டு மகிழ்ந்தேன். அப்பக்கத்திலுள்ள {.{DJVU page link|1|21}}}} என்பதில் 1என்பதை அழுத்தினால், அது //கடவுள் வணக்கம்// என்ற தலைப்புள்ள பக்கத்தினைக் காட்டும். அதற்கு அடுத்துள்ள //{.{Dtpl|dotline=...|2.| திருமலைராயன் பட்டினத்தே கூறிய செய்யுட்கள்|2}}// என்பதில் தலைப்பு இருமுறை வர வேண்டியது இல்லை. ஒரு சொல் கொண்டு, //{.{Dtpl|dotline=...|2.| திருமலைராயன் பட்டினத்தே கூறிய செய்யுட்கள்|2}}// இப்படி அமைக்கலாம். அதாவது pipe line அடுத்து, தலைப்பின் முதல் வந்தால் போதும். சில நேரங்களில் முழுதலைப்பு கொடுத்தால் இடர் வரும். எனவே தான் //../திருமலைராயன்|// என அமைத்துள்ளேன். எனவே நீங்களும் பின்பற்றினால் நல்லது.
அடுத்து DJVU page link எண்கள் குறித்து..
//திருமலைராயன்... // என்ற தலைப்பு பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/23 என்ற பக்கத்தில் தொடங்குகிறது. 23 என்பதில் அதற்குரிய அச்சுப்பக்க எண் 2 என உள்ளது. எனவே, 23 - 2 = 21 என புரிந்து கொள்ளுங்கள். அதாவது, கூட்டுத் தொகை 23 வர வேண்டும். இந்த எண்களைக் கொண்டு, 2வது தலைப்புக்கும் DJVU page link அமைத்துள்ளேன்.
தீர்வு: //{.{DJVU page link|2|21}}}}// என்பதில் முதலில் வருவது அச்சுத்தாளில் வரும் எண். இங்கு 2 வது தலைப்புக்கு 2 என அச்சிடப்பட்டுள்ளது. 21 என்பது முன்பு கூறியது போல கழித்து வரும் எண். எனவே, அதனை இரண்டாவது எழுதி உள்ளேன். பெரும்பாலும் பிற உட்பிரிவுகளுக்கும் இதே போல அமையுங்கள். அப்பொழுதே இறுதியாக ஒட்டுமொத்தமாக, பிழைத்திருத்தம் செய்த தரவுகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.
திரைநிகழ் பதிவாக செய்ய உள்ளேன். அப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
மேலும் இது குறித்து வினாக்கள் இருப்பின் கேட்கவும். விளக்கம் தருவேன். Info-farmer (பேச்சு) 14:46, 25 சூன் 2024 (UTC)Reply
உங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி தகவலுழவன். நீங்கள் கூறியபடியே பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21 இல் திருத்தங்கள் செய்திருக்கிறேன். சரியாகவுள்ளதா என்று பார்த்துச் சொல்லுங்கள். மேற்கொண்டு ஏதேனும் அங்கு திருத்தம் தேவைப்பட்டாலும் செய்துவிடுங்கள். நான் பக்க வரலாற்றைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:16, 26 சூன் 2024 (UTC)Reply

பக்க ஒருங்கிணைவு படப்பதிவுகள்[தொகு]

c:Category:Rapid Fund SAARC 2024 Tamil Wikisource tutorials என்பதில் பக்க ஒருங்கிணைவு (transclution) குறித்த அறிமுகங்களை திரைநிகழ்ப்படங்களாக பதிவிட்டுள்ளேன். இது குறித்த வினாக்கள் இருப்பின் தெரிவிக்கவும். அவசரமில்லை ஆனால் உங்கள் பின்னூட்டத்தைத் தாருங்கள். Info-farmer (பேச்சு) 04:10, 28 சூன் 2024 (UTC)Reply

முதல் காணொலி பார்த்தேன். தெளிவாக உள்ளது; புரிகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிடிஎஃப் அரேஞ்மென்ட் கருவி லினக்சில் மட்டும்தான் உள்ளது என்ரு சொல்லியிருக்கிறீர்கள். விண்டோசில் செய்வதற்கான கருவி உள்ளதா?--Booradleyp1 (பேச்சு) 13:35, 28 சூன் 2024 (UTC)Reply

நான் 2011 முதல், முதல் இந்திய விக்கிமாநாட்டிற்குப் பிறகு, வின்டோசு பயன்படுத்துவதில்லை. வின்டோசு பயன்படுத்தும் நண்பர்களும் எனக்குக் குறைவு. எனினும் முயற்சிக்கிறேன். அதற்கும் பக்க ஒருங்கிணைவு செய்வதற்கும் தொடர்பு இல்லை. அக்கருவி மின்னூல்களைப் பதிவேற்றும் நண்பர்களுக்கான நல்ல கருவி. Info-farmer (பேச்சு) 15:26, 28 சூன் 2024 (UTC)Reply
தகவலுக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:39, 28 சூன் 2024 (UTC)Reply
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=1624901" இலிருந்து மீள்விக்கப்பட்டது