பயனர்:TI Buhari

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பங்கேற்புக்கான விருதுகள்

நான், M. தாஹா இப்ராஹிம் புஹாரி, College of Engineering, Guindyல், M.Sc(Applied Mathematics) 1979ம் ஆண்டு முடித்தவன். பின் 1980லிருந்து சுமார் இரண்டரை ஆண்டுகள், பின்னி நிறுவனத்தில் Computer Departmentல் பணி புரிந்தேன்.1982 ம் ஆண்டு, Indian Oil Corporationல், programmer ஆகச் சேர்ந்து, 2016ல் Chief Manager (Information System) ஆக ஒய்வு பெற்றேன். தமிழில் மிகுந்த ஆர்வம் உள்ளவன்.

மூத்த மகன், அமெரிக்காவில் துணைவியார் மற்றும் மகன், மகளுடன் வசிக்கிறார்.

இரண்டாம் மகன், எங்களுடன் சென்னையில், தம் துணைவியார் மற்றும் மகள்கள் இருவருடன் வசிக்கிறார்.

மூன்றாம் மகன், சேலம் Government College of Engineeringல் B.E.(Metallaurgy) முடித்துவிட்டு, பின், சுவீடனில் MS(Material Science)ல் தேர்ச்சி பெற்று, தற்போது இலண்டனில் Ph.D. முடிக்கச் சென்றுள்ளார்.

எம் தந்தையார், மௌலானா அப்துல் வஹ்ஹாப் M.A, B.Th அவர்கள், இஸ்லாமிய அறிஞர். சிறந்த தமிழ் எழுத்தாளர். ஆங்கிலம், தமிழ், அரபி, மலையாளம், உருது, பார்சி, பிரெஞ்சு ஆகிய ஏழு மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர்கள்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், Authours' Guild of Indiaவின் Vice President ஆகவும் இருந்தார்கள். தம் 'தித்திக்கும் திருமறை' என்ற நூலுக்காக, தமிழக அரசின் சமய நூலுக்கான முதல் பரிசு பெற்றார்கள். சமகாலத்திய எழுத்தாளர்களான கல்கி, தேவன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, எஸ்.ஏ.பி, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், மணியன், விக்கிரமன், பால்யூ அ.லெ.நடராஜன்,அரு. இராமநாதன் ஆகிய மிகப் பல எழுத்தாளர்களுடன் நெருக்கம் கொண்டவர்கள். "பிறை" என்னும் இஸ்லாமிய மாத சஞ்சிகையை நடத்தி வந்தார்கள்.

தமிழ்வாணன் அவர்கள், எம் தந்தையாருடன் கொண்டிருந்த ஆழ்ந்த நட்பின் காரணமாக, தம் 'சங்கர்லால்' நாவல்களில் வரும் கதாபாத்திரம் ஒருவருக்கு, அப்துல் வகாப் [இன்ஸ்பெக்டர் என்று எண்ணுகிறேன்] என்று பெயரிட்டிருந்தார்.

எம் தந்தையார் 2002ல் மறைந்தார்கள்.

கருவிகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:TI_Buhari&oldid=1340673" இருந்து மீள்விக்கப்பட்டது