உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sriveenkat

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Info-farmer in topic {{Reflist}.}

வரவேற்பு

[தொகு]
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Sriveenkat!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.


Sridhar G (பேச்சு) 00:19, 31 சனவரி 2023 (UTC)Reply

நிகழ்பட உதவி

[தொகு]

விக்கிமூலத்தில் தொகுக்க இந்தப் பக்கம் உங்களுக்கு உதவலாம். வேறு சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும். நன்றி Sridhar G (பேச்சு) 00:20, 31 சனவரி 2023 (UTC)Reply

குறிப்பு ஒலிநூல்

[தொகு]

பாரதியாரின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு/முதல் அத்தியாயம்

கற்றலுக்கான குறிப்புகள்

[தொகு]
  1. விக்கிமூலம்:விக்கி நிரல்கள் என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு கற்கவும்
  2. விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 5 என்ற பக்கத்திலேயே வழிகாட்டுதல்கள் உள்ளன.
  3. அவனைவரும் பின்பற்றும் போட்டி விதிகளின் படி இல்லையெனில் அப்பக்கத்தினை மதிப்பெண் உங்களுக்கு நடுவர்களால் வழங்க இயலாது. எனவே ஒவ்வொரு பக்கத்தின் வடிவத்திற்கு நீங்களே முழுபொறுப்பு.
  4. தொடர்ந்து பொதுவான நடைமுறைகை நீங்கள் பின்பற்றவில்லையெனில், சிறிது காலம் உங்களால் இத்திட்டப் பக்கத்தில் பங்களிக்க இயலாதபடி நிறுத்தி வைக்கப்படுவீர்கள் எனவே கருத்தில் கொண்டு கற்கவும்.
  5. குறிப்புகளை இங்கேயே தருக. பிறகு நேரம் இருக்கும் பொழுது வழிகாட்டுதல் தருவேன். வேறு பணிகள் உள்ளன. உடனுக்குடன் உங்கள் வினாக்களுக்கு பதில் எழுத இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். நான் கற்பிக்கும் நேரம் இதுவல்ல. வேறு பணிகள் உள்ளன.காத்திருக்கவும். --தகவலுழவன் (பேச்சு). 01:23, 5 ஏப்ரல் 2023 (UTC)
  1. மிக்க நன்றி, விக்கி நிரல்களை கற்றுக் கொண்டு செய்யகிறேன்.

(பேச்சு) 02:03, 5 ஏப்ரல் 2023 (UTC)

  1. #:@Info-farmer விக்கி நிரல்களை சிறிது கற்றுக் கொண்டு சில பக்கங்களைத் மெய்ப்புப் செய்து உள்ளேன். தொடர்ந்து பொதுவான நடைமுறைகை நீங்கள் பின்பற்றவில்லையெனில், சிறிது காலம் உங்களால் இத்திட்டப் பக்கத்தில் பங்களிக்க இயலாதபடி நிறுத்தி வைக்கப்படுவீர்கள் எனவே கருத்தில் கொண்டு கற்கவும். எனக்கு விக்கி மூலத்தில் பொதுவான நடைமுறை பற்றி தெரிய வேண்டும், விக்கி மூலத்தில் பொதுவான நடைமுறை உள்ள பற்றி ஏதேனும் இணைப்பை கொடுங்கள். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிலளியுங்கள். நன்றி!
    Sriveenkat (பேச்சு) 03:16, 11 ஏப்ரல் 2023 (UTC)
    கற்கும் காலத்தில் விதிகளைக் கற்பதை விட, ஒரே ஒரு நூலினை, உங்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுங்கள். அதில் ஒரு பத்து பக்கம் எழுத்துப்பிழைகளை மட்டும் முழுமையாகக் களையுங்கள். ஒரு பக்கம் உங்களால் முழுமையாக எழுத்துப்பிழை களையப்பட்டுள்ளது என பிறர் அறிய ஊதா நிறத்திற்கு மாற்றுங்கள். விக்கிமூலம்:உதவி என்ற பக்கத்தில் பலவித வழிகாட்டல்கள் உள்ளன. அவற்றைக்கொண்டு வடிவமிடுவது குறித்து கற்கவும். நானும் தொடர்ந்து கற்றே வருகிறேன். கற்றல் என்பது நூலுக்கு நூல் மாறுபடும். ஆனால் ஒவ்வொரு நூலுக்கும் சில கூறுகள் தொடர்ந்து இருக்கும். எடுத்துக்காட்டாக, தடிமனான எழுத்துரு, எழுத்துருவை பெரிதாக்குதல், நடுவில் சொற்களை அமைத்தல், மேலடி, கீழடியில் பயன்படும் வார்ப்புருக்கள் இப்படி... இதுபோல பலநூல்கள் கற்றால், நீங்கள் பிறருக்கு வழிகாட்டலாம். தகவலுழவன் (பேச்சு). 08:53, 13 ஏப்ரல் 2023 (UTC)

தமிழ் எண் 5

[தொகு]

வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். வீட்டுச்சூழ்நிலை காரணமாக விக்கிமூலம் வர இயலவில்லை. பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/26 என்ற பக்கத்தின் தமிழ் எண்களைப் பாருங்கள் குறிப்பாக எண் ஐந்து என்பது துமிழ் எழுத்தான ரு அல்ல. எனினும் அதனையே பலர் பயன்படுத்துகின்றனர். அதுபோன்று இன்னும் சில எண்கள். துமிழ் எழுத்தான ரு என்பதன் சுழி மேலும் சுழன்று கீழே இறங்க வேண்டும். ஒருங்குறியிலேயே தவறு உள்ளது. எனவே, எழுத்துரு உருவாக்க வேண்டும். நம் முன்னோர்கள் நுண்ணிய வேறுபாட்டால் எண்ணை உருவாக்கியுள்ளனர் என்பதை நாம் மறக்கலாமா? இன்னும் 10 நாட்கள் நான் அதிகம் இப்பக்கம் வர இயலாது. உங்களுக்கு நேரம் இருந்தால் இந்நூல் முழுவதும் ஆய்க. தகவலுழவன் (பேச்சு). 01:53, 23 ஏப்ரல் 2023 (UTC)

நான் நலமே இப்பொழுது நான் பங்களிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளேன். மிக்க நன்றி Sriveenkat (பேச்சு) 01:56, 23 ஏப்ரல் 2023 (UTC)
@Info-farmer பிறகு எனக்கு நேரம் கிடைக்கும் போது. தமிழ் எண்களுக்கான சரியான வடிவத்தை இன்ஸ்கேப் (Inkscape) பயன்படுத்தி உருவாக்கலாம். யூனிக்கோட்டில் தவறாக இருப்பது வருத்தம் அளிக்கிறது, இதைப் பின்பற்றி வந்த தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் ஒருங்குறி உள்ள தவறை சரி செய்யலாம் என்று எண்ணுகிறேன் Sriveenkat (பேச்சு) 05:49, 23 ஏப்ரல் 2023 (UTC)
@Info-farmer நீங்கள் எழுத்துரு (font) ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறினீர்கள். அதற்காக கட்டற்ற மின் பொருட்களில் எழுத்துரு உருவாக்க ஒரு மின்பொருள் உள்ளது. Fontforge
மேலும் காண்க

நான் இன்ஸ்கேப் பயன்படுத்தி உருவாக்கியா எண் ஐந்து

Sriveenkat (பேச்சு) 07:28, 25 ஏப்ரல் 2023 (UTC)
நீங்கள் முயற்சித்தால் நன்றாக இருக்கும். நான் இனிதான் இதுகுறித்து கற்க வேண்டும். முதலில் அசைப்படப் பதிவினை உருவாக்க இயலுமா? ஒரு வாரம் கழித்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன். தகவலுழவன் (பேச்சு). 22:51, 25 ஏப்ரல் 2023 (UTC)
கண்டிப்பாக முயற்சி எடுக்கலாம். அதற்கு உங்கள் போன்றவர்கள் உதவி தேவை. நாம் எழுத்துரு வடிவத்தை இன்ஸ்கேப் பயன்படுத்தி உருவாக்க வேண்டும். ஏனென்றால் இன்ஸ்கேப்பில் செய்ய எளிமையாக இருக்கும். நீங்களும் இன்ஸ்கேப் பயன்படுத்தி உருவாக்கி பார்க்கலாம்
அசைப்படங்களை நான் நேரம் கிடைக்கும்போது சிறு சிறிதாக செய்து வருகிறேன். இப்பொழுது கெ, கே, கொ உருவாக்கிக் கொண்டு வருகிறேன். மேலும் தமிழ் ஐந்து நான் உருவாக்கிய திசையன் படம் சரியாக உள்ளனவா என்பதை தெரிவியுங்கள் நன்றி Sriveenkat (பேச்சு) 03:01, 26 ஏப்ரல் 2023 (UTC)
@Info-farmer இதை குறித்து கற்க உதவும் இணைப்புகள்
  1. Design With FontForge
  2. Tutorial — FontForge 20230101 documentation
  3. The Unicode Standard, Version 15.0 மின்னூல் பக்கம் எண்: 48
நிகழ்படங்கள்
  1. Introduction to FontForge - YouTube
  2. Drawing Malayalam letter ക using inkscape - YouTube
தகவலுழவன் அவர்களே உங்களுக்கு கற்க உதவும். நன்றி Sriveenkat (பேச்சு) 06:58, 26 ஏப்ரல் 2023 (UTC)

இதனை மட்டுமாவது அசைப்படமாக உருவாக்கித் தாருங்கள். பிறரிடம் உரையாட வசதியாக இருக்கும். மற்றவற்றை மலையாளம் படைப்புகளுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இறுதியாக வரும் சுற்று ஒட்டி வராமல் இருந்தால் மேலும் நன்றாக இருக்குமென்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:04, 26 சூன் 2023 (UTC)Reply

தமிழ் எண் ஐந்து அசைப்படம்
வணக்கம் @Info-farmer, நீங்கள் கூறியபடி தமிழ் எண் ஐந்து அசைப்படத்தை உருவாக்கி விட்டேன், அதேபோன்று இறுதி சுற்று ஒட்டி வராமல் சிறிது நகர்த்தி உள்ளேன். சிறிது அகத்திய கோப்பை .svg படத்திலும் மாற்றி விட்டேன். இதைப் பற்றி பிறரிடம் விக்கி திட்டங்களில் உரையாடும்போது என்னை {{ping}} செய்யுங்கள். நன்றி மீண்டும் தொடர்வோம்! Sriveenkat (பேச்சு) 08:17, 26 சூன் 2023 (UTC)Reply
தமிழ் எண்களுக்கான என் ஆய்வுக்குறிப்புகள் - கூகுள் டாக்ஸ் வணக்கம், @தகவலுழவன் இந்த இணைப்பு தமிழ் எண்களுக்கான குறிப்பு. ஒருங்குறியும் நீங்கள் பகிர்ந்த நூலையும் ஒப்பீடு செய்துள்ளேன். நீங்கள் இதில் ஏதாவது மாற்றங்கள் செய்ய விரும்பினால் செய்யுங்கள் தங்களது குறிப்புகளையும் கட்டாயம் இடுங்கள். நம் முன்னோர்கள் பயன்படுத்திய சரியான எண் வடிவத்தை கொண்டுவருவோம்! இந்த கூகுள் கோப்பை தங்களுக்கு நேரம் இருக்கும் போது அடிக்கடி கவனிக்கவும். ஏனெனில் தமிழ் எண்களுக்கான என் செயல்கள் மற்றும் தகவல்கள் சேர்க்கப்படும். இப்பொழுது உள்ள தகவல் சரியாக உள்ளது என்றால் கோப்புக்குள் பின்னூட்டம் (Comment) இடுங்கள். மேலும் இந்த கோப்பை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி Sriveenkat (பேச்சு) 12:00, 28 சூன் 2023 (UTC)Reply
இன்னும் ஓரிரு மாதங்கள் குடும்ப சூழலின் காரணமாக அதிக பங்களிப்புகள் விக்கிமீடியாவிற்க்கு செய்ய இயலாது. உங்கள் முன்னெடுப்புக்களுக்கு நன்றி. இன்னும் பல நூல்களில் இருந்து சான்றுகளைத் தேடுவோம். தமிழ் எண் ஒன்றில் கூட இறுதியாக சுழி இருந்ததை ஏதோ ஒரு நூலில் பார்த்தேன். இப்பொழுது உயிர்மெய்யெழுத்து 'க' என்பதனை ஒன்று என்பது தவறே. எனவே மறுஆய்வும், சீராய்வும் பலருடன் இணைந்து செய்வோம். தகவலுழவன் (பேச்சு). 02:36, 4 சூலை 2023 (UTC)Reply

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/49

[தொகு]

பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/49 மேற்கண்ட பக்கத்தில் விக்கிக்குறியீடுகள் இட்டு மேம்படுத்தியுள்ளேன். இந்நூல் முழுவதும் நீங்கள் எழுத்துப்பிழை நீக்க விருப்பப் பட்டால் மேலடிக்கு மட்டும் பைத்தான் நிரலாக்கம் செய்து அதனை இட்டுத்தருகிறேன். முழுமையாக எழுத்துப்பிழை நீக்கினால் ஊதா நிறம், முழுமையாக விக்கிக்குறியீடுகள் இட்டால் மஞ்சள் நிறம் என்பது நமக்குள் அமைத்துக் கொண்ட விதி. தயவுசெய்து அதனை பின்பற்றுக. விக்கிமூலம்:படப்பதிவு வழிகாட்டுதல்கள் என்பதையும் பயன்படுத்திக் கொள்ளவும். தொடர்ந்து நீங்கள் சிறப்புற நான் கற்றதை உங்களுக்கு அறிமுகம் செய்வேன். தகவலுழவன் (பேச்சு). 02:00, 26 சூன் 2023 (UTC)Reply

@தகவலுழவன் இப்பொழுது புரிந்து கொண்டேன், அதன்படியே எழுத்துப் பிழைகள் முழுமையாக நீக்கி ஏற்ற பிறகு ஊதா நிறத்திற்கு மாற்றுவேன்.
உதவி
எனக்கு இந்த அட்டவணை:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf இந்த நூலை முழுமையாக எழுத்து பிழை செய்ய விரும்புகிறேன். இந்த நூலை எழுத்துணரியாக்கமும் மேலடியும் இட்டுத்தர இயலுமா? Sriveenkat (பேச்சு) 03:30, 26 சூன் 2023 (UTC)Reply
இந்த தொண்டைநாட்டுத் திருப்பதிகள் நூலுக்கும் மேலடி பைத்தான் நிரலாக்கம் செய்து இட்டுத்தாருங்கள். நன்றி! Sriveenkat (பேச்சு) 15:44, 26 சூன் 2023 (UTC)Reply

gap வார்ப்புரு

[தொகு]

ஒவ்வொரு பத்திக்கும் முன்னால் gap வார்ப்புரு இடத்தேவையில்லை. அச்சுப்புத்தகம் என்பதால் இந்த வடிவமைப்பைப் பேணினர். ஆனால் நாம் பலவிதமான வடிவங்களில் பதிவறிக்கம் செய்ய, இங்கு பிழைத்திருத்தம் செய்து அவசியமான விக்கிக்குறியீடுகளை மட்டுமே இடுகிறோம். இந்த அச்சுவடிவம் பிற பதிவறிக்க வடிவங்களுக்கு பயன்படாது. சில வடிவத்தில் இடர் கூட ஏற்படுத்தும். எனவே அந்த வார்ப்புருவை இட வேண்டாம். எனினும், உங்களுக்கு அந்த தோற்றம் வர, பயனர்:Info-farmer/common.css என்ற பக்கத்தில் நுடபம் செய்து இருப்பது போ, நீங்களும் உங்கள் பக்கத்தில் செய்து கொண்டால் அந்த வார்ப்புரு இடாமலே அவ்வடிவம் தோன்றும். தகவலுழவன் (பேச்சு). 01:42, 9 சூலை 2023 (UTC)Reply

சரி நீங்கள் கூறியதை பின்பற்றுகிறேன் நன்றி! Sriveenkat (பேச்சு) 12:32, 9 சூலை 2023 (UTC)Reply

{{Reflist}.}

இதன் பயன்படுத்தியுள்ளேன். தொடர்ந்து பங்களிக்கின்றமைக்கு மிக்க நன்றி. காண்க பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/97 தகவலுழவன் (பேச்சு). 00:25, 15 சூலை 2023 (UTC)Reply

File:NotoSans - Document With Text - 1F5B9.svg

[தொகு]

வணக்கம்

விக்கித்தரவில் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்கிறீர்கள். பல குறிப்புகளை விக்சனரியில் ஒரு பக்கமாக சேமித்து வைத்தால் நன்றாக இருக்கும். பல நண்பர்கள் டெலிகிராமினைப் பயன்படுத்துவதில்லை என்பதால் இந்த வேண்டுகோள். மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து செயற்படுவீர்கள் என்றே எண்ணுகிறேன்.

File:NotoSans - Document With Text - 1F5B9.svg என்ற படத்தினை விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் என்பதில் பயன்படுத்துகிறேன். மற்ற படங்களுக்கு கோப்புநீட்சி (file extension) தெரிவது போல, இந்த படத்தினைக் கொண்டு svg வடிவத்திலேயே "txt" என்பதை அமைத்துத்தாருங்கள். நான் தேடிப்பார்த்தேன். இல்லையென்றே எண்ணுகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:36, 4 செப்டம்பர் 2023 (UTC)

சரி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 01:48, 4 செப்டம்பர் 2023 (UTC)
File:Icon for wikisource export tool TXT.svg இதனை ஏற்கனவே உருவாக்கியுள்ளேன். மறந்துவிட்டேன். அதனால் விக்சனரியில் விக்கித்தரவு குறித்து வழிகாட்டுதல் பக்கத்தினை சிறப்பாக எழுதுங்கள். தகவலுழவன் (பேச்சு). 01:52, 4 செப்டம்பர் 2023 (UTC)
வணக்கம் @Info-farmer இது எனது தனிப்பட்ட கருத்து, இந்த சின்னங்கள் ஒரு வடிவத்தில் கோப்புகளை பதிவிறக்குதல். ஆதலால் இக்கோப்பு பதிவிறக்க போகின்றது என்பதை இந்த சின்னங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஆதலால் நாம் இந்த .svg கோப்புகளில் பதிவிறக்கம் சின்னத்தை இணைத்தால் நன்று.
இது குறித்து நான் உரையாட ஒரு மாதம் முன்பு எண்ணினேன், ஆதலால் நான் concept art உருவாக்கியுள்ளேன். அதை நான் தங்களோடு மாலை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 02:22, 4 செப்டம்பர் 2023 (UTC)
ஆம் உங்கள் கூற்று சரியே. எனது உடல்நிலை முன்பு போல இயல்பாக இல்லை. எனவே பல நுட்பங்களைத் தவிர்கிறேன். நீங்கள் உருவாக்கி முன்மொழியுங்கள். அதனை பிறருக்கும் தெரியப்படுத்தி நடைமுறை படுத்தி விடலாம். சிறப்புற அமைய வாழ்த்துக்கள். தகவலுழவன் (பேச்சு). 02:26, 4 செப்டம்பர் 2023 (UTC)
@Info-farmer தற்போது ePub-க்கு (காண்க) மட்டும் உருவாக்கியுள்ளேன். எப்படி இருக்கின்றது என்பதை தெரிவிக்கவும் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 10:55, 4 செப்டம்பர் 2023 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sriveenkat&oldid=1518118" இலிருந்து மீள்விக்கப்பட்டது