பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருஅட்டபுயகரத்து எம்மான்

31

தருகின்றான். இதனை நீங்களே காணுங்கள்” என்று கூறுகின்றாள் ஆழ்வார் நாயகி. இங்ஙனம் பரகாலநாயகி தன் தோழிமார்க்கும் அன்னைமார்க்கும் நடந்த வரலாறு கூறுவதாக இந்த எம்பெருமான்மீது மங்களாசாசனம் செய்யப்பெற்றுள்ள திருமொழியில் அடங்கிய காட்சிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நம் மனத்திரையில் அமைகின்றன.

அரியுருவக் காட்சி: அன்று பிரகலாதன் பொருட்டு ‘பேழ்வாய் வாள்எயிற்றுக் கோளரியாயத்’ தோன்றிய பொழுது திரிபுரம் எரித்த சிவபெருமானும் மலர்மிசை மேல் வீற்றிருக்கும் நான்முகனும் அந்தப் பயங்கர உருவத்தைக்கண்டு வியந்தனர். மூன்று உலகத்திலுள்ளவர்களும் கடல் ஒலிபோல் வழிபாட்டு ஒலிகளை முழக்கிக்கொண்டு அப்பேருருவத்தை வணங்கினர். நெருப்புப் போன்ற உளைமயிர்களோடும் கூரியவாள் போன்ற கோரப்பற்களோடும் தோன்றிய நரசிங்கம் இரணியனது மார்பினைப் பிளந்த காட்சியைக் கண்டு வியந்தனர். அந்த நரசிங்க உருவத்தில் எம்பெருமான் ஆழ்வார் நாயகிக்குக் காட்சி தருகின்றான். இவள் ‘ஆர்கொல்’ என்று அயலில் நின்ற ஒருவரை வினவ, எம்பெருமானே ‘நான் அட்ட புயகரத்தேன்’ என்று மறுமொழி பகர்கின்றான். இந்தக் காட்சியில் ஈடுபட்டு மகிழ்வுற்ற நிலையில் திடீரென்று காட்சி மாறுகின்றது.

அடுத்த காட்சிகள்: அமரர்கள் அருமறைகளை ஓதி வணங்கக் காட்சி தருகின்றான் எம்பெருமான். அவரது மேன்மையை நோக்க ‘வெந்திறல் வீரராகவன் போல்’ தோற்றம் அளிக்கின்றான். தாழநின்று பரிமாறும் சீலகுணத்தை நோக்கினால் திருவேங்கடமுடையானின் சேவைபோல் தோன்றுகின்றது. இங்ஙனம் சேவை சாதிப்பவரை இன்னார் என்று இனங்கண்டுகொள்ளுவதற்குமுன் காட்சி மாறுகின்றது. நீர்மையும் மேன்மையும் ஒரே ஆதாரத்தில் விளங்கும் நிலையில், வாமன-திரிவிக்கிரம வடிவத்துடன், காட்சி தருகின்றான் எம்பெருமான். இதனை,

“வந்து குறளுருவாய், நிமிர்ந்து,
          மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன,
          அட்டபுயகரத் தேன்என் றாரே”[1]

  1. பெரி.திரு - 2.8:2