உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Booradleyp1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

வரவேற்புரை

[தொகு]
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Booradleyp1!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

தகவலுழவன் (பேச்சு).  04:21, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

மகிழ்ச்சி

[தொகு]

உங்கள் பதிவுகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மிக்க நன்றி. தொடர்ந்து நேரம் இருக்கும் பொழுதெல்லாம் வாருங்கள். இந்திய விக்கிமூலத்திலேயே பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ள திட்டம் நமது தமிழ் விக்கிமூலம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிகத் தகவல்:விக்கிமீடிய ஆய்வு தகவலுழவன் (பேச்சு). 04:30, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

முடிந்தவரை பங்களிக்க முயல்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:37, 7 அக்டோபர் 2023 (UTC)Reply

மஞ்சள்

[தொகு]

பக்கம்:ஆடரங்கு.pdf/39 என்பதனை மேம்படுத்தியமைக்கு நன்றி. அதில் குறியீடுகளை இட்டு விட்டேன். நீங்கள் மஞ்சள் நிலைக்கு மாற்றக் கோருகிறேன். தகவலுழவன் (பேச்சு). 01:39, 9 அக்டோபர் 2023 (UTC)Reply

மாற்றிவிட்டேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:56, 10 அக்டோபர் 2023 (UTC)Reply

பக்க எண்கள்

[தொகு]

வணக்கம் மிஸஸ். இராதா நூலில் பக்க எண்களை பக்க நடுப்பகுதியில் இடாமல் கீழடியில் இடவும் இந்த மாற்றத்தைப் பார்க்கவும் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:31, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

அவ்வாறே செய்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:40, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

ஒரு பக்கத்தில் பத்தி முடிந்தால்

[தொகு]

வணக்கம் ஒரு பக்கத்தின் இறுதியில் அந்த பத்தி முழுவதும் முடிந்துவிட்டால்

{{nop}}

பயன்படுத்தவும். அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இருவரிகளை விடவும்.--கு. அருளரசன் (பேச்சு) 13:42, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

அருளரசன், நானாக விக்கிமூலத்துக்குள் நுழைந்து திணறிக் கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சுப் பக்கத்திலிருந்த பல குறிப்புகளை எடுத்து சேமித்து வைத்திருக்கிறேன். எனினும் அவற்றைப் பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளது. நீங்களே வந்து வழிநடத்துவதற்கு மிகவும் நன்றி. உங்களது குறிப்பை மறவாமல் செயலாற்றுவேன்.--Booradleyp1 (பேச்சு) 13:49, 22 மார்ச்சு 2024 (UTC)Reply

வார்ப்புருக்களின் பயன்பாடுகளைக் குறைப்போம்

[தொகு]

வணக்கம்.

இங்கு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். குறைவான குறியீடுகளை இட்டே, நாம் தேவையான மாற்றங்களைப் பெற இயலும்.. மேலும் சில குறிப்புகளை மேலுள்ள தொடுப்பிலேயே இட்டுள்ளேன். Info-farmer (பேச்சு) 04:07, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply

நன்றி. இனி இவ்வாறு மேற்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:11, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply
Info-farmer (பேச்சு) 04:12, 21 ஏப்பிரல் 2024 (UTC)Reply
  • கீழடி எண்
    • கீழடியின் இடப்பக்க எண் வரும் போது, rh இடுவதைத் தவிர்க்கலாம். காண்க அதாவது, கீழடியில் இரண்டு வெற்று வரிகளை இட்ட பின்பு அந்த எண்ணை இட்டால் , அந்த எண் நடுப்பகுதி தரவுடன் ஒட்டாமல், தனியே தெரியும்.
    • வலப்பக்கம் எண் வரும் போது, right வார்ப்புருவினை இட்டு அதனுள் அந்த எண்ணை இடுவது எளிதாகும்.
    • இறுதியாக நாம் எழுத்துப்பிழை நீக்கி, விக்கி வடிவம் இட்ட பனுவல்கள் தொகுக்கப்படும் போது, இந்த மேலடியும், கீழடியும் அதனுள் இருக்காது. ஏனெனில், இவை அச்சு வடிவத்தில் ஒரு நூலினை உருவாகும் போதே மேலடி, குறிப்புகள் தேவைப்படும். எனவே, முடிந்தவரை நாம் நடுப்பகுதியினை மட்டும் புதியவர்களுக்கு சொல்லித்தருதல் கூடுதல் பலனைத் தரும். அதனால்தான் மேலடி, கீழடிகளை தானியக்கமாக இட ஏற்கனவே பங்களிப்போர் கற்றல் நல்லது. அது புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.--Info-farmer (பேச்சு) 06:25, 1 மே 2024 (UTC)Reply

நன்றி. கீழடியில் அவ்வாறே செய்கிறேன். மேலடி, கீழடிகளை தானியிக்கமாக செய்ய நான் கற்றுக்கொள்ள முடியுமா? முடியுமானால் எனக்கு சொல்லித் தாருங்கள்.

பயனர்:Booradleyp1/common.css இப்பக்கத்தை நேற்று உருவாக்கினேன். ஆனால் இதன் மூலம் செய்யக்கூடியவை என்னென்ன என்ற விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. இதனையும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:37, 1 மே 2024 (UTC)Reply

OCR server

[தொகு]

வணக்கம்.

தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றமைக்கு அக மகிழ்கிறேன். உங்கள் பணியடர்வைக் குறைக்க, எழுத்துணரியாக்கப் பணிக்கென விக்கி வழங்கியை இயக்க கேட்டுள்ளேன். இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துணரியாக்கப் பணி (ocr) தவிர, பிற ஆக்கப் பணிகள் செய்ய உங்களுக்கு இதனால் நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்கள் அடுத்து செய்ய விரும்பும் நூலினை முன்கூட்டியே கூறினால், மேலடி இடும் பணியைத் தானியக்கமாக பங்களிப்பு செய்யவல்ல, ஒரு பயனரிடம் சொல்லி, செய்து தரச் சொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். Info-farmer (பேச்சு) 10:25, 30 ஏப்பிரல் 2024 (UTC)Reply

விவரங்களும் உதவிக்கும் நன்றி. அடுத்த நூலைத் துவங்கும்போது தெரிவிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:08, 30 ஏப்பிரல் 2024 (UTC)Reply

மெய்ப்புப் பணி முடிக்கப்படாத அண்ணாவின் நூல்கள்

[தொகு]

வணக்கம் அறிஞர் அண்ணாவின் அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf, அட்டவணை:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf ஆகிய நூல்கள் ஓரளவு மெய்ப்பு பார்த்து ஆனால் முடிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் அடுத்து மெய்ப்பு பார்க்க நூலைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நூல்களுக்கு முன்னுரிமை கொடுத்து மெய்ப்பு பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 15:19, 1 மே 2024 (UTC)Reply

செய்கிறேன் அருளரசன்.--Booradleyp1 (பேச்சு) 03:14, 2 மே 2024 (UTC)Reply
நன்றி கு. அருளரசன் (பேச்சு) 06:10, 2 மே 2024 (UTC)Reply

திட்டம் 2

[தொகு]
  1. அட்டவணை:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf
  2. அட்டவணை:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf
  3. அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf
  4. அட்டவணை:கைதி எண் 6342.pdf
  5. அட்டவணை:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf
  6. அட்டவணை:மே தினம், அண்ணாதுரை.pdf
  7. அட்டவணை:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf
  8. அட்டவணை:புதிய பொலிவு.pdf

--Sodabottle (பேச்சு) 10:51, 8 மே 2024 (UTC)Reply

திட்டம் 3

[தொகு]

சங்க இலக்கிய அட்டவணைகள்--Sodabottle (பேச்சு) 06:58, 23 மே 2024 (UTC)Reply

  1. அட்டவணை:திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை.pdf
  2. அட்டவணை:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf
  3. அட்டவணை:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf
  4. அட்டவணை:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf
  5. அட்டவணை:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf

குறிப்பு

[தொகு]

— --Subash Thirunavukkarasu (பேச்சு) 04:43, 20 மே 2024 (UTC)Reply

வேண்டுகோள்

[தொகு]

ஆசிரியர்:கா. அப்பாத்துரை/நூற்பட்டியல் தொழினுட்ப மேம்பாடுகளைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கியுள்ளேன். அச்சுநூல்களை விட இது எளிமையாக இருக்கும். கணியச்சு என்பதால் பிழைகள் குறைவாக இருக்கும். ஏதேனும் ஒரு நூலினை உங்கள் மேலாண்மையில் இம்மாத இறுதிக்குள் செய்து தர கேட்டுக் கொள்கிறேன். உடன் நானும் நுட்பங்கள் கொண்டு துணை புரிவேன்அட்டவணை:அப்பாத்துரையம் 22.pdf - மொழிபெயர்ப்பு கதைகள் என்பது எனது முன்மொழிவு ஆகும். Info-farmer (பேச்சு) 16:28, 7 சூலை 2024 (UTC)Reply

வணக்கம். மாணவப் பயனர்களுக்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து விட்டதால் அவர்களின் விக்கிமூலப் பங்களிப்பு குறைந்து விட்டது. அதனால் இப்பணியில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் முடிந்தவரை மெய்ப்புப் பார்க்கிறேன். நன்றி. Booradleyp1 (பேச்சு) 03:27, 8 சூலை 2024 (UTC)Reply
சரி. நற்றிணை-2 விடுபட்ட பக்கங்களை இணைத்து, புதிய எழுத்துணரியாக்கம் அனைத்துப் பக்கங்களுக்கும் இணைத்து விட்டேன். நேரம் இருக்கும் செயற்படுவீர்களென்றே நம்புகிறேன். மன்னிப்பு என்றெல்லாம் தயவுசெய்து கூற வேண்டாம். ஏதேனும் விக்கிமூல வினாக்கள் இருப்பின் அறிய தருக. செய்தளிக்க கடமை பட்டுள்ளேன். Info-farmer (பேச்சு) 18:26, 9 சூலை 2024 (UTC)Reply
நேரமிருக்கும்போது கண்டிப்பாகச் செய்கிறேன். உங்கள் வழிகாட்டல்களுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. Booradleyp1 (பேச்சு) 02:07, 10 சூலை 2024 (UTC)Reply

பதக்கம்

[தொகு]
பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
பவழபஸ்பம் என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --கு. அருளரசன் (பேச்சு) 09:48, 29 சூலை 2024 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி அருளரசன். உங்களது வடிகாட்டுதல்களே என்னை இந்த அளவு விக்கிமூலத்தில் பங்களிக்க ஊன்றுகோலாயிருந்தது. மேலும் இங்கு பங்களிக்க, என்னை இப்பதக்கம் உற்சாகப்படுத்துகிறது.--Booradleyp1 (பேச்சு) 13:18, 29 சூலை 2024 (UTC)Reply

பொருளடக்கம்

[தொகு]

வணக்கம் ஒரு நூலை பக்க ஒருங்கிணைப்பு செய்யும்போது அந்த நூலில் பொருளடக்கம் இருந்தால், தனியாக பொருளடக்கம் உருவாக்கத் தேவையில்லை. நூலில் உள்ள பொருளடக்கத்தையே பயன்படுத்திக் கொள்ளளாம் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 15:18, 30 சூலை 2024 (UTC)Reply

நன்றி. ஆனால் நூலிலுள்ள பொருளுடக்கத்தில் அத்தியாயங்களின் பெயர்கள் மட்டும்தானே உள்ளன. இங்கு நாம் பதிப்புரை, முன்னுரை போன்ற பிற தலைப்புகளும் உருவாக்குகிறோமே. காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் செய்து தாருங்கள். அதைக் கொண்டு தெரிந்து கொள்கிறேன். Booradleyp1 (பேச்சு) 15:24, 30 சூலை 2024 (UTC)Reply
வணக்கம் காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நூலில் அவ்வாறு செய்துள்ளேன் அதை தாங்கள் முன்மாதிரியாக கொள்ளளாம் கு. அருளரசன் (பேச்சு) 15:33, 30 சூலை 2024 (UTC)Reply
உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அருளரசன். இனி வரும் நூல்களில் அவ்வாறே செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:35, 30 சூலை 2024 (UTC)Reply

கொக்கரகோ

[தொகு]

வணக்கம் தாங்கள் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் நூல்களை மெய்ப்புபார்த்து, ஒருங்கிணைவை மேற்கோண்டு வருவது மகிழ்ச்சி. அவரது பல நூல்கள் மூல நூல் இல்லாமல் காபி பேஸ்ட் முறையில் உருவாக்கபட்டிருந்தன. அவற்றை மூல நூல் கொண்டதாக மேம்படுத்தபட்டு வருகின்றன. ஆனால் அதில் கொக்கரகோ என்ற சிறுகதை மட்டும் எஞ்சியுள்ளது. தாங்கள் மெய்ப்பு பார்க்கும் நூல்களில் இந்தச் சிறுகதை இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். அந்த சிறுகதையை மூல நூல் உள்ள ஒன்றாக மேம்படுத்தலாம் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 07:45, 12 ஆகத்து 2024 (UTC)Reply

நான் கவனிக்கும் நூல்களில் தட்டுப்பாட்டால் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:39, 16 ஆகத்து 2024 (UTC)Reply

மேலும் அண்ணா

[தொகு]
  1. அட்டவணை:புராண மதங்கள்.pdf
  2. அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf
  3. அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf

--Sodabottle (பேச்சு) 09:35, 1 செப்டெம்பர் 2024 (UTC)Reply

மயிலை சீனி வேங்கடசாமி

[தொகு]
  1. அட்டவணை:சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்.pdf
  2. அட்டவணை:சமணமும் தமிழும்.pdf
  3. அட்டவணை:துளுநாட்டு வரலாறு.pdf
  4. அட்டவணை:நரசிம்மவர்மன்.pdf
  5. அட்டவணை:மூன்றாம் நந்திவர்மன்.pdf
  6. அட்டவணை:கிறிஸ்தவமும் தமிழும்.pdf
  7. [1]

--Sodabottle (பேச்சு) 09:46, 1 செப்டெம்பர் 2024 (UTC)Reply

அட்டவணை:கலித்தொகை 2011

[தொகு]

வணக்கம் தாங்கள் அட்டவணை:கலித்தொகை 2011 நூலை மெய்ப்பு பார்த்தவருவது மகிழ்ச்சி. கலித்தொகை என்ற நூல் விக்கிமூலத்தில் உள்ளது. அது விக்கிமூலத்தில் ஓசிஆர் போன்ற தொழில் நுட்பங்கள் வராத துவக்கக் காலத்தில் உருவாக்கபட்டது. அது ஒரு வகையில் தரமும் குறைந்ததே. எனவே அந்த நூல் பக்கங்களை உருவாக்கியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அதை நீக்காமல், மேம்படுத்துவது நல்லது. என்வே தாங்கள் மெய்ப்பு பார்த்துவரும் கலித்தொகை நூலை பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அந்த பழைய நூலின் உள்ளடக்கத்துக்கு மாற்றாக தற்போது பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் பயன்படுத்தி மின் நூலாக மற்ற வேண்டுகிறேன். தேவைப்பட்டால் பக்கங்களை புதிய தலைப்புக்கு நகர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்செயல்கள் தமிழ் விக்கிமூலத்தின் தரத்தினை மேம்படுத்தக் கூடியவையாக இருக்கும்.--கு. அருளரசன் (பேச்சு) 07:19, 24 செப்டெம்பர் 2024 (UTC)Reply

நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு என்னால் செய்ய இயலுமா என்று தெரியவில்லை. இந்த அட்டவணை மெய்ப்பு முடிந்து பக்க ஒருங்கிணைப்பின் போது உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:54, 24 செப்டெம்பர் 2024 (UTC)Reply

அப்படியே ஆகட்டும். மெய்ப்புப் பணி முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்தால் நானேகூட பக்க ஒருங்கிணைவை மேற்கொள்வேன். அதைக் கண்டு தாங்கள் புரிந்து கொள்ளலாம்--கு. அருளரசன் (பேச்சு) 13:09, 24 செப்டெம்பர் 2024 (UTC)Reply
மெய்ப்பு முடிந்ததும் தெரிவிக்கிறேன்--Booradleyp1 (பேச்சு) 13:22, 24 செப்டெம்பர் 2024 (UTC)Reply

நற்றிணை : எழுத்து மயக்கம்

[தொகு]

தோழி,

தமிழ் இலக்கிய நூற்களை, தாங்களும், தோழர் இல்யாஸ் அவர்களும் ஆர்வத்துடன் மெய்ப்பு செய்வதைக் கண்ணுற்றேன். மகிழ்ச்சி.

ஔ மற்றும் அதன் உயிர் மெய்யெழுத்துகளான கௌ முதல் வௌ வரையிலும், மற்றும் வடமொழி எழுத்துகளான ஷௌ, ஸௌ, ஜௌ, ஹௌ ஆகியன தமிழ் மரபுப்படி எழுதப் படாமல், ‘ஒ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து, ‘ஒ’‘ள’ எனவும், இதே போன்று ‘கெ’,‘ள’ ஆகிய இரு எழுத்துகளை இணைத்து கெள ஆகவும், இதே முறையில் ‘ஔ’ வுடன் தொடர்புடைய மற்ற உயிர் மெய்யெழுத்துகளையும், இரு எழுத்துகளாக OCR காண்பிக்கிறது. இது எழுத்து மயக்கத்தைத் தோற்றுவிப்பதால், இவ்வாறு வரக்கூடிய ஔவை, வௌவால், கௌதாரி போன்ற வார்த்தைகள் வரும் போது கவனமாக மெய்ப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, இப்பக்கத்தில் வந்த கௌவை என்ற சொல், ‘கெ’‘ள’வை என்றிருந்தது. திருத்தியுள்ளேன்.

நற்றிணை இரு தொகுதிகளிலும் காணப்பட்ட இவ்வாறான எழுத்து மயக்கங்கள் களையப்பட்டன.

TI Buhari (பேச்சு) 11:10, 12 அக்டோபர் 2024 (UTC)Reply

இதனை இனி வரும் பக்கங்களில் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. Booradleyp1 (பேச்சு) 15:11, 12 அக்டோபர் 2024 (UTC)Reply

நன்றி

[தொகு]

தமிழ் விக்கிமூலத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்களைப் போன்றோரின் பங்களிப்புகள் நானும் என்னால் இயன்ற அளவு பங்கேற்க உந்துதலாக உள்ளது. நன்றி. இரவி (பேச்சு) 07:44, 3 நவம்பர் 2024 (UTC)Reply

வெகுநாட்களுக்குப் பின்னர் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.--Booradleyp1 (பேச்சு) 11:59, 4 நவம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Booradleyp1&oldid=1740139" இலிருந்து மீள்விக்கப்பட்டது