பயனர் பேச்சு:Arularasan. G

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

என் தேவைக்கு: [1], [2], அதிகமானோர் பாரத்த பக்கம்

வருக, அருளரசன் :)--இரவி (பேச்சு) 15:52, 3 மார்ச் 2016 (UTC)

குறிப்பு[தொகு]

கலைக்களஞ்சியப் பக்கங்களை உரையேற்றி வருவதற்கு நன்றி. கூடிய விரைவில் இந்நூலை கூகுள் ஒளிவழி எழுத்துணரி துணையுடன் முழுக்க தானியக்கமாக உரையேற்றப் போகிறோம். முழுப் பக்கத்தையும் கைப்பட எழுதுவதைக் காட்டிலும் அதில் உள்ள சிறு பிழைகளை மட்டும் களைவது இலகுவாக இருக்கும். எனவே, அது வரை நீங்கள் வேறு நூல்களுக்குப் பங்களித்து உதவலாம். பகுப்பு:Index- progress unknown பாருங்கள். இங்கு நூற்றுக் கணக்கான நூல்கள் உள்ளன. இவற்றுள் உங்களுக்குப் பிடித்தவற்றைப் பிழை திருத்தலாம். பக்கங்கள் வெற்றாக இருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். அவற்றை விரைவில் தானியக்கமாகப் பதிவேற்றுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:52, 3 மார்ச் 2016 (UTC)

தங்கள் ஆலோசனைக்கு நன்றி இனி வெற்றுப் பக்கங்களை தேர்ந்தெடுக்கமாட்டேன் Arulghsr (பேச்சு) 04:08, 4 மார்ச் 2016 (UTC)

தமிழ்க் கலைக்களஞ்சியம் நூலை துப்ரவு தொடர்பாக[தொகு]

பயனர்:Tshrinivasan, பயனர்:Balajijagadesh, பயனர்:Info-farmer கவனத்திற்கு விக்கி மூலத்தில் உள்ள தமிழ்நாடு அரசால் வெளியடப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் நூலை மெய்ப்புப் பார்க்க விரும்பி அந்தப் பக்கத்துக்குச் சென்றேன். அதில் உள்ள ஒளிவருடல் பக்கங்களில் இருந்து தானியக்கமாக பக்கங்கள் உருவாக்கப்படவில்லை வெற்றுப் பக்கங்களாகவே உள்ளன. இவற்றை உருவாக்கினால் அதை மெய்ப்பு பாக்க உதவியாக இருக்கும். மேலும் அந்த நூலின் அனைத்து பக்கங்களும் அதில் இருப்பாத தெரியவில்லை. எனவே தேவையானதை செய்தால் அதை மெய்ப்பு பார்க்க இயலும் மேலும் அந்த நூலில் உள்ள கட்டுரைகளைக் கொண்டு பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் சுலபமாக உருவாக்க வழியேற்படும். நன்றி--Arularasan. G (பேச்சு) 05:08, 24 டிசம்பர் 2018 (UTC)

எந்த நூலை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இணைப்பு இருந்தால் கொடுக்கவும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:16, 29 டிசம்பர் 2018 (UTC)
ஜெ. பாலாஜி (Balajijagadesh) இந்த நூலைக் குறிப்பிடுகிறேன். --Arularasan. G (பேச்சு) 13:27, 3 ஜனவரி 2019 (UTC)
இந்நூலில் இரண்டு செங்குத்து வரிசை இருப்பதால் தானியக்க மெய்ப்பு செய்ய முடியவில்லை. அதனால் தட்டச்சு செய்ய வேண்டி வரும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 10:23, 3 மார்ச் 2019 (UTC)
மேற்கண்ட கோப்பினை இப்படி [3] இரண்டாக பிரித்து விட்டால் செய்ய முடியுமா ? -- Guruleninn (பேச்சு) 16:19, 3 மார்ச் 2019 (UTC)
@Guruleninn: நல்ல யோசனையாக உள்ளது. இந்நூலைப் பயன்படுத்தி செய்யமுடியும். முயற்சி செய்துபார்க்கலாம். உங்களுக்கு OCR4wikisource நிரலை பயன்படுத்த தெரியுமா? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:21, 26 மார்ச் 2019 (UTC)

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள் உள்ள புத்தகங்களை எப்படி மெய்ப்பு செய்வது விளக்கப்பட்டுள்ளது.

வணக்கம். தாங்கள் மிகுந்த சிரத்தையுடம் அட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf மெய்ப்பு செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். குறிப்புகள் வரும் இடங்களில் superscript பயன்படுத்துவது சரி வராது. transcription செய்யும் பொழுது இடர் வரும். அதனால் குறிப்புகளுக்கு ref tag பயன்படுத்த வேண்டும். மேலும் reflist கீழடியில் இட வேண்டும். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். மேலும் விளங்களுக்கு இக்காணொளியைப் பார்க்கலாம். மேலும் விக்கிமூலம்:உதவிக் காணொளிகள் தங்களுக்கு மெய்ப்பு செய்ய உதவியாக இருக்கும். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 05:27, 26 மார்ச் 2019 (UTC)

ஜெ. பாலாஜி (Balajijagadesh) புரிந்துகொண்டேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 13:59, 26 மார்ச் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Diligence Hires.png விடாமுயற்சியாளர் பதக்கம்
சீர்மிகு சிவகங்கைச் சீமை என்னும் நூலை மெய்ப்பு செய்ததற்காக இந்த விருது. நன்றி. --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 15:39, 28 சூன் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் வழங்கிய ஜெ. பாலாஜி (Balajijagadesh)க்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 09:36, 29 சூன் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Wikisource Barnstar Hires.png பக்க ஒருங்கிணைவு பதக்கம்.
அண்டார்க்டிக் பெருங்கடல் என்னும் நூலை கவனமாக தவறின்றி பக்க ஒருங்கிணைவு செய்ததற்காக இப்பதக்கம். நன்றி --ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 16:58, 4 சூலை 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் வழங்கிய ஜெ. பாலாஜி (Balajijagadesh)க்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 01:12, 5 சூலை 2019 (UTC)

சங்க இலக்கியத் தாவரங்கள்[தொகு]

தாங்கள் அட்டவணை:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf என்னும் மின்னூலை மெய்ப்பு செய்ய எண்ணியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். அந்நூலில் அச்சு பக்க எண் 297 298 மின்வருடப்படவில்லை, விடுபட்டுள்ளது. அதனால் நூல் முழுமையாக இல்லை என்பதை கவனித்தில் கொள்ளவும். அதனால் அந்நூலில் 'சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள் ' என்னும் பகுப்பையும் கவனிக்கலாம். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 13:31, 26 செப்டம்பர் 2019 (UTC)

Balajijagadesh நானும் இதை கவனித்தேன் மிகச் சிறப்பான இந்த நூலை மெய்ப்பு செய்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். எங்கள் ஊர் நூலகத்தில் இந்த நூல் உள்ளதா என்று பார்க்கிறேன். இருந்தால் அந்த இரு பக்கங்களை ஒளிப்படம் எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன் அப்பக்கங்களை சேர்த்துவிடுங்கள். இதனால் நூல் முழுமையடையும்.--அருளரசன் (பேச்சு) 14:12, 26 செப்டம்பர் 2019 (UTC)

சரி. அனுப்புங்கள். சரி செய்துவிடுகிறேன். சென்னையில் யாரேனும் அண்ணா நூலகத்தில் உள்ளதா என்று கூட பார்க்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 14:39, 26 செப்டம்பர் 2019 (UTC)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

விக்கிமூலம்:விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு/விதிகள்[தொகு]

வணக்கம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கு பங்களிக்க முன்வந்தமைக்கு நன்றி. இது இந்திய அளவில் நடைபெற இருக்கும் முதல் போட்டி/தொடர் தொகுப்பு என்பதால் இதன் விதியினை சற்று நன்கு கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி Sridhar G (பேச்சு) 07:03, 29 ஏப்ரல் 2020 (UTC)

தொடர்தொகுப்பு[தொகு]

வணக்கம் தாங்கள் ஒவ்வொரு பத்திக்கும் இடையில் இரு வரி இடைவெளி விடுவதன் காராணத்தை அறியலாமா? ஒரு வரி இடைவெளியே போதும் தானே? மேலும் பக்கத்தின் இறுதியில் nop வார்ப்புரு அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தின் இருதியில் 2 வரிகளை விடவும். காண்க {பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி. 15& 16) நன்றிSridhar G (பேச்சு) 10:23, 1 மே 2020 (UTC)

Sridhar G நான் ஒவ்வொரு பத்திக்கும் இடையில் இருவரி இடைவெளி விடுவதன் காரணம் இடைவெளி நன்கு தெரியவே அது தேவையில்லை எனின் ஒரு வரியையே இடைவெளியாக விடுகிறேன். மேலும் அனைத்து பக்கங்களின் இறுதியில் nop வார்ப்புரு அல்லது அடுத்த பக்கத்தின் துவக்கத்தின் இருதியில் 2 வரிகளை விடுவது தேவையில்லை. பக்கத்தின் முடிவில் அந்தப்பத்தி முடிந்து அடுத்த பக்கத்தில் புதிய பத்தி துவக்கினால் மட்டுமே அவ்வாறு செய்யவேண்டும். உரிய விளக்கத்தை எதிர்பார்கிறேன் நன்றி --அருளரசன் (பேச்சு) 10:38, 1 மே 2020 (UTC)

வணக்கம் இங்கு பாலாஜி குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்கவும். நான் மேலே குறிப்பிட்டுள்ள இரு பக்கங்களும் புதிய பத்திகள் தானே? நான் கூறுவது சரியா ? தவறு எனில் எனது பக்கங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அதற்காகவே தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன். நன்றி Sridhar G (பேச்சு) 10:51, 1 மே 2020 (UTC)

வணக்கம் Sridhar G {பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி. 15& 16) 15ஆம் பக்கத்தின் இறுதிப் பத்தியின் தொடர்ச்சிதான் 16ஆம் பக்கத்தின் துவக்கத்தில் வருகிறது--அருளரசன் (பேச்சு) 11:03, 1 மே 2020 (UTC) நன்றி Sridhar G (பேச்சு) 11:04, 1 மே 2020 (UTC)

தில்லைப் பெருங்கோயில் வரலாறு: வணக்கம். நீங்கள் கூறியுள்ளபடி செய்து பார்த்தேன். பக்கம் 72இல் சரியாக வரவில்லை. (- 34) அந்த சிறப்பு எழுத்து எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? மேலும், செய்யுளில் :: வார்ப்புறு போட்டாலும் இரண்டு இடம் தள்ளி வருகிறது. இதைப் பயன்படுத்தலாமா? விளக்கம் தேவை. மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி. --Vasantha Lakshmi V (பேச்சு) 07:25, 8 மே 2020 (UTC)

Vasantha Lakshmi V இணக்கம் நீங்கள் பக்கம் 72இல் சரியாக வரவில்லை. என குறிப்பிட்டிருந்தீர்கள் அது 71 ஆம் பக்கம் எனக் கருதுகிறேன். நானும் முயன்று பார்த்தேன் சரியாக வரவில்லை. சில பக்கங்களில் கண்ணுக்குத் தெரியாத சில சிக்கல்களால் இவ்வாறு நேர்வதுண்டு. 72 ஆம் பக்கத்தில் நான் செய்த மாற்றம் சரியாக வருகிறது. சரியாக வரும் பக்கத்தில் இவ்வாறு செய்யவும் பிறவற்றில் வேறு முறையில் செய்யலாம் என கருதுகிறேன். (- 34) அந்த சிறப்பு எழுத்து எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? என கேட்டிருந்தீர் சிறப்பு எழுத்துருக்களுக்கு திருத்தும் பகுதிக்கு மேலே உள்ள சிறப்பு எழுத்துருக்கள் என்பதை சொடுக்கி அதில் தமிழ் எத்பதை தேர்ந்தெடுத்தால் தமிழ் எண்கள் கூட்டெழுத்துகள் போன்றவற்றை சொடுக்கி பயன்படுத்த இயலும்- நன்றி-அருளரசன் (பேச்சு) 07:49, 8 மே 2020 (UTC)

நன்றி. --Vasantha Lakshmi V (பேச்சு) 08:10, 8 மே 2020 (UTC)

நன்றி[தொகு]


Sridhar G (பேச்சு) 14:31, 14 மே 2020 (UTC)

புதிய உள்ளடக்கம்[தொகு]

புதிதாக உள்ளடக்கத்தை உருவாக்கும் பொழுது, முன்னுரை, அணிந்துரை போன்றவற்றைக் கூட தனி துணைப் பக்கத்தில் உருவாக்கலாம். அதனால் முதல் பக்கத்தின் அளவு குறைந்து விரைவாக உலவியில் ஏறும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 04:22, 2 சூன் 2020 (UTC)

தனியுதவி[தொகு]

ஒரு நூலினை மேம்படுத்த அவ்வப்போது ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருவது போல, நானும் சில நுட்ப உதவிகளை முடிந்த அளவு பிறருக்காக கற்று செய்து வருவது தங்களுக்கத் தெரிந்ததே. ஒரு கருவி செய்ய வேண்டி இப்பக்கம் (பயனர்:Info-farmer/assistance)அவசியம் தேவை. எனவே உங்கள் பின்னூட்டகளை இடுக.--Info-farmer (பேச்சு) 08:13, 20 சூன் 2020 (UTC)

எழுத்துக்கள் வருமா?[தொகு]

எங்கே போகிறோம்/9. இலட்சிய சமுதாயம் இதனுள் எழுத்துக்கள் வரக்கூடாது. <pages index="" from="" to="" fromsection="" tosection="" /> என்பவை தானே வரணும்? அழைத்தேன் தொடர்பு கொள்ள இயலவில்லை. --Info-farmer (பேச்சு) 03:04, 25 சூன் 2020 (UTC)

கவனியாமல் கூறியிருந்தேன். 2017 ஆம் ஆண்டு ஒரு சோதனைக்காக சீனி செய்திருக்கிறார். அதனை மேற்கூறியபடி மாற்றி அமைக்க வேண்டும்.--Info-farmer (பேச்சு) 07:18, 25 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=1129305" இருந்து மீள்விக்கப்பட்டது