உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2

விக்கிமூலம் இலிருந்து
Comment Due to regulatory concerns and ongoing challenges at the organisational level, we will be pausing the services of the request page until further notice. If you have concerns or questions please contact us at program@cis-india.org.

சான்று: (The notice log)

2019 ஆம் ஆண்டு விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 1 சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த இத்திட்டப்பக்கம் தொடங்கப்படுகிறது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கையை, முதலாம் பயிலரங்கினை நடத்திய, சி. எசு. ஐ. அமைப்பின் விக்கிமூலப் பொறுப்பாளரான, வங்காள விக்கிமூல பங்களிப்பாளரான ஜெயந்த நாத் நடத்த இசைவினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடக்கநிலை கலந்துரையாடல், கூகுள் மின்னஞ்சல்(Gmail) வழியே நடந்தது. இனி இதுகுறித்தவை அனைத்தும் இங்குள்ள உரையாடல் பக்கத்தில் நடைபெறும். பின்னர், மேல்விக்கியில் தமிழ் விக்கிமூல சமூகத்தின் ஒருமித்த எண்ணங்கள் (Tamil Wikisource community consensus) தெரிவிக்கப்படும். கூகுள் மின்னஞ்சலில்(13 Feb 2023) பலர் இணைக்கப்பட்டிருந்நாலும், நான் மட்டுமே உரையாடி இருந்தேன். அவ்வுரையாடல்களை இத்திட்டப்பக்கத்தின் உரையாடலில் காணலாம். இருப்பினும், அதன் முக்கிய கூறுகள் கீழே தரப்படுகின்றன.

நிகழ்விற்கான விதிகள்

[தொகு]
  1. விக்கிமூல ஆலமரத்தடி அறிவிப்பும், பிறரின் எண்ணங்களும் காண்க: விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23 (18 அக் 2022 முதல் 3 நவம்பர் 2022 வரை ஆறு பங்களிப்பாளர்களே தெரிவித்துள்ளனர்.)
  2. பொதுவாக 15 பங்களிப்பாளர்களுக்கே நிதிநல்கை தருவர். இந்திய விக்கிமூலத்தில் நமது சமூகம் பெரியவற்றில் ஒன்று என்பதால், 25 தமிழ் விக்கிமூலப் பங்களிப்பாளர்களுக்குத் தர இசைந்துள்ளனர்.
  3. இப்பயிலரங்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கானது என்பதால், விக்கிமூலத்தில் முதன்மையாக பங்களிப்பவர்களே இதில் தேரந்தெடுக்கப்படுவர். பிற தமிழ் விக்கிமீடியர்களுக்கு முன்னுரிமை வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது.
  4. நிகழ்வில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர், தமது செலவில் உறவினர்களை அழைத்து வருதல் மறுக்கப்படுகிறது. எனவே, தயவுசெய்து தவிர்க்கவும்.

நிகழ்விற்கான விண்ணப்பம்

[தொகு]
  • மேல்விக்கியில் தெரிவித்துள்ள விதிகள் படி தகுதியானவர்கள் 49 பேர்களின் பேச்சுப்பக்கத்தில், விண்ணப்பம் தரப்பட்டுள்ளது
  • 25 பேர்களுக்கு மட்டுமே இப்பயிலரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு தருவர். அதிக நபர்கள் விண்ணப்பித்தால், CIS-A2K குழுவினர் எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே, 15 ஏப்ரல் 2023 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

நிகழ்விடம்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்
  • விக்கிமீடிய கருவி வாக்கெடுப்பில் அனைவரும் தெரிவித்த படி ..

https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.


நிகழ்வு நாள்

[தொகு]
  • விக்கிமீடிய கருவி வாக்கெடுப்பில் அனைவரும் தெரிவித்த படி ..

நிகழ்வு நாள் மே மாதத்தில் நடைபெறும். நிகழ்விடம் தஞ்சாவூராக இருந்தால், தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர், தங்கும் விடுதி ஒதுக்கப்படும் நாள் போன்ற காரணிகளை வைத்தே முடிவெடுக்க இயலும். இத்தகைய கல்வியக அனுமதி கிடைத்தால், நிகழ்வு அன்றே, நூற்றுக்கணக்கான நூல்களையும் பதிவேற்றுதல் எளிது. ஏற்கனவே இதற்குரிய தமிழ்நாடு அரசாணை பெறப்பட்டுள்ளது. காண்க : தமிழ்நாடு அரசின் பொதுக்கள உரிமத்தைக் காண சொடுக்கவும்

நிகழ்வில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

[தொகு]
  • இந்த கூகுள் விண்ணப்பப் படிவத்தினை உருவாக்கித் தந்துள்ளனர். இதன் வழியே விண்ணப்பத்தாரர் தரும் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கின்றனர்.
  • இந்த கூகுள் ஆவணத்தில் படிவம் இட்டவுடன் தானியக்கமாக, ஒவ்வொருவரும் அளிக்கும் புள்ளிவிவரம் தோன்றுமாறு செய்துள்ளனர்.
  • இத்திட்டப்பக்க கலந்துரையாடல் படி பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்புகள்

[தொகு]