உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/141: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
No edit summary
மேலடி
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|௧௩௮ ||முன்னுரை}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
{{rh|௧௩௮ ||முன்னுரை}}{{rule}}

{{gap}}“சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான். ஏனென்றால் கடவுள் அப்படியே நிச்சயம் செய்து விட்டார்". {{Right|- மனு: 1 - 92 - 100.}}
{{gap}}“சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான். ஏனென்றால் கடவுள் அப்படியே நிச்சயம் செய்து விட்டார்". {{Right|- மனு: 1 - 92 - 100.}}
{{gap}}"பிராமணன் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பூஜிக்கத் தக்கவன்” {{Right|- மனு: 9 – 313.}}
{{gap}}"பிராமணன் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பூஜிக்கத் தக்கவன்” {{Right|- மனு: 9 – 313.}}

03:05, 23 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௩௮

முன்னுரை


“சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான். ஏனென்றால் கடவுள் அப்படியே நிச்சயம் செய்து விட்டார்".

- மனு: 1 - 92 - 100.

"பிராமணன் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் பூஜிக்கத் தக்கவன்”

- மனு: 9 – 313.

"சூத்திரன் தன் ஊழியத் தொழிலைவிட வேறு உயர்ந்த வேலைகளை எந்த இடத்தில் செய்யவில்லையோ அந்த இடமே பிராமணர்கள் வசிக்கத் தகுந்த இடம்”

- மனு: 2 - 24.

"சூத்திரன் தன் சாதித் தொழிலைச் செய்யாவிட்டால் அரசன் தண்டனை தரவேண்டும்"

- மனு: 8 - 410.

"பிராமணர் தீச்செயல் புரிந்தாலும் அவர் போற்றுதற்கு உரியவராவர்."

- மனு: 10 - 246.

என்னும் இவ்வறக் கேடான கொள்கை கோட்பாடுகளைத் திருவள்ளுவம் "சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் (972) 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” (505) என்று மறுத்துரைப்பதை உணர்தல் வேண்டும்.

இனி, உழவுத்தொழில் செய்வதை ஆரியம் இழிவு என்பதை அறிக.

'பிராமணர், கூத்திரியர் உழவுத் தொழில் செய்யலாகாது. பயிர்த்தொழில் உயர்ந்தது என்பர். பூமியையும் பூமியில் வாழும் சிற்றுயிர்களையும் கலப்பை, மண்வெட்டியால் கொல்ல நேர்கிறது. ஆதலின் வாழ்வின் பொருட்டாக பிராமண, ௯த்திரியர் ஆட்களை அமர்த்தியே உழவு செய்க.

- மனு: 11 - 52.

ஆனால், திருவள்ளுவம் - தமிழியல் - உழவுத் தொழிலையே மேம்பாடான தொழில் என்று போற்றுகிறதை நாம் அறிவோம்.

'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; அதனால்

உழந்தும் உழவே தலை'

— 1031.

'உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது