பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குமரிக் கோட்டம்


அவருக்கு. சாதாரணமாகப் பல ஆடவருக்கு உள்ள குறும்புப் பார்வை, குத்தலான பேச்சு இவை கிடையா. "மிஸ்டர் பழனி" என்று நான் தைரியமாக அவரைக் கூப்பிடுவேன். அவரோ நாகவல்லி என்றுகூடத் தைரியமாக என்னைக் கூப்பிடமாட்டார். புன்சிரிப்புடன் என் அருகே வருவார். அவ்வளவு சங்கோஜம். ஆனால், அவருடைய காதலைக் கண்கள் நன்றாக எடுத்துக் காட்டியபடி இருந்தன. துணிந்து ஒரு தினம் கேட்டார், நான் திடுக்கிட்டேன்; அவர் கேட்டாரே என்பதால் அல்ல. அந்தக் கேள்வி என் மனத்திலே எழுப்பிய களிப்பைக் கண்டு!

"நான் என்ன ஜாதி? நீங்கள் சைவச்செட்டிமார் குலம்!" என்று நான் கூறினேன். அவர், நான் அடிக்கடி சங்கத்திலே ஜாதியைக் கண்டித்துப் பேசுவேனே, அந்த வாதங்களை அழுத்தந் திருத்தமாகக் கூறினார். அன்று மாலை மணி ஆறு இருக்கும். அம்சா! என்ன இருந்தாலும் இந்த ஆண்களே கொஞ்சம் அவசரக்காரர்கள்தான். பேச்சு நடந்துகொண்டே இருக்கையில் அவர், திடீரென்று என்னை ஆரத்தழுவிக் கொண்டார். எதிர்ப்பவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் திறமைகொண்ட நான், பைத்தியம் போல 'ஐயோ! விடுங்கள் ! யாராவது வந்துவிட்டால்!' என்று குழைந்து கூறினேன். நல்லவேளை, பழனி, என் பேச்சைக் கேட்கவில்லை ! எமது அதரங்கள்... ........ ....சகஜந்தானடி! பிறகு அவர் ஒவ்வொரு மாலையும் வர ஆரம்பித்தார். காலையிலே நான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதெல்லாம் அன்று மாலை அவர் என்ன பேசுவார்,