பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

குமரிக்கோட்டம்


அல்ல. நட வீட்டைவிட்டு,' என்று கூறிவிட்டாராம். பழனி எங்கள் கிராமத்துக்கே வந்து விட்டார். இரண்டு மைல்தான் இருக்கும் தாழையூருக்கும் சிங்காரபுரிக்கும். ஆனால் இரண்டு மைலை அவர் தாண்டும்போது, ஒரு உலகத்தை விட்டு மற்றோர் உலகுக்கே வந்து சேர்ந்தார் என்றுதான் பொருள். அடி அம்சா! அந்த உலகிலே, என் காதலருக்கு மாளிகை இருக்கிறது, வைரக்கடுக்கண் இருக்கிறது. தங்க அரைஞாண் இருக்கிறது, இரும்புப் பெட்டியிலே இலட்சக் கணக்கிலே கொடுக்கல்வாங்கல் பட்டி இருக்கிறது, இரட்டைக் குதிரைச்சாரட்டும், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஆட்களும் உள்ளனர். இரண்டே மைல் தாண்டி இங்கே வந்தார்; என்ன இருக்கிறது? என்னுடைய பழைய வீடு ! தோட்டத்திலே பூசினிக்கொடி! தெருக்கோடியில் ஒரு வெறி நாய், இவ்வளவு தான் !

'கண்ணாளா ! என் பொருட்டு ஏனோ இந்தக் கஷ்டம்?' என்று நான் கனிவுடன் கேட்டேன். அவரோ, 'ஒருவருடன் வாதாடிப் பாதி உயிர்போயிற்று, இனி உன்னிடமும் வாதாட வேண்டுமா? என்று கேட்டார். எவ்வளவோ செல்வத்தை என் பொருட்டுத் தியாகம் செய்த அந்தத் தீரரை நான் என்ன போற்றினாலும் தகும். என் அன்புக்கு ஈடாகாது அந்த ஐஸ்வரியம் என்றார்; என் கண்ணொளி முன்வைரம் என்ன செய்யும் என்று கேட்டார்; உன் ஒரு புன்சிரிப்புரிக்கு ஈடோ, என் தகப்பனாரின் பெட்டியிலே கிடக்கும் பவுன்கள் என்றார்; ஒவ்வொரு வாசகத்துக்கும் முத்தமே முற்றுப்புள்ளி! காதலர் இலக்கணம்