பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குமரிக் கோட்டம்


ஏற்பட்டதில்லை காதல்; உனக்குத்தானே முதலிலே உதித்தது அந்தக் காதல், என் உயிருக்கு உலைவைக்க."

"நான் தங்கள் வார்த்தையை எப்போதாவது மீறி நடந்ததுண்டா?"

"மீறி நடப்பவன் மகனாவானா?"

"இது எனக்கு உயிர்ப்பிரச்னையப்பா!"

"படித்ததை உளறுகிறாயா? இல்லை அந்தக் கள்ளி கற்றுக்கொடுத்த பாடத்தை ஒப்புவிக்கிறாயா? எனக்குக் கூடத் தெரியுமடா, அழுவதற்கு! தலைதலை என்று அடித்துக்கொண்டு, ஒரு திருஓட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு எங்காவது தேசாந்திரம் போகிறேன். நீ திருப்தியாக வாழ்ந்துகொண்டிரு அந்தத் திருட்டுச் சிறுக்கியுடன். ஈஸ்வரா! எனக்கு இப்படி ஒரு மகன் பிறக்கவேணுமா, மானம் போகிறதே! தாழையூரிலே தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லையே. அடே ! நீ அவளைக் கலியாணம் செய்துகொள்ளத்தான் வேண்டுமா? ஒரே பேச்சு, சொல்லிவிடு: "என் சொல்லைக் கேட்கப்போகிறாயா, இல்லை, அவளைத்தான் கலியாணம் செய்தாகவேண்டும் என்று கூறுகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லிவிடு."

"நான், நாகவல்லியைத் தவிர வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள முடியாதப்பா."

"செய்து கொண்டால் அவளைக் கலியாணம் செய்து கொள்வது, இல்லையானால் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடப் போகிறாயா? சரி ! நீ பிரம்மச்சாரியாகவே இருந்து தொலை. உனக்கே எப்போது பித்தம் குறைகிறதோ, அப்போது பார்த்துக்கொள்வோம்......"