பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

19


கொண்டு நின்று கேலியாகச் சிரிப்பது போலத் தோன்றிற்று. திடசித்தத்துடன், மகனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டாரே தவிர, மனம் கொந்தளித்தபடி இருந்தது; அவரையும் அறியாது அழுதார். ஆனந்த பாஷ்பம் என்றனர் அன்பர்கள் !

🞸 🞸 🞸

வெள்ளிக்கிழமை, பழனி—நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய்ச் செலவில் விமரிசையாக நடைபெற்றது. ஜில்லா ஜட்ஜு ஜமதக்னி தலைமை வகித்தார்.

பச்சை, சிகப்பு, ஊதா, நீலம் முதலிய பல வர்ணங்களிலே பூ உதிர்வதுபோன்ற வாண வேடிக்கை! அதிர் வேட்டு, தாழையூரையே ஆட்டிவிடும் அளவுக்கு. அழகான தங்கநாயனத்தை அம்மையப்பனார் ஆறுமுகம் பிள்ளை, வைரமோதிரங்கள் பூண்ட கரத்திலே ஏந்திக் கொண்டு, தம்பிரான் கொடுத்த தகட்டியை, ஜெமீன்தார் ஜகவீரர் பரிசாகத் தந்த வெண்பட்டின்மீது அழகாகக் கட்டிவிட்டு, ரசிகர்களைக் கண்டு ரசித்து நிற்க, துந்துபிகான துரைசாமிப்பிள்ளை, "விட்டேனா பார்" என்ற வீரக் கோலத்துடன் தவிலை வெளுத்துக் கொண்டிருந்தார். பவமறுத்தீஸ்வரர் பிரம்மோத்சவத்தின் ஆறாம் திருவிழாவன்று. அன்று, உபயம், ஒரே மகனையும் துறந்து விடத் துணிந்த உத்தமர் குழந்தைவேல் செட்டியார் உடையது. அன்று மட்டுமல்ல, செட்டியார் ஒவ்வோர் நாளும் அது போன்ற ஏதாவதோர் "பகவத்சேவா" காரியத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணமும், பகவானுடைய சேவையினால் மளமளவென்று