பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

மெய்ப்பொருள்காட்டி உயிர்களுக்கு அரனாகி துக்கம் கெடுப்பது நூல்"

இவர்கள். துறவறமே பெரிதாக நினைத்திருக்கிறார்கள். துறவறமே உயழந்தது என்று சொல்லியிருக்கிறார்கள், முக்தி தேடுவதே வாழ்க்கை என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஜைன இலக்கியத்தினுடைய தனித்தன்மை என்ன என்று கூறினால் அது பல்வேறு மொழி பேசுகின்றவர்களுக்கு மத்தியிலேயும் பல்வேறுபட்ட பண்பாடு உடையவர்களுக்கு மத்தியிலேயும் கூட பொதுமையான ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடிய அற அடிப்படையுடையதாக இருக்கிறது. ஏனென்றால் ‘சமணர் கோட்பாடுகள், பொதுவானவையாக அமைந்திருக்கின்றன. ஒழுக்க நெறியாகச் சிந்திக்கிற இயல்பினை தமிழ் இலக்கியப் போக்குக்கு இந்தச் சமண இலக்கியங்கள் தந்திருக்கின்றன. மெய்ஞ் ஞானத்தையும் விஞ்ஞான செய்திகளையும்இந்தச் சமண இலக்கியங்கள் தந்திருக்கின்றன. அற்புதமான விஞ்ஞானச் செய்திகளை எல்லாம் நீலகேசியிலே நீங்கள் பார்க்கலாம். சூரியனுடைய ஒளிக்கதிர்மேல் மழைத்துளி படுகிற பொழுது வானவில் தோன்றுகிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. இந்த விஞ்ஞானத்தை நீலகேசியும் சொல்கிறது.

"முகிலின் கண் உள்ள நீர்த்துளிகளிலே ஞாயிற்றின் கதிர்கள் படும்பொழுது, வானவில் தோன்றுகிறது" என்று நீலகேசி சொல்கிறது.

அதுமட்டுமல்ல ஒலி என்பது மெதுவாக வருவது ஒளி என்பது வேகமாக விரைந்துவரும். சப்தமோ கொஞ்சம் சாதாரணமாக, தாமதமாக வரும். இந்தச் செய்தி விஞ்ஞானச் செய்தி, விஞ்ஞானச் செய்தியை நீலகேசி விளக்குகிறது: