பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அரசியல் நோக்கமே முதன்மைக் காரணம், அரசியலுள் அடங்கிவிட்ட பொருளியல் நோக்கம் அடுத்த முதன்மைக் காரணம்.

பேரரசைத் தோற்றுவித்து விரிவுபடுத்தும் முடிவாக இலட்சியத்துக்காகவே இன்ன பிற எல்லாம் செய்யப்பட்டன.

அரசியல் உள்நோக்குக் கொண்ட ஐரோப்பியர்களுக்கு மதம் பரப்புதல் ஏன் நோக்கமாக இருந்தது என்பது விளங்காத புதிரே இதற்கு ஒரு சில விடைகள் உள்ளன.

1. இந்தியாவில் முதன்முதல் போர்ச்சுகீசியரால் அறிமுகமானவர் கத்தோலிக்கக் கிறித்தவர். ரோமைத் தலைமையாகக் கொண்ட கத்தோலிக்கர்களுக்கு அரசன் வேறு. போப்பாண்டவர் வேறு அல்லர் மிக அண்மைக் காலம் வரை போப்பாண்டவரே அரசராக இருந்தார், அரசரே போப்பாக இருந்தார், எனவே ஆட்சி என்ற நாணயத்தின் ஒரு பக்கமாக அரசும் மறுபக்கமாக மதமும் இருந்தன. எனவே ஐரோப்பியரின் இந்திய நுழைவு அரசியல் நுழைவாகவும் இருந்தது. அதே சமயத்தில் மத நுழைவாகவும் இருந்தது:

2. ஐரோப்பிய வணிகர் ஏறத்தாழ பத்தாயிரம் கல் தாண்டி ஆறு மாதங்களுக்கும் மேலாக நெடுங்கடல் பயணம் செய்து இந்தியா வந்து சேர்ந்த நூற்றுக் கணக்கான, அடுத்து


• போப்பாண்டவரால், சற்றுப் பிற்காலத்திலேயே நேர் முகமாக, சமய வாணர்கள் அனுப்பப்பட்டனர். போப்பால் அனுப்பப்பட்டோருக்கும் போர்ச்சுகீசிய மன்னரால் அனுப்பப்பட்டவர்க்கும் பெரும் கருத்து வேறுபாடிருந்தது. போப்பாண்டவரால் அனுப்பப்பட்டதே நோபிலி போன்றோர், இந்தியப் பண் பாடு, மொழி போன்றவற்றை மிக உயர்வாக மதித்துப் போற்றினர்.