பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

"தேனைக் குங்குமங்கள் சிந்திச் செழித்ததின் புயத்து வள்ளல் கானைக்குவ்விடத்திற் காட்டும் கமல மென்பதத்தைப் போற்றித்
தானைக்கும் பதிக்கும் யானே தலைவனென் பவர் போல் வேடன்
மானைக்கொண் டுவரப்போய் ஈமானைக் கொண்டகத்திற் புக்கான்"

வேடன் "மானைக் கொண்டு வரப் போய் ஈமானைக் கொண்டு வந்தான்" என்பது நயம் நிறைந்தது. இவ்வாறு தொட்ட இடமெலாம் இனிக்கும் சிறப்புப் பெற்றது சீறாப் புராணம்.

சீறாப்புராணத்தில் பெருமானாரின் வாழ்க்கை வரலாறு முழுமை பெறவில்லை. உறனிக் கூட்டத்தார் படலத்தோடு உமறு சீறாவை முடித்துவிட்டார். பதினெட்டாம் நூற்றாண்டினராகிய பனீ அகுமது மரைக்காயர் என்பவர் சின்ன சீறாவை 1829 விருத்தங்களில் பாடி பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமை பாக்கினார். நாயகமவர்களின் ஆட்சிச் சிறப்பு இசுலாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு பல மன்னர்கட்கும் கடிதம் அனுப்புவது விதவைகளை மணத்தல் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் இக்காப்பியத்தில் விரிவாகப்பேசப்பட்டுள்ளன.

சேகனாப் புலவர் என்றழைக்கப்படும் செய்கப்துல் காதிர் நயினார் என்பார் காப்பியம், புராணம் சிற்றிலக்கியங்கள் என பல்வேறு துறைகளில் தன் முத்திரையைப் பதித்துள்ளார். புதுக்குஷ்ஷாம், குதுபுநாயகம், திருமணி மாலை, திருக்காரணப் புராணம் எனும் பெரும்காப்பியங்ளைப் படைத்துள்ளார். புதுக்குஷ்ஷாம் என்பது புதுாஹ் ஷாம என்னும் இரு சொற்களின் இணைப்பாகும் புதுாஹ்-