பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

நினது வழியே நடக்க நினது பெயரே வழுத்த
நினது புகழே படிக்க—மறையோதி
நினது ஜெபமே ஜெபிக்க நினதடிமையாகி நிற்க
தினது பதமே துதிக்க—அதனாலே
எனது பவமே துடைக்க எனது மனமே கெடுக்க
எனது பகையே துடைக்க—ஒழியாத
எனது கலியே கெடுக்க எனது துயரே தணிக்க
எனது வசமே கடைக்கண்—அருள்வாயே!

இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள் முற்றிலுமே மார்க்க நெறிகளை எடுத்துரைப்பனவாயிருப்பதால் அவற்றில் அரபி பார்சிச் சொற்களும், இஸ்லாமிய மார்க்கக் கருத்துகளும் விரவி வருகினறன. இஸ்லாமியர் அல்லாத தமிழரிடத்தில் இவ்விலக்கியங்கள் அதிகம் பயிலாமைக்கு இது முக்கிய காரணமாகும். தக்கடி ஷெய்கு பஸீர் லெப்பை கலீமா அவர்கள் திருத்தூதராம் நபிகள்மீது மெய்ஞ்ஞானச் சதகம் பாடியுள்ளார் அதில் ஒரு பாடல்,

ஆதிநபிக்கும்[1] ஆதிமுதல்
ஆன முர்ஸ் லீன்களுக்கும்
சோதிநபி மாரனை வருக்கும்
தோன்றலாகப் பிறந்தோரை
சாதிஹாஷிம் குலக்கொழுந்தைத்
தக்கோன் கஃபத்துல்லா வாழ்
ஹாதிமுஹம்ம திரசூலைக்
காணும் திருநாள் எந்நாளோ?


  1. * ஆதி நபி ஆதம், மூர்ஸ்லீன்—1,24,000 நபிகளில் 313 பேர் சோதி நபிமார்-1,24,000 நபிகள்.