பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து மூன்றாவது அதிகாரம் FF GIÙ) CH5. அஃதாவது இரங்து வந்தவர் எவர்க்கும் உவந்து கொடுக் கல். பிறர்க்கு இகமாய் உதவி புரிவதே தமக்குக் கடமை என்று கருதி ஒப்புரவு செய்து ஒழுகும் உபகாரிகளிடமே ஈகை இயல் பாய் விளையும் ஆதலால் அதன்பின் இது அமைந்து கின்றது. அன்பும் அருளும் போல் ஒப்புரவும் ஈகையும் உயிர்க்கு இன்ப கலன்களை விளைத்து உயர்வாய் உய்கி புரிந்து வருகின்றன. 221. வள்ளலுயர் பேகன் வறியார்க்கே ஈந்துமயில் கொள்ளவுமேன் தந்தான் குமரேசா-தள்ளும் வறியார்க்கொன் றிவதே ஈகைமற் றெல்லாம் . குறியெதிர்ப்பை நீர துடைத்து. (க) இ-ள். குமரேசா! வறியவர்க்கே கொடுத்து ஒரு மயிலுக்கும் பேகன் ஏன் உதவினன்? எனின், வறியார்க்கு ஒன்று ஈவதே சகை, மற்று எல்லாம் குறி எதிர்ப்பை நீரது உடைத்து என்க. எளியவர்க்கு இரங்கி ஒருபொருளைக் கொடுப்பதே கொடை; வேறு யாவும் பதில் வாவை எதிர்பார்த்துத் தந்தனவே யாம். இன்னவாறு ஈவதே ஈகையாம் என உண்மையான ஈகையின் இலக்கணத்தை இது நன்னயமாய் நன்கு துலக்கியுள்ளது. உணவு முதலிய பொருள்களால் மனித வாழ்வு இனிது கடந்து வருகிறது; அவற்றை வளமாக உடையவர் செல்வர் எனச் சிறந்து நிற்கின்றர்; அவை இல்லாதவர் வறியராய் மறுகியுள்ளனர். உயர்ந்தவர் தாழ்ந்தவர்க்கு உதவி புரிய வேண்டியது மனித தருமமாய் மருவியுளது. அந்த இயற்கை நியமமும் உலகிலேயும் உயிர் வாழ்வின் இயல்பும் ஈண்டு ஒர்ந்து உணர வந்தன. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே. இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே. == (நறுந்தொகை) வறியவர் நிலையையும் செல்வர் கடமையையும் அதிவீர ராம பாண்டியனர் இவ்வாறு அறிவித்துள்ளார். கடன் என்றது கருதி