பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்

பாவம்! அந்தப் பெண் இந்தப் பக்கமாக வந்தால் நாம் மூன்று பேருமாகச் சமாதானப்படுத்தி யாரென்று விசாரிக்கலாமே ?” என்று அநுதாபத்தோடு சொன்னார்கள் சக்கசேனாபதியும் இராசசிம்மனும்.

“அவளைப் டார்த்தால் வெகு தொலைவிலிருந்து வந்த வேற்று நாட்டுப் பெண் மாதிரி இருந்தது. அதனால்தான் நான் உதவி செய்யப்போனேன், அந்த முரட்டுத் துணிக்ச்சல்காரி என் மேலேயே சந்தேகப்பட்டுவிட்டாள்” என்று கூறிக் கொண்டே, இருண்ட மூலை ஒன்றில் சாய்ந்துகொள்ளப் போனார் புத்தபிட்சு

கருநாகம் இருந்த செய்தியைச் சொல்லி அவரை எச்சரித்தர்கள் அவர்கள். பிட்சு சிரித்தார். “நாமாக ஏற்படுத்திக் கொள்கிற பயங்கள்தான் வாழ்க்கையின் துன்பத்தை வளர்ப்பன. தூங்கும்போது என் உடல் பற்றிய நினைவு எனக்கு உரிமை இல்லை: ஆகவே நான் பாம்பைப் ப்ற்றிக் கவலைப்படுவ்தில்லை. அது என்னைத் தீண்டும் உரிமை பெற்றிருந்தால் அதைத் தடுக்க நான் யார்?” என்று கணிரென்று பதில் சொன்னார் அவர் கால் நாழிகைக்குப் பின் பிட்சு நன்றாகத் தூங்கும் குறட்டை ஒலி கேட்டது. இருந்த பாம்பு போன பின்பு இல்லாத பாம்பை நினைத்துத் தூங்காமல் விழித்திருந்த அவர்கள் இருவருக்கும் அவர்மேல் பொறாமையாக இருந்தது'அவ்வளவு தூய்மையார் துறவி மேல் சந்தேகப்பட்ட பெண்ணை மனத்தில் சபித்தார்கள் அவர்கள். மழையும் தனியவில்லை , காற்றும் தணியவில்லை . எங்கே ஒரு மூலையில் ஏரி உடைத்துக் கொண்டு தண்ணீர் பாய்கிற ஓசையை அவர்கள் கேட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் பயங்கர ஒலமும் எழுந்தது. சக்கசேனாபதி பிட்சுவை எழுப்பி அந்த ஒலத்தைக் கேட்கச்சொன்னார். சிறிது நேரம் உற்றுக் கேட்ட பிட்சு “அவளுடைய குரல் போலத்தான் இருக்கிறது” என்று தீர்மானமாகச் சொன்னார்.


7. இருளில் எழுந்த ஒலம்

“பிட்கவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். மூன்று பேரூறாக ஓடிப்போய்ப் பார்க்கலாம். அந்த அறியாப்பெண்