பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5818 கம்பன் கலை நிலை

<article>

உள்ளம் அனுவும் மாசு படாது" என்று இக்கற்பரசி அம்புதமாப் பேசியருளினாள். மொழிகளில் வீர ஒளிகள் வீசி நின்றன.

நீயும் நின்கிளையும் மற்றிந் நெடுகில வரைப்பும் நேரே

மாயினும் முறைமை குன்ற வாழ்வெனே வயிரத்திண்டோள்

ஆயிர நாமத் தாழி அரியினுக்கு அடிமை செய்வேன்

நாயினை நோக்கு வேனே? நாண் துறந்து ஆவி நச்சி. (1)

வரிசிலை ஒருவன் அல்லால் மைந்தர்என் மருங்கு வந்தார்

எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற

அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்குத் தின்னும்

நரியொடும் வாழ்வது உண்டோ? கநாயினும் கடைப்பட்டோனே!

(இராமா, மாயாசனகன், 67, 68)

மானவீரமாய்ச் சானகி பேசியுள்ள இந்த உறுதிமொழிகளின் அரிய மேன்மைகளை ஊன்றி உணர்பவர் யாவரும் இப்பத்தினியின் உள்ளத் துணிவையும் உத்தம நீர்மைகளையும் நன்கு தெளிந்து கொள்வர். பெண்மை உலகத்திற்கு இந்த இரண்டு கவிகளும் உண்மை ஒளிகளாய் ஒங்கியுள்ளன. நிறைகாக்கும் காப்பின் நிலைமை இங்கே தலைமையாய் நன்கு நிலவி கிற்கிறது.

இத்தகைய உத்தமக் கற்பரசியைத் தனக்கு இனிய மனைவியாப் பெற்றமையால் இராமன் எத்தகைய நிலையிலும் சிங்கம்போல் தலைநிமிர்ந்து நடந்து யாண்டும் திவ்விய மகிமைகள் தோய்ந்து எவ்வழியும் செவ்விய வீர மூர்த்தியாய் நிற்கின்ன்றான்.

இராமாயணத்தின் கதாநாயகனப் இராமன் தலைமை எய்தி யிருத்தல்போல் அக்காவியத்தின் சீவிய கதாநாயகியாய்ச் சீதை யும் சிறந்து கிற்கின்ருள். சிறை இருக்கவளுடைய சீர்மை நீர்மை கண்த் துறைகள்தோறும் திலக்கி வருவதே இராம காவியத்தின் முறை என்பது முனிவர்கள் முடிபு. இந்தப் பெண்ணாசியின் கற்பும் தவமும் அற்புத அதிசயங்களே விளத்து வந்துள்ளன. அந்த வரவு கிலைகளை உறவான குறிப்புகள் உணர்த்தி கிற்கின் றன. விழுமிய பெண்மை உண்மையாய் ஒளி வீசியுளது. தொழுகின்ற கன்னலத்துப் பெண்ணரசி,

அழகு இவளேத் தவம்செய்து பெற்றது. குணங்கள் இக்கொம்பினைச் சேர்க் இப்யப் பிணங்குவன. வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்ணள். தி ைஇl L 45 மடக்கைமார்க்கும் சாகர்கோதையர்க்கும் வானத் <footer></footer></article>