பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 11.99

‘ காலேயில் நறுமலர் ஒன்றக் கட்டிய

மாலையின் மலர்புரை சமய வாதியர்

சூலையின் திருக்கலால் சொல்லுவோர்க்கெலாம்

வேலேயும் திரையும்போல் வேறு பாடிலான்.

(இரணியன்வகைப்படலம் 77)

சமயவாதிகளைப் பின்னரும் இன்னவாறு நம்கவி குறித்திருக் ன்ெருர். சூலை=ஒருவகை நோய். திருக்கு=மாறுபாடு. மனக் கோட்டமும் விபரீத புக்கியும் உடையவர் என்றபடி

பாமனுக்கும் உயிர்களுக்கும் உள் ள உறவுமுறையை வேலையும் திரையும் என உணர்க்கியுள்ளார். உவமையின் அமைதியை ஊன்றி நோக்குக.

  • பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்தது

என முன்னரும் சமய உவமை வங்துள்ளமை காண்க.

பேகை பெதும்பை மங்கை மடங்கை அரிவை தெரிவை

எனப் பருவ நிலையில் பலவகை மகளிர் குழுமி யுள்ளமையால் பல திறச் சமயங்கள் உவமையாய் கின்றன.

சமயவாதியர், மங்கையர்க்கும் ; நூல்களோடு பழகி ஒளி மிகுந்து தெளிந்துள்ள அவாது கூரிய அறிவு, வாள்கொண்ட கண்ணுக்கும்; அக்கஞானக்காட்சி, இவருடைய கண்காட்சிக்கும்; தோள் முதலியன, பல செய்வங்களுக்கும்; இராமன், முழுமுதல் கடவுளுக்கும் இங்கே ஒப்பாக வைத் துள்ளமையை உய்த்துணர்க.

அன்னன் என்றது கிருமாலை. அவதார மூர்த்தியாய் முன் னிலையில் வந்துள்ளமையால் இவனது அந்த ஆதிமூல நிலைமை யைச் சேய்மைச்சுட்டால் குறித்தருளினர்.

சமயக்கவர் பாமனை முழுதும் காணமுடியாமல் தத்தமக்கு இயன்றபடி ஒரளவே கண்டு அவ்வளவில் உவந்திருத்தல் போல், மிதிலை மாதர் இராமனது சில அவயவங்களைப் பார்த்தே உள்ளம் பூரித்து இன்டவெள்ளத்தில் ஆழ்ந்து கின்றார்.

சமயச்சார்பின்றி விரிந்த நோக்கத்துடன் பத்தியும் ஞான மும் உத்தம கிலையில் ஒங்கியுள்ள தத்துவ சீலன் ஒருவன் இறை வனே முற்றும் அறிந்து மகிழ் கல்போல், உழுவலன்பும் உயர் பண்


=

  • இந்நூல் பக்கம் 109. வரி 5 பார்க்க.