பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 புதிய சரிப்படுத்த முடியவில்லை! ஸ்பெஷல் நடக்கவில்லை. வாத்தியார் விரோதியானார்; போலீஸ் 'துப்பு' கிடைக்கப் பெற்று சுறுசுறுப்பாயிற்று. வேலப்பனுக்கு ஒரு வருஷம்; தமயந்திக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்!! வாத்தியார் பழி தீர்த்துக் கொண்டார். "தீர்ந்தது வாணவேடிக்கை” என்று கேலி பேசினர் ஜதைகள், திக்கிலொருவராக ஓடினர் எடுபிடிகள். அவனவ னிடம் அசப்பட்டதை அவனவன் சுருட்டிக் கொண்டான். கிராமத்திலே செய்தி பரவி, சொல்லாளைச் செந்தேளாய்க் கொட்டிற்று -மற்றவர்களும் வருந்தினார்கள். சிறையிலே வேலப்பன், வெளியே சென்ற பிறகு, மீண் டும் எப்படி வாழ்க்கையைத் துவக்குவது என்பது பற்றியே எண்ண மனம் இடம் தரவில்லை என்றால், அவன், செல்லி யைத் திருமணம் செய்து கொள்வதுபற்றி எண்ணத்தான் முடியுமா? செல்லியின் உலகத்திலிருந்து வேறு உலகம் வந்தாகி விட்டது- சேற்றிலே விழுந்து விட்டாலும் பரவாயில்லை; மணியை எடுத்துக் சழுவிச் சுத்தமாக்கிவிடலாம். மலக்குழி யில் வீழ்ந்துவிட்டால்?வேலப்பன் மலக்குழியில் வீழ்ந்துவிட்ட வனாக மட்டும் தன்னை எண்ணிக் கொள்ளவில்லை; தானே மலம்:கிவிட்டதாகக் கூறிக் கொண்டான். எல்லா நல்லவை களையும் பெற்றிருந்தேன். இப்போது எல்லாக் குப்பை கூள மும் சேறு சகதியும் நிரம்பிய நாற்றப் பாண்டமாகிவிட்டேன். செல்லியின் உலகம் வேறு என்ற தீர்மான முடிவுக்கு, 'ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை' என்ற தீர்ப்பு கிடைத்த அன்றே வந்துவிட்டான். செல்லிக்குப் பைத்யம் பிடிக்கவில்லை— அதுதான் ஆச்சரியம். அவளுடைய மனதுக்கு இந்தச் சேதி எவ்வளவு பெரிய பேரிடி என்பதை அந்தக் கிராமம் அறியும். வேலப் பன் வேகமாகக் கெட்டு வருகிறால்; என்ற செய்தி கிடைத்த ஒவ்வோர் தடவையும் செல்லி, செத்து செத்துப் பிழைத்து வந்தாள்- ஒரு வருஷம் கடுங்காவல் என்று கேள்விப்பட்ட