பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 113 ஆகுமோ என்ற ஏக்கம் அவரை வாட்டி வதைக்கிறது. பெரிய இடத்திலே நான் வாழ்க்கைப்படுவதைக் கண்ட பிறகாவது அவருடைய மனதுக்கு ஒரு சந்தோஷமும், பெருமையும் கிடைக்கட்டும். என் மருமகன் சாமான்யமானவனல்ல. இந் தக் கிராமத்தையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய அளவு பணம் இருக்கு. படித்திருக்கிறான். நல்ல மனம். பட்டணத்திலே அவனுக்குக் கோட்டைபோல வீடு இருக்கு. மோட்டார் கார் இருக்கு. இப்படிப்பட்ட இடம் கிடைச்சிருக்கு என் மகளுக்கு! அவளோட அழகுக்கும்,குணத்துக்கும் இப்படிப்பட்ட அருமை யான இடம்தான் வந்து வாய்க்கும். பாடுபட்டு, வாயைக் ஈட்டி, வயிற்றைக் கட்டி, என் மகளை நல்லபடியாக வளர்த் தேன்~அவ தங்கக் கட்டி. குணத்திலே! அவளுக்கு இப்படிப் பட்ட இடம்தான் கிடைக்கும் என்று பேசிப்பேசி ஆனந்தப் படுவார். பலகாலமாக மனதை அரித்துக் கொண்டிருந்த துக்கம் தொலையும். கடைசி காலத்திவே கண்களிலே களிப்பு இருக்கும் என்று எண்ணித்தான் செல்லி திருமணத்துக்கு. ஆர்வத்துடன் சம்மதமளித்தாள். 'செல்வி! செல்லி! செல்லி!' என்று பலவகையான— ஆனால் அன்புச் சுருதி குறையாமல், ஓயாமல் கூப்பிடுவான் வடிவேலன். திருமணத்துக்குப் பிறகு, முன்னாலே அவன் கண்டதைவிட அதிகக் கவர்ச்சி அவளிடம் இருப்பதைக் கண்டான்; களிப்புற்றான். அவன் எத்தனையோ முறை, தன் நண்பர்களிடம் வாதாடி இருக்கிறான்; கிராமத்திலே இருக்கிற கவர்ச்சி இங்கே, நகரத்திலே கிடையாது. செடி கொடியிலே இருந்து, மாடு கன்றும் சரி, மக்களும் சரி, அங்கேதான் ஒருவிதமான இயற்கை எழிலுடனும், வளத்துடனும் இருக்க முடிகிறது; 'டவுனில்' எல்லாம் பூச்சுதான். எதிலும் இயற்கை எழில் தங்கி இருப்பதில்லை. பாரேன், வேடிக்கையை! தோட்டத் தில் மலர்ச்செடி வைத்து அழகைக் காண வேண்டும் என்று இல்லாமல், வீட்டின் கூடத்தில், மேடையின் பேரில் கண்ணா புப் பாத்திரத்தில், காகிதப் பூங்கொத்தைச் செருகி வைத்து அழகு பார்க்கிற ரகசிகர்கள்தானே நாமெல்லாம், நகரத்தில்.