பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 119 காரி. மற்றொருத்தி, "போடி, பேசுவது மட்டும்தானா, புருஷன் பெண்ஜாதிகளுக்குள் இருக்கும் வேலை. பேசத் தெரியாவிட்டால் என்னவாம்!” என்று வேறோர் வம்புக் காரி பேசுவாள். "நாட்டுக் கட்டை என்று கேலியாகச் சொல்லுவாள். எனக்கு அதனுடைய பொருள் முன்னாலே தெரியறதில்லே; இப்ப, இவளைப் பார்த்தபிறகு, புரிஞ்சுது..." என்பாள், அவலட்சணத்தை மறைக்க நாளெல்லாம் பாடுபட்டுக் கொண்டு வந்த ஒரு நோஞ்சான். பல வகையால் கண் இருக்கு காது வரையிலே! ஆனா, மிரள மிரள அல்லவா விழிக்கிறாள்! "புருவத்திலே பார்த்தாயடி, எவ்வளவு கத்தை கத் தையா இருக்கு மயிர்-ஆனா,அதை ஒழுங்காக மை தடவி, வைத்திருக்கத் தெரியலையே.." 'அதிக உயரமில்லே; ஒட்டகைச் சிவிங்கை மாதிரி! குள்ள வாத்து மாதிரியுமில்லே, சரியாவ அமைப்புத்தான் இருக்கு. ஆனா, அந்த உடற்கட்டுக்குத் தகுந்த உடை உடுத் தத் தெரியறதா! காளி சிலைக்கு போர்த்தி வைத்திருக்கிறது போல, சேலையைச் சுத்திண்டு கிடக்கறா—பார்க்கச் சகிக் கல்லே...' "கூல்டிரிங்க் கேட்டுட்டு, நான் படாதபாடுபட்டனே, ஒரு நாள்--பத்துத் தடவை, புரியறது மாதிரியா - பிறகு கொண்டு வந்து கொடுத்தா. ஒரு இழவும் புரியல்லே...' 'கிளப்புக்குப் போவமா'ன்னு நான் ஒரு நாள் கேட்டேன். ஏன், ஏன்! இன்னக்கி விட்டிலே என்ன? சமையல் கிடையா தான்னு கேட்டாளே, முண்டம்! கிளப்புண்ணா ஓட்டல்னு எண்ணிக் கொண்டா. பிறகு அவளிடம் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்றது போலச் சொல்லி, வெகு பாடுபட்டு மெம்ப ராக்கினேன்.,, வடிவேலன், வெசுவயஸ் படம் எழுதியிருக்காண்டி! ரொம்ப நன்னா இருக்கு. பார்க்கும்போது, நெருப்பு தம்ம மேலேயே வந்து விழுந்துடுமோன்னு தோணும். அவ்வளவு