பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

... வண்டிக்காரன் மகன்தான்... நான் காவேரியைக் கட்டிக்கொள்ள முடியாதுன்னு சொல்றதுக்குக் காரணம், நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லே... எனக்குக் கல்யாணம் கார்த்தியெல்லாம் இப்போது கிடையாது. எங்க அப்பா படுகிற கஷ்டத்தைப் போக்கியாகணும் முதலிலே. காலம் முழுவதுமா வண்டிக்காரராக இருப்பது... நான் ஒரு பிள்ளை பொறந்துதான் என்ன பயன்?”

“எனக்கு இந்தச் சமாதானமெல்லாம் தேவையில்லே! நானும் காவேரியும் கோலார் பட்டணம் போறோம், அவளோட பெரியம்மா வீட்டுக்கு. மூணு மாதத்திலே வந்து சேருவோம். அதுக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தாகணும்; இல்லையானா நான் தொரே கிட்டவே சொல்லி விடுவேன்.”

அப்போது ஓர் ஆள் ஓடிவந்து “சொக்கலிங்கம்! ஓடியா, ஓடியா... உன் மாமனுக்கு மாரடிச்சுட்டுது... கீழே விழுந்துட்டாரு...” என்று கூவினான்.

ஓடோடிச் சென்ற சொக்கலிங்கம், தன் மாமன் மார்வலியால் துடிப்பதையும், பக்கத்திலிருந்து கொண்டு டேவிட் துரை ஏதோ மருந்து கொடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பதறிப் போனான்.

டேவிட் துரை, கீழ் நாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பேரறிவாளர்; தங்கமான மனமுடையவர்; அவரும் அருணகிரியைப் போலவே மணமாகாதவர்.

அருணகிரி அவரிடம் வேலைக்கு அமர்ந்து முப்பது ஆண்டுகளாகிவிட்டன. ஒரு நாளாகிலும் முகம் சுளித்துக் கொண்டதில்லை. ஒரு பேதமும் காட்டாமல், தமது பங்களாவின் பின்புற விடுதியிலேயே அருணகிரியை இருந்துவரச் செய்தார்.

டேவிட் துரையுடைய வீட்டு விவகாரம் முழுவதையும் கவனித்துக் கொண்டு வந்தான் அருணகிரி. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வோர் ஆள் இருந்தனர் – தோட்ட வேலைக்கு – சமையலுக்கு – கணக்கு எழுத – ஆனால் எல்