பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 129 கள்; பழகி வந்தார்கள் என்று அந்தச் சடையாண்டியே சொன்னானே. அந்தக் காலத்திலே உத்தமியாகவா இருந் திருப்பாள், உங்களோட தர்மபத்தினி?' 'பளார்! பளார்!' என்று அறை விழும் சத்தமும், ஐயோ! ஐயோ!' என்ற அலறலும் கேட்டு, அதுவரை அந்த உரையா டலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த செல்லி, என்ன செய்வ தென்று தெரியாமல், உள்ளே புயல்போல நுழைந்தாள். ஊர்மிளா, வேகமாக வெளியே நடந்தாள்! அடியற்ற நெடும் பனைபோலக் கீழே விழுந்தாள்; வடிவேலனுடைய கால்க ளைப் பிடித்துக் கொண்டு கதறினாள். 'கலியாணத்தின்போது நான் இந்தக் களிப்பு அடைய வில்லை.என்னை இவ்வளவு செல்வத்திலே வைத்தபோதும் சந்தோஷப்படவில்லை. எவ்வளவுதான், என்மீது வெறுப்பு இருந்தாலும், என்மீது அபாண்டம் சுமத்த, என் பெயரைக் கெடுக்க முடியாது. அது ஈனத்தனமான காரியம் என்று சொன்னீர்களே, அதுபோதும் எனக்கு. அந்த ஆனந்தம் எனக்கு வேறு எதிலும் கிடையாது. என்னை நீங்க, அவசரப் பட்டு ஆய்ந்து பார்க்காமத்தான் கலியாணம் செய்து கொண் டிங்க..ஆனா . மேலே எரிகிறவன் சாட்சியாகச்சொல்கிறேன். நான் மாசு மருவற்றவள்--- பழிபாவத்துக்கு பயந்து நடக் கறது, கிராமத்தாருக்கு பரம்பரை பரம்பரையாகப் பழக்கம். வேலப்பனை நான் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்பட் டது நிஜம் - தவம் கிடந்தேன்னுகூடச்சொல்லலாம்-- ஆனா அவரு, தவறான பாதையிலே போயிட்டாரு. தன்னைத் தானே கெடுத்துக்கிட்டாரு. அப்போதே என் மனத்திலே இருந்து போயிட்டாரு... ஒரு தப்பும் ஒரு நாளும் நடந்த தில்லிங்க. ஊர்மிளா இல்லிங்க நானு; ஊர் உலகத்துக்கு மட்டும் இல்லிங்க; உள்ளத்துக்கும் பயந்து நடக்கிறவ. பட்டிக்காட்டா, பட்டினத்திலே வந்ததாலே, உங்களுக்கு மனைவியாக வந்ததாலே, பலமாதிரியான அவமானம் உங் களுக்கு வந்தது; எனக்குத் தெரியும். என்மேலே தப்பு இல் லிங்க, என்மேலே தப்பு இல்லே. இப்பவும் நான் உங்க வாழ்க் பூ-158-வ-5