பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 ஏழை அவன் ஓர் ஏழை—ஏளனத்துக்கு ஆளானவன். 'தொட் உ.து துலங்காது, கெட்டது நல்லது புரியாது, மாடுபோல் பாடுபடுவான், புத்தி கிடையாது' என்று நண்பர்களே நையாண்டி செய்வார்கள். சில வேளைகளில்தான் அவனுக் குக் கோபமும் துக்கமும் பீறிட்டுக் கொண்டு வரும். பொது வாகச் சிரித்தபடிதான் இருப்பான்-உள்ளூர அவனுக்கே, தனக்குப் போதுமான அளவு அறிவுக்கூர்மை இல்லை என்ற எண்ணம்போலும். ஆகவே உள்ளதைத்தானே சொல்கிறார் கள், இதற்காகக் கோபித்துக் கொள்ளலாமா என்று எண் ணித் தனக்குத் தானே சமாதானம் தேடிக் கொள்வான். அவன் ஏழை. ஆனால் ஏழை என்ற நிலையிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும். குடைந்து கொண்டிருக்கும் மனம் கொண்டவன். எதையா வது செய்து எந்தப் பாடாவது பட்டுப் பொருள் பெற வேண்டும்; ஏழ்மையை விரட்டிடவேண்டும்-செல்வவான் ஆகவேண்டும் என்று எண்ணுவான்; கூறுவான். 'வேலையில் சுறுசுறுப்பு இல்லை, செய்வதிலே தவறு கள் ஏற்பட்டுவிடுகின்றன. சுட்டிக் காட்டினால் இளிக்கிறான் அல்லது கெஞ்சுகிறான். தொலைத்து விடலாம் என்றாலோ பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது' என்று முதலாளி கூறுவ துண்டு பலமுறை. அப்போதெல்லாம், ஏழை எல்லப்பன், எப்படிப் பணக்காரவாவது என்று திட்டமிட்டுக் கொண்டு இருந்தான் என்பது பொருள். அதை எப்படி அவன் கூச்சத்தை விட்டு வெளியே கூறமுடியும்? முட்டாள் என்றுகூட ஏசு