பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 ஏழை “ஏது எப்படி என்பது பற்றி உனக்கென்ன கவலை? தொழிலை ஆரம்பிக்க எவ்வளவு பணம் வேண்டும். அதைச் கொல்லு. எப்படியோ பணத்துக்கு வழி செய்து கொள்கி நேன். "எப்படி என்றுதான் கேட்கிறேன். ஆசை காட்டிவிட்டு அதை நம்பி நான் புது முறையை உனக்குச் சொல்லியான பிறகு, நீ கையை விரித்துவிட்டால் என்ன பிரயோசனம். எவருக்கும் சொல்லாமல் உன் மனதோடு அந்தமுறை யைப் போட்டுப் பூட்டி வைப்பதிலே என்ன இலாபம்?' “வீணாக ஏன் வம்பு. உன்னால் மூன்றாயிரம் ரூபாய் முதல் போட முடியுமா, அதைச் சொல்லு.” "போட்டால், என்ன இலாபம் கிடைக்கும்.' "முதல் வருஷத்திலேயே பாத்து ஆயிரம், “மூன்றாயிரம் முதலீடு. பத்தாயிரம் இலாபமா' எந்த மடையன் நம்புவான்?' "நம்பமாட்டான், உன்னைப் போன்றவன். செல்லப் உடனே விவரம் கேட்டுக் கொண்டு காலத்தை ஓட்டமாட்டான். பணத்தை எடுத் துக் கொடு ப்பான்; வேலையை மளமளவென்று ஆரம்பிக்கச் சொல்லுவான். தெரியுமா? பனிடம் ஒரு பேச்சு சொல்லு, "உன்னைத்தான், உபயோகமற்றவன் என்று ஏசி விரட்டிவிட்டானே! இன்னும் எதற்காக அவனுடைய பேச்சு? விட்டுத் தள்ளு. மூன்றாயிரம் வேண்டும். அவ்வளவுதானே. நாலு நாள் பொறுத்துக்கொள்." சரி! உன் பேச்சிலே எனக்கென்னவோ, பலமான நம்பிக்கை ஏற்படுகிறது. இதோ பார், இது ஒரு பிரபலமான அமெரிக்க நிபுணர் தயாரித்த முறை, ஒரு முறை, மகாபலி புரத்துச் சிற்பங்களைப் பார்க்க அந்த அமெரிக்கர் வந்த போது, தற்செயலாக அங்கு போயிருந்த நான், அவருக்கு